For faster navigation, this Iframe is preloading the Wikiwand page for பிகானேர் மாவட்டம்.

பிகானேர் மாவட்டம்

பிகானேர் மாவட்டம் (Bikaner district) மேற்கு இந்தியாவில் அமைந்த இராஜஸ்தான் மாநிலத்தின் 33 மாவட்டங்களில் ஒன்றாகும். இராஜஸ்தானின் வடமேற்கில் தார்பாலைவனத்தில் அமைந்த இம்மாவட்டத் தலைமையிட நகரம் பிகானேர் ஆகும்.

உலகப் புகழ் பெற்ற கர்ணி மாதா கோயில் எனும் எலிக் கோயில் இம்மாவட்டத்தில் உள்ளது.

இராஜஸ்தான் மாநிலத்தின் வடமேற்கில், தார் பாலைவனப் பகுதியில் அமைந்த இம்மாவட்டம் பிகானேர் கோட்டத்தில் உள்ளது.

பிகானேர் கோட்டத்தில் அமைந்த பிற மாவட்டங்கள்: சூரூ மாவட்டம், கங்காநகர் மாவட்டம் மற்றும் அனுமான்காட் மாவட்டம் ஆகும்.

புவியியல்

[தொகு]
பிகானேர் மாவட்டத்தின் சத்தர்கர் வருவாய் வட்டத்தைக் கடந்து செல்லும் இந்திராகாந்தி கால்வாய்

தார் பாலைவனத்தில் பிகானேர் மாவட்டத்தின் வடக்கில் ஸ்ரீ கங்காநகர் மாவட்டம், வடகிழக்கில் அனுமான்காட் மாவட்டம், கிழக்கில் சூரூ மாவட்டம், தென்கிழக்கில் நாகவுர் மாவட்டம், தெற்கில் ஜோத்பூர் மாவட்டம், தென்மேற்கில் ஜெய்சல்மேர் மாவட்டம், வடமேற்கில் பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணம் எல்லைகளாக உள்ளது.

மாவட்ட நிர்வாகம்

[தொகு]

பிகானேர் மாவட்டம் என ஐந்து வருவாய்க் கோட்டங்களும்; பிகானேர், கோலயாத், கஜ்ஜுவாலா, சத்தர்கர், புகழ், நோகா, லூங்கரன்சர் மற்றும் துங்கர்கர் என எட்டு வருவாய் வட்டங்களும்; தேஷ்னோக், நோகா, துங்கர்கர், காஜுவாலா, லூங்கரன்சர், நபசர் என ஆறு நகராட்சி மன்றங்களும்; 219 ஊராட்சி மன்றங்களும்; 923 கிராமங்களையும் கொண்டுள்ளது.

பொருளாதாரம்

[தொகு]

இந்தியாவில் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய 250 மாவட்டங்களில் ஒன்றாக இம்மாவட்டத்தையும் 2006-ஆம் ஆண்டில் இந்திய அரசு அறிவித்துள்ளது. எனவே இம்மாவட்டத்தின் ஊராக வளர்ச்சித் திட்டங்களுக்கு இந்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் ஆண்டு தோறும் நிதியுதவி வழங்குகிறது.[1]

மக்கள் தொகையியல்

[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 2,363,937 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 66.14% மக்களும்; நகரப்புறங்களில் மக்களும் 33.86% வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி 41.19%% விகிதம் ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 1,240,801 ஆண்களும்; 1,123,136 பெண்களும் உள்ளனர். ஆயிரம் ஆண்களுக்கு 905 பெண்கள் என்ற விகிதத்தில் பாலின விகிதம் உள்ளது. 30,239 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 78 மக்கள் வீதம் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 65.13% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 75.90% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 53.23% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 400,554 ஆக உள்ளது. [2]

சமயம்

[தொகு]

இம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 2,073,356 (87.71 %) ஆகவும்; இசுலாமிய சமய மக்கள் தொகை 235,741 (9.97 %) ஆகவும்; சமண சமய மக்கள் தொகை 30,850 (1.31 %)ஆகவும்; சீக்கிய சமய மக்கள் தொகை 20,072 (0.85 %) ஆகவும்; கிறித்தவ, பௌத்த சமய மக்கள் தொகை மிகக் குறைவாகவும் உள்ளது.

மொழிகள்

[தொகு]

இராஜஸ்தான் மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், பஞ்சாபி, உருது மற்றும் இராச்சசுத்தானி, மார்வாரி போன்ற வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.

சுற்றுலா

[தொகு]
  • எலிகளின் கோயில் எனப்படும் கர்னி மாதா துர்க்கை கோயில்

வானிலை

[தொகு]
தட்பவெப்ப நிலைத் தகவல், பிகானேர்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 23.0
(73.4)
25.5
(77.9)
31.8
(89.2)
38.2
(100.8)
41.7
(107.1)
41.6
(106.9)
37.8
(100)
36.6
(97.9)
36.7
(98.1)
36.2
(97.2)
30.7
(87.3)
25.3
(77.5)
33.76
(92.77)
தாழ் சராசரி °C (°F) 5.6
(42.1)
8.8
(47.8)
15.0
(59)
22.1
(71.8)
26.8
(80.2)
28.8
(83.8)
27.7
(81.9)
26.8
(80.2)
24.7
(76.5)
19.1
(66.4)
12.1
(53.8)
6.9
(44.4)
18.7
(65.66)
பொழிவு mm (inches) 5
(0.2)
7
(0.28)
10
(0.39)
7
(0.28)
31
(1.22)
46
(1.81)
106
(4.17)
71
(2.8)
34
(1.34)
4
(0.16)
3
(0.12)
1
(0.04)
325
(12.8)
சராசரி பொழிவு நாட்கள் 0.8 1.0 1.5 0.9 2.6 3.2 6.6 5.6 3.0 0.6 0.3 0.5 26.6
ஆதாரம்: HKO

மேற்கோள்கள்

[தொகு]
  1. Ministry of Panchayati Raj (September 8, 2009). "A Note on the Backward Regions Grant Fund Programme" (PDF). National Institute of Rural Development. Archived from the original (PDF) on ஏப்ரல் 5, 2012. பார்க்கப்பட்ட நாள் September 27, 2011. ((cite web)): Check date values in: |archive-date= (help)
  2. District : Census 2011 data[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்

[தொகு]


{{bottomLinkPreText}} {{bottomLinkText}}
பிகானேர் மாவட்டம்
Listen to this article

This browser is not supported by Wikiwand :(
Wikiwand requires a browser with modern capabilities in order to provide you with the best reading experience.
Please download and use one of the following browsers:

This article was just edited, click to reload
This article has been deleted on Wikipedia (Why?)

Back to homepage

Please click Add in the dialog above
Please click Allow in the top-left corner,
then click Install Now in the dialog
Please click Open in the download dialog,
then click Install
Please click the "Downloads" icon in the Safari toolbar, open the first download in the list,
then click Install
{{::$root.activation.text}}

Install Wikiwand

Install on Chrome Install on Firefox
Don't forget to rate us

Tell your friends about Wikiwand!

Gmail Facebook Twitter Link

Enjoying Wikiwand?

Tell your friends and spread the love:
Share on Gmail Share on Facebook Share on Twitter Share on Buffer

Our magic isn't perfect

You can help our automatic cover photo selection by reporting an unsuitable photo.

This photo is visually disturbing This photo is not a good choice

Thank you for helping!


Your input will affect cover photo selection, along with input from other users.

X

Get ready for Wikiwand 2.0 🎉! the new version arrives on September 1st! Don't want to wait?