For faster navigation, this Iframe is preloading the Wikiwand page for ராஜ்சமந்து மாவட்டம்.

ராஜ்சமந்து மாவட்டம்

ராஜ்சமந்து மாவட்டம்
राजसमन्द जिला
மாவட்டம்
அடைபெயர்(கள்): இந்தியாவின் பெரிய பளிங்குக் கல் சந்தை
நாடு இந்தியா
மாநிலம்இராஜஸ்தான்
தோற்றுவித்தவர்ராணா ராஜ் சிங்
பெயர்ச்சூட்டுராணா ராஜ் சிங்
பரப்பளவு
 • மொத்தம்4,655 km2 (1,797 sq mi)
 • பரப்பளவு தரவரிசை19
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்11,56,597
 • அடர்த்தி248/km2 (640/sq mi)
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
313324/26
தொலைபேசி குறியீட்டெண்02952
வாகனப் பதிவுRJ-30
மக்களவைத் தொகுதிராஜ்சமந்து
அருகே உள்ள நகரங்கள்உதய்பூர், அஜ்மீர்
சராசரி வெப்ப நிலை22.5 °C (72.5 °F)
சராசரி கோடைக்கால வெப்பம்45 °C (113 °F)
சராசரி குளிர்கால வெப்பம்00 °C (32 °F)
இணையதளம்rajsamand.rajasthan.gov.in

ராஜ்சமந்து மாவட்டம் (Rajsamand District) மேற்கு இந்தியாவில் அமைந்துள்ள இராஜஸ்தான் மாநிலத்தின் 33 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத் தலைமையிட நகரம் ராஜ்சமந்து ஆகும். இம்மாவட்டம் உதய்பூர் கோட்டத்தில் உள்ளது. பனாஸ் ஆறு இம்மாவட்டத்தில் பாய்கிறது.

அமைவிடம்

[தொகு]

ராஜ்சமந்து உதய்பூரின் வடக்கில் 67 கி மீ தொலைவிலும்; ஜெய்பூருக்கு தெற்கில் 352 கி மீ தொலைவிலும் தேசிய நெடுஞ்சாலை எண் 8-இல் உள்ளது. 4,768 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட ராஜ்சமந்து மாவட்டத்தின் வடமேற்கு எல்லையாக ஆரவல்லி மலைத்தொடரும்; பாலி மாவட்டம்; வடக்கில் அஜ்மீர் மாவட்டம், வடகிழக்கில் பில்வாரா மாவட்டம், தென்கிழக்கில் சித்தோர்கார் மாவட்டம், தெற்கில் உதய்பூர் மாவட்டம் எல்லைகளாக அமைந்துள்ளன.

மாவட்ட நிர்வாகம்

[தொகு]

ராஜ்சமந்து மாவட்டம் ஏழு உட்கோட்டங்களையும்; ஒன்பது வருவாய் வட்டங்களையும்; ஏழு ஊராட்சி ஒன்றியங்களையும்; 207 [[இந்தியாவின் ஊராட்சி மன்றம்|கிராமப் பஞ்சாயத்துக்களையும் கொண்டது.

பொருளாதாரம்

[தொகு]

இந்தியாவில் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய 250 மாவட்டங்களில் ஒன்றாக இம்மாவட்டத்தையும் 2006-ஆம் ஆண்டில் இந்திய அரசு அறிவித்துள்ளது. எனவே இம்மாவட்டத்தின் ஊராக வளர்ச்சித் திட்டங்களுக்கு இந்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் ஆண்டு தோறும் நிதியுதவி வழங்குகிறது.[1]

மக்கள் தொகையியல்

[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 1,156,597 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 84.11% மக்களும்; நகரப்புறங்களில் 15.89% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 17.18% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 581,339 ஆண்களும்; 575,258 பெண்களும் உள்ளனர். ஆயிரம் ஆண்களுக்கு 990 பெண்கள் என்ற விகிதத்தில் பாலின விகிதம் உள்ளது. 4,655 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 248 மக்கள் வீதம் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 63.14 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 78.42 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 47.95 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 176,041 ஆக உள்ளது. [2]

சமயம்

[தொகு]

இம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 1,105,676 (95.60 %) ஆகவும்; இசுலாமிய சமய மக்கள் தொகை 33,677 (2.91 %) ஆகவும்; சமண சமய மக்கள் தொகை 14,966 (1.29 %) ஆகவும்; சீக்கிய சமய, கிறித்தவ, பௌத்த சமய மக்கள் தொகை மிகக் குறைவாகவும் உள்ளது.

மொழிகள்

[தொகு]

இராஜஸ்தான் மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், பஞ்சாபி, உருது மற்றும் இராச்சசுத்தானி, மார்வாரி போன்ற வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.

புகழ் பெற்றவர்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Ministry of Panchayati Raj (September 8, 2009). "A Note on the Backward Regions Grant Fund Programme" (PDF). National Institute of Rural Development. Archived from the original (PDF) on ஏப்ரல் 5, 2012. பார்க்கப்பட்ட நாள் September 27, 2011. ((cite web)): Check date values in: |archive-date= (help)
  2. Rajsamand District : Census 2011 data

வெளி இணைப்புகள்

[தொகு]
{{bottomLinkPreText}} {{bottomLinkText}}
ராஜ்சமந்து மாவட்டம்
Listen to this article

This browser is not supported by Wikiwand :(
Wikiwand requires a browser with modern capabilities in order to provide you with the best reading experience.
Please download and use one of the following browsers:

This article was just edited, click to reload
This article has been deleted on Wikipedia (Why?)

Back to homepage

Please click Add in the dialog above
Please click Allow in the top-left corner,
then click Install Now in the dialog
Please click Open in the download dialog,
then click Install
Please click the "Downloads" icon in the Safari toolbar, open the first download in the list,
then click Install
{{::$root.activation.text}}

Install Wikiwand

Install on Chrome Install on Firefox
Don't forget to rate us

Tell your friends about Wikiwand!

Gmail Facebook Twitter Link

Enjoying Wikiwand?

Tell your friends and spread the love:
Share on Gmail Share on Facebook Share on Twitter Share on Buffer

Our magic isn't perfect

You can help our automatic cover photo selection by reporting an unsuitable photo.

This photo is visually disturbing This photo is not a good choice

Thank you for helping!


Your input will affect cover photo selection, along with input from other users.

X

Get ready for Wikiwand 2.0 🎉! the new version arrives on September 1st! Don't want to wait?