மாளிகைத்திடல் சுந்தரேசுவரர் கோயில்
மாளிகைத்திடல் சுந்தரேசுவரர் கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும். [1]
அமைவிடம்
[தொகு]இக்கோயில் கும்பகோணம் அருகில் உள்ள பாபநாசம்-திருக்கருக்காவூர் சாலையில் 8 கிமீ தொலைவில் வெண்ணாற்றின் வட கரையின் இடது புறத்தில் உள்ள மாளிகைத்திடல் என்னுமிடத்தில் அமைந்துள்ளது.
இறைவன், இறைவி
[தொகு]இங்குள்ள இறைவன் சுந்தரேசுவரர் ஆவார். இறைவி சௌந்தர்யநாயகி ஆவார். [1]
சப்தஸ்தானம்
[தொகு]திருநல்லூர் சப்தஸ்தானத்தில் இடம் பெறும் ஏழுர்த்தலங்கள் திருநல்லூர், கோவிந்தக்குடி, ஆவூர், மாளிகைத்திடல், மட்டியான்திடல், பாபநாசம், திருப்பாலைத்துறை ஆகிய தலங்களாகும்.[2]
தற்போதைய நிலை
[தொகு]300 ஆண்டுகளுக்கு முன்பு மராட்டியர் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயில் பராமரிப்பின்றி உள்ளது. [1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 கைவிடப்பட்ட சிவன் கோயிலுக்கு உதவ விருப்பமா? திருப்பணிக்காகக் காத்திருக்கிறது பழமையான சிவாலயம்!, தினமணி, 24 அக்டோபர் 2018
- ↑ ஏழுர்த் திருவிழாக்கள், முனைவர் ஆ.சண்முகம், அகரம், தஞ்சாவூர், 2002
மாநிலம் | |
---|---|
பகுதி | |
திருவையாறு சப்தஸ்தானம் | |
கும்பகோணம் சப்தஸ்தானம் | |
சக்கராப்பள்ளி சப்தஸ்தானம் (சப்தமங்கைத் தலங்கள்) | |
மயிலாடுதுறை சப்தஸ்தானம் | |
கரந்தட்டாங்குடி சப்தஸ்தானம் | |
நாகப்பட்டினம் சப்தஸ்தானம் | |
திருநல்லூர் சப்தஸ்தானம் | |
திருநீலக்குடி சப்தஸ்தானம் | |
திருக்கஞ்சனூர் சப்தஸ்தானம் |
Text is available under the CC BY-SA 4.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.