For faster navigation, this Iframe is preloading the Wikiwand page for முகம்மது சமி.

முகம்மது சமி

முகம்மது சமி
Mohammed Shami
2019 இல் சமி
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்முகம்மது சமி
பிறப்பு3 செப்டம்பர் 1990 (1990-09-03) (அகவை 33)
அம்ரோகா, உத்தரப் பிரதேசம், இந்தியா
உயரம்5 அடி 8 அங் (1.73 மீ)[1]
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைவலக்கை விரைவு/நடுத்தர விரைவு
பங்குபந்து வீச்சாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 279)6 நவம்பர் 2013 எ. மேற்கிந்தியத் தீவுகள்
கடைசித் தேர்வு7 சூன் 2023 எ. ஆத்திரேலியா
ஒநாப அறிமுகம் (தொப்பி 195)6 சனவரி 2013 எ. பாக்கித்தான்
கடைசி ஒநாப15 நவம்பர் 2023 எ. நியூசிலாந்து
ஒநாப சட்டை எண்11
இ20ப அறிமுகம் (தொப்பி 46)21 மார்ச் 2014 எ. பாக்கித்தான்
கடைசி இ20ப10 நவம்பர் 2022 எ. இங்கிலாந்து
இ20ப சட்டை எண்11
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2010/11–2018/19வங்காளம்
2013கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
2014–2018டெல்லி கேபிடல்ஸ்
2019–2021பஞ்சாப் கிங்ஸ்
2022–2023குஜராத் டைட்டன்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே ப.ஒ.நா இ20ப மு.த
ஆட்டங்கள் 64 100 23 88
ஓட்டங்கள் 750 214 0 1,049
மட்டையாட்ட சராசரி 12.09 7.92 0.00 12.19
100கள்/50கள் 0/2 0/0 0/0 0/2
அதியுயர் ஓட்டம் 56* 25 0* 56*
வீசிய பந்துகள் 11,515 4,943 477 16,500
வீழ்த்தல்கள் 229 194 24 332
பந்துவீச்சு சராசரி 27.71 23.56 29.62 27.09
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
6 5 0 12
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0 2
சிறந்த பந்துவீச்சு 6/56 7/57 3/15 7/79
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
16/– 29/– 1/– 22/–
மூலம்: ESPNcricinfo, 16 நவம்பர் 2023

முகம்மது சமி (Mohammed Shami, பிறப்பு: 3 செப்டம்பர் 1990) தேர்வுத் துடுப்பாட்டங்களிலும் ஒருநாள் துடுப்பாட்டங்களிலும், பன்னாட்டு இருபது20 போட்டிகளில் இந்திய அணிக்காக ஆடும் வேகப் பந்து வீச்சாளர் ஆவார். உள்நாட்டுப் போட்டிகளில் மேற்கு வங்காளத் துடுப்பாட்ட அணிக்காக ஆடுகிறார்.[2] மணிக்கு சுமார் 140 கிலோமீட்டர் வேகத்தில் பந்துவீசுகிறார்.[3][4][5] ஜனவரி, 2013 ஆம் ஆண்டில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியில் நான்கு ஓவர்களை மெய்டனாக வீசி சாதனை படைத்தார். மேலும் நவம்பர் , 2013 ஆம் ஆண்டில் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியில் 5 இலக்குகளைக் கைப்பற்றி சாதனைப் படைத்தார்.

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

முகமது சமி 1990 செப்டம்பர் 3 இல் ஷஹாஸ்பூர் கிராமத்தில், அம்ரோகா மாவட்டம், உத்தரப் பிரதேசத்தில் பிறந்தார்.[6] இவரின் தந்தை உழவர் ஆவார். இவரின் தந்தையும் இளவயதில் விரைவு வீச்சாளராக இருந்துள்ளார். இவருக்கு ஒரு சகோதரியும், மூன்று சகோதரர்களும் உள்ளனர். இவர்கள் மூன்று பேருமே விரைவு வீச்சாளர்களாக வேண்டுமென விரும்பினார்கள்.[7] சமியின் பந்துவீச்சும் திறனைக் கண்டறிந்த இவரின் தந்தை இவரை தனது கிராமத்தில் இருந்து சுமார் 22 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மொராதாபாத் மாவட்டத்தில் பயிற்சி பெறச் செய்தார். அங்குள்ள பத்ருதீன் சித்திக்கிடம் என்பவரிடம் இவர் பயிற்சி செய்தார்.

இவரைப் பற்றி இவரின் பயிற்சியாளர் பின்வருமாறு கூறுகிறார்.

