For faster navigation, this Iframe is preloading the Wikiwand page for அஜின்கியா ரகானே.

அஜின்கியா ரகானே

அஜின்கியா ரகானே
Ajinkya Rahane
2016 இல் ரகானே
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்அஜின்கியா மதுக்கர் ரகானே
பிறப்பு6 சூன் 1988 (1988-06-06) (அகவை 36)
சங்கமனேர், இந்தியா
பட்டப்பெயர்அச்சு, ஜிங்க்சு
உயரம்5 அடி 7 அங் (1.70 m)
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைவலக்கை மத்திம வீச்சு
பங்குமட்டையாட்டம்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 278)22 மார்ச் 2013 எ. ஆத்திரேலியா
கடைசித் தேர்வு27 திசம்பர் 2020 எ. ஆத்திரேலியா
ஒநாப அறிமுகம் (தொப்பி 191)3 செப்டம்பர் 2011 எ. இங்கிலாந்து
கடைசி ஒநாப16 பெப்ரவரி 2018 எ. தென்னாப்பிரிக்கா
ஒநாப சட்டை எண்27
இ20ப அறிமுகம் (தொப்பி 39)31 ஆகத்து 2011 எ. இங்கிலாந்து
கடைசி இ20ப28 ஆகத்து 2016 எ. மேற்கிந்தியத் தீவுகள்
இ20ப சட்டை எண்27
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2007–இன்றுமும்பை அணி
2008–2010மும்பை இந்தியன்ஸ்
2011–2015ராஜஸ்தான் ராயல்ஸ் (squad no. 3)
2016–2017ரைசிங் புனே சூப்பர்ஜியான்ட்சு (squad no. 3)
2018–2019ராஜஸ்தான் ராயல்ஸ் (squad no. 3)
2019ஆம்ப்சயர் கவுண்டி (squad no. 6)
2020டெல்லி கேபிடல்ஸ் (squad no. 3)
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே.து ஒ.ப.து ப.இ20 மு.த.து
ஆட்டங்கள் 66 90 20 142
ஓட்டங்கள் 4,245 2,962 375 10,731
மட்டையாட்ட சராசரி 42.45 35.26 20.83 47.48
100கள்/50கள் 12/24 3/24 0/1 34/49
அதியுயர் ஓட்டம் 188 111 61 265*
வீசிய பந்துகள் 108
வீழ்த்தல்கள் 0
பந்துவீச்சு சராசரி
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
82/– 48/– 16/– 149/–
மூலம்: ESPNcricinfo, 19 திசம்பர் 2020

அஜின்கியா மதுகர் ரகானே (Ajinkya Madhukar Rahane, பிறப்பு: சூன் 6, 1988) இந்தியத் துடுப்பாட்டக்காரர். வலது கை மட்டையாளரான இவர் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியின் உதவி அணித் தலைவராக உள்ளார். இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைவராகவும் உள்ளார்.[1][2]

2007 ஆம் ஆண்டில் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடத் துவங்கினார். 100 போட்டிகளில் விளையாடிய பின் இவரின் துடுப்பாட்ட சராசரி 62.04 ஆக இருந்தது. முதல் ஐந்து பருவகாலங்களில் 1000 ஓட்டங்களுக்கு மேல் மூன்று முறை எடுத்துள்ளார்.ஆகத்து 2011 இல் மான்செஸ்டரில் நடைபெற்ற இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 போட்டியில் அறிமுகமானார்.[3][4] ஷிகர் தவானுக்கு விரல்களில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியதால் 2013 ஆம் ஆண்டில் நடைபெற்ற அலன் போடர்- சுனில் காவஸ்கர் கோப்பைக்கான போட்டித் தொடரில் விளையாடும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் முதல் நூறு அடித்தார். விராட் கோலி தோள் எலும்பு காயம் காரணமாக விலகியதால் 2017 ஆம் ஆண்டில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான நான்காவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிக்குத் தலைவரானார்.

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

அஜின்கியா ரகானே சூன் 5, 1988 இல் அகமது நகர் மாவட்டம், மகாராட்டிரம்,இந்தியாவில் பிறந்தார். இவரின் தந்தை மதுகர் பாபுராவ் ரகானே,தாய் சுஜாதா ரகானே ஆவர்.[5] இவருக்கு சசான்க் எனும் இளைய சகோதரனும் , அபூர்வா எனும் இளைய சகோதரியும் உள்ளனர்.[6] இவருக்கு 17 வயதாக இருக்கும் போது பிரவின் ஆம்ரே எனும் முன்னாள் இந்தியத் துடுப்பாட்ட அணி வீரரிடம் பயிற்சி பெற்றார்.[7]

உள்ளூர்ப் போட்டி

[தொகு]

2007 ஆம் ஆண்டின் துவக்கத்தில் நியூசிலாந்தில் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான போட்டியில் சிறப்பான இரு நூறுகள் அடித்தார். அந்தத் தொடரில் விளையாடிய விராட் கோலி, கேன் வில்லியம்சன், இஷாந்த் ஷர்மா, டிம் சௌத்தி, டிரென்ட் போல்ட் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் பின்னாளில் நட்சத்திர துடுப்பாட்டக்காரர்களாக ஆனார்கள். இந்தத் தொடரில் இவரின் சிறப்பான ஆட்டத்தினால் பாக்கித்தானில் நடைபெற்ற முகமது நிசார் கோப்பைக்கான தொடரில் இவருக்கு இடம் கிடைத்தது.[8]

சர்வதேச போட்டிகள்

[தொகு]

மார்ச் 22, 2013 ஆம் ஆண்டில் பெரோசா கோட்லா விளையாட்டரங்கத்தில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான பார்டர் - சுனில் காவஸ்கர் கோப்பைக்கான போட்டித் தொடரில் இவர் அறிமுகமானார்.

2011 ஆம் ஆண்டில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக செயல்பட்டதைத் தொடர்ந்து இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டித் தொடரில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார்.[9] இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகம் ஆனார். இந்தப் போட்டியில் வீரேந்தர் சேவாக்கிற்குப் பதிலாக துவக்க வீரராக இவர் களமிறங்கினார். அந்தப் போட்டியில் 40 ஓட்டங்களைப் பெற்றார். இவரின் துடுப்பாட்ட சராசரி 90.90 ஆகும். அந்தத் தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றது.[9]

2011 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் நடைபெற்ற இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதில் 54 பந்துகளில் 47 ஓட்டங்கள் எடுத்தார். ஆனால் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணி, இலங்கைத் துடுப்பாட்ட அணி, பாக்கித்தான் துடுப்பாட்ட அணி, மற்றும் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிகளுக்கு எதிராக சிறப்பாக விளையாடத் தவறினார்.[8]

சான்றுகள்

[தொகு]
  1. "Does Rahane's ODI repertoire warrant his selection?". Cricinfo. http://www.espncricinfo.com/india-v-england-2016-17/content/story/1078299.html. பார்த்த நாள்: 28 May 2017. 
  2. "India vs England: The Ajinkya Rahane conundrum for Virat Kolhi". Deccan Chronicle. http://www.deccanchronicle.com/sports/cricket/140117/india-vs-england-the-ajinkya-rahane-conundrum-for-virat-kolhi.html. பார்த்த நாள்: 28 May 2017. 
  3. Ajinkya Rahane | India Cricket | Cricket Players and Officials. ESPN Cricinfo. Retrieved on 2013-12-23.
  4. "Professional companies should manage cricketers". Yahoo Cricket India. 9 June 2013.
  5. "A childhood dream finally realised". Cricibuzz. பார்க்கப்பட்ட நாள் 25 July 2014.
  6. "I want a Lamborghini and an Aston Martin: Ajinkya Rahane". Times of India. பார்க்கப்பட்ட நாள் 25 July 2014.
  7. "Ajinkya Rahane's debut ton extremely important for his career: Pravin Amre". NDTV. Archived from the original on 29 ஜூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 25 July 2014. ((cite web)): Check date values in: |archive-date= (help)
  8. 8.0 8.1 Navneet Mundhra. I've learned to adapt, improvise: Rahane Sep 13, 2012 IBN [1] பரணிடப்பட்டது 2014-07-15 at the வந்தவழி இயந்திரம்
  9. 9.0 9.1 "Ajinkya Rahane - India - Cricket Stats and Records - Wisden India". wisdenindia.com. Archived from the original on 2014-04-05. பார்க்கப்பட்ட நாள் 2018-05-04.

வெளியிணைப்புகள்

[தொகு]

கிரிக்கின்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு: அஜின்கியா ரகானே

வார்ப்புரு:இந்தியத் துடுப்பாட்ட அணியின் ஒ.ப.து தலைவர்கள்

{{bottomLinkPreText}} {{bottomLinkText}}
அஜின்கியா ரகானே
Listen to this article

This browser is not supported by Wikiwand :(
Wikiwand requires a browser with modern capabilities in order to provide you with the best reading experience.
Please download and use one of the following browsers:

This article was just edited, click to reload
This article has been deleted on Wikipedia (Why?)

Back to homepage

Please click Add in the dialog above
Please click Allow in the top-left corner,
then click Install Now in the dialog
Please click Open in the download dialog,
then click Install
Please click the "Downloads" icon in the Safari toolbar, open the first download in the list,
then click Install
{{::$root.activation.text}}

Install Wikiwand

Install on Chrome Install on Firefox
Don't forget to rate us

Tell your friends about Wikiwand!

Gmail Facebook Twitter Link

Enjoying Wikiwand?

Tell your friends and spread the love:
Share on Gmail Share on Facebook Share on Twitter Share on Buffer

Our magic isn't perfect

You can help our automatic cover photo selection by reporting an unsuitable photo.

This photo is visually disturbing This photo is not a good choice

Thank you for helping!


Your input will affect cover photo selection, along with input from other users.

X

Get ready for Wikiwand 2.0 🎉! the new version arrives on September 1st! Don't want to wait?