இராமநாதபுரம் வட்டம்
இராமநாதபுரம் வட்டம் , தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒன்பது வருவாய் வட்டங்களில் ஒன்றாகும். [1]இந்த வட்டத்தின் வட்டாட்சியர் அலுவலகம் இராமநாதபுரம் நகரத்தில் உள்ளது. இவ்வட்டத்தில் இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.
வட்ட நிர்வாகம்
[தொகு]இராமநாதபுரம் வட்டம் இராமநாதபுரம், தேவிபட்டனம், பெருங்குளம் மற்றும் மண்டபம் என நான்கு உள்வட்டங்களும், 43 வருவாய் கிராமங்களும் கொண்டது. [2]
மக்கள்தொகை பரம்பல்
[தொகு]2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டம் 399,232 மக்கள்தொகை கொண்டது. மக்கள்தொகையில் 202,047 ஆண்களும், 197,185 பெண்களும் உள்ளனர். 92,369 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 56.8% மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 85.03% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 976 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 42072 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 973 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 54,787 மற்றும் 711 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 68.98%, இசுலாமியர்கள் 27.61%, கிறித்தவர்கள் 2.3% மற்றும் பிறர் 1.10.% ஆகவுள்ளனர். [3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ இராமநாதபுர மாவட்ட வருவாய் வட்டங்கள்
- ↑ இராமநாதபுரம் வட்டத்தின் உள்வட்டங்களும், வருவாய் கிராமங்களும்
- ↑ இராமநாதபுரம் தாலுகா மக்கள்தொகை பரம்பல்
மாவட்ட தலைமையகம் | |
---|---|
கோட்டங்கள் | |
வருவாய் வட்டங்கள் | |
நகராட்சிகள் | |
பேரூராட்சிகள் | |
ஊராட்சி ஒன்றியங்கள் | இராமநாதபுரம் · பரமக்குடி · கடலாடி · கமுதி · முதுகுளத்தூர் · திருவாடானை · போகலூர் · மண்டபம் · நயினார்கோவில் · திருப்புல்லாணி · இராஜசிங்கமங்கலம் |
ஆன்மீகம் & சுற்றுலாத் தலங்கள் | இராமேசுவரம் · அக்னி தீர்த்தம் · இராமர் பாதம் · தனுஷ்கோடி · கோதண்டராமர் கோயில் · பாம்பன் பாலம் · உத்தரகோசமங்கை · திருப்புல்லாணி · தேவிபட்டினம் · மண்டபம் கடல் வாழ் உயிரினங்கள் காட்சியகம் · வில்லூண்டித் தீர்த்தம் · திருவாடானை ஆதிரத்தினேசுவரர் கோயில் · பாகம்பிரியாள் கோயில் · ஏர்வாடி · வாலிநோக்கம் · ஓரியூர் · இராமர் பாலம் · அழகன்குளம் தொல்லியல் களம் · அப்துல் கலாம் தேசிய நினைவகம் · சித்ரன்குடி பறவைகள் சரணாலயம் · காரங்குடி சதுப்பு நிலம் · |
இணையதளம் |
Text is available under the CC BY-SA 4.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.