கிருத்திவாகேசுவரர் கோயில், சூலமங்கலம்
சூலமங்கலம் கிருத்திவாகேசுவரர் கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும். இது ஒரு தேவார வைப்புத்தலமாகும். [1]
அமைவிடம்
[தொகு]இக்கோயில் தஞ்சாவூர்-கும்பகோணம் சாலையில் அய்யம்பேட்டை அருகே ரயில் நிலைய சாலை அருகே 1 கிமீ தொலைவில் சூலமங்கை என்னுமிடத்தில் அமைந்துள்ளது. சூலத்தேவர் வழிபட்டு சுய உருவம் பெற்றதால் சூலமங்கலம் என்று அழைக்கப்படுகிறது. [2]
இறைவன், இறைவி
[தொகு]இங்கு கோயில் கோயில் கொண்டுள்ள இறைவன் ஸ்ரீகிருத்திவாகேஸ்வரர், கரிஉரித்த நாயனார். இறைவி அலங்காரவல்லி. தாருகாவன முனிவர்களின் செருக்கை அடக்குவதற்காக வேள்வி மூலமாக அனுப்பப்பட்ட யானையின் உடலில் புகுந்து அதனைக் கிழித்து வெளியே வந்ததால் வேழம் உரித்த வித்தகராக இருப்பதால் கிருத்திவாகேசுவரர் என்றழைக்கப்படுகிறார். [2]
சக்கராப்பள்ளி சப்தஸ்தானத் தலம்
[தொகு]சப்தமாதர்கள் வழிபட்ட ஏழு கோயில்களில், சக்கராப்பள்ளி சப்தஸ்தானத் தலமாகக் கோயில்களில், இதுவும் ஒன்றாகும். சப்தமங்கைத் தலங்கள் என்றும் அழைக்கப்படுகின்ற இவை கீழ்க்கண்ட இடங்களில் அமைந்துள்ளன. [3]
- சக்கராப்பள்ளியில் உள்ள சக்கரவாகேசுவரர் கோயில்
- அரியமங்கையில் உள்ள ஹரிமுக்தீஸ்வரர் கோயில்
- சூலமங்கையில் (சூலமங்கலம்) உள்ள கிருத்திவாகேசுவரர் கோயில்
- நந்திமங்கையில் உள்ள ஜம்புகேஸ்வரர் கோயில்
- பசுமங்கையில் (பசுபதிகோயில்) உள்ள பசுபதீசுவரர் கோயில்
- தாழமங்கையில் (தாழமங்கலம்) உள்ள சந்திரமௌலீசுவரர் கோயில்
- புள்ளமங்கை என்றழைக்கப்படுகிற ஆலந்துறைநாதர் கோயில்
கல்வெட்டு
[தொகு]சோழர் கால கற்றளியில் மூன்றாம் குலோத்துங்கன், சுந்தரபாண்டியன், போசள வீரராமனாதன் கல்வெட்டுகள் நிவந்தங்கள் பற்றிய செய்திகளையும், சமூக பொருளாதார வாழ்க்கையையும் குறிப்பிடுகின்றன.[3]
மேற்கோள்கள்
[தொகு]மாநிலம் | |
---|---|
பகுதி | |
திருவையாறு சப்தஸ்தானம் | |
கும்பகோணம் சப்தஸ்தானம் | |
சக்கராப்பள்ளி சப்தஸ்தானம் (சப்தமங்கைத் தலங்கள்) | |
மயிலாடுதுறை சப்தஸ்தானம் | |
கரந்தட்டாங்குடி சப்தஸ்தானம் | |
நாகப்பட்டினம் சப்தஸ்தானம் | |
திருநல்லூர் சப்தஸ்தானம் | |
திருநீலக்குடி சப்தஸ்தானம் | |
திருக்கஞ்சனூர் சப்தஸ்தானம் |
Text is available under the CC BY-SA 4.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.