நான் சமியை முதன் முதலில் வலைப் பயிற்சியில் பந்து வீசியதைப் பார்த்தபோது அவருக்கு வயது 15 இருக்கும். நான் பார்த்த உடனே அவர் சராசரியான நபர் இல்லை என்றும் அவருக்கு அபரிமிதமான திறமைகள் இருந்ததையும் நான் அறிந்தேன். எனவே அவருக்கு நான் பயிற்சியளிக்க முடிவு செய்தேன். அவரை நான் உத்தரப் பிரதேச மாநில தொடருக்குக்காக தயார் செய்தேன். ஏனெனில் அந்தக் காலத்தில் சங்க துடுப்பாட்டங்கள் இல்லை. தொடர்ச்சியாகவும், கடினமாகவும் அவர் பயிற்சியினை மேற்கொண்டார். பயிற்சியில் இருந்து ஒருநாளும் அவர் விடுப்பு எடுத்தது இல்லை. 19 வயதிற்கு உட்பட்டோருக்கான போட்டித் தொடரில் சிறப்பாகப் பந்துவீசினார். ஆனால் சில அரசியல் காரணங்களினால் அவர் மாநில அணியில் தேர்வாகவில்லை. எனவே அவர்களின் பெற்றோர்களிடம் அவரை கொல்கத்தாவிற்கு அனுப்பப் பரிந்துரைத்தேன் எனக் கூறினார்.

2011 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் இவரை ஏலத்தில் எடுத்தது. இந்த அணியின் பந்துவீச்சு தலைமைப் பயிற்சியாளராக பாக்கித்தான் துடுப்பாட்ட அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் வசீம் அக்ரம் இருந்தார். அவரிடம் இருந்து சில பந்துவீச்சு நுனுக்கங்களைக் கற்றுக் கொண்டார். இந்தத் தொடரின் சில போட்டிகளில் மட்டுமே இவர் பந்து வீசினார். 2012 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இந்த அணி கோப்பையை வெல்ல உதவியாக இருந்தார்.

2013 ஆம் ஆண்டில் இவர் சிறப்பாக செயல்பட்டதனால் 2014 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி நிர்வாகம் இவரை 4.25 கோடி ரூபாய் மதிப்பில் ஏலத்தில் எடுத்தது. இந்தத் தொடரிலும் 3 போட்டிகள் மட்டுமே விளையாடி 78 ஓட்டங்களை வீட்டுக் கொடுத்து 1 இலக்குகளை மட்டுமே கைப்பற்றினார்.[8]

ஆட்டநாயகன் விருது

[தொகு]
வ எ எதிரணி இடம் ஆண்டு செயல்பாடு முடிவு
1 மேற்கிந்தியத் தீவுகள் பெரோசா கோட்லா விளையாட்டரங்கம் 2014 மட்டையாடவில்லை; 9.3-0-36-4  இந்தியா 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[9]
2 மேற்கிந்தியத் தீவுகள் மேற்கு ஆஸ்திரேலிய துடுப்பாட்ட சங்க அரங்கம் 2015 8-0-35-3 ; மட்டையாடவில்லை  இந்தியா 4 இலக்குகள் வித்தியாசத்தில்வெற்றி பெற்றது.[10]

மேற்சான்றுகள்

[தொகு]
  1. Mohammed Shami. Sportskeeda.
  2. "Mohammed Shami", Cricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-20
  3. "'Deceptive' Shami earns praise", Cricinfo (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2018-05-20
  4. "Mohammed Shami Profile - ICC Ranking, Age, Career Info & Stats", Cricbuzz (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2018-05-20
  5. "Profile, Photos, Records and Videos", timesofindia.indiatimes.com, பார்க்கப்பட்ட நாள் 2018-05-20
  6. http://timesofindia.indiatimes.com/sports/india-in-zimbabwe/top-stories/Power-play-Even-cuts-cant-deny-Shamis-Sahaspur-village/articleshow/46618117.cms
  7. Laha, Somshuvra. "Farmer's son Mohammad Shami swings it for team India". Hindustan Times. Archived from the original on 17 பிப்ரவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 15 February 2015. ((cite web)): Check date values in: |archive-date= (help)
  8. "IPLT20.com - Indian Premier League Official Website", www.iplt20.com (in ஆங்கிலம்), archived from the original on 2018-03-13, பார்க்கப்பட்ட நாள் 2018-05-20
  9. "India v West Indies at Delhi, Oct 11, 2014".
  10. "India vs West Indies, CWC, 2015". India Today. March 6, 2015. பார்க்கப்பட்ட நாள் March 6, 2015.

வெளி இணைப்புகள்

[தொகு]
{{bottomLinkPreText}} {{bottomLinkText}}
முகம்மது சமி
Listen to this article

This browser is not supported by Wikiwand :(
Wikiwand requires a browser with modern capabilities in order to provide you with the best reading experience.
Please download and use one of the following browsers:

This article was just edited, click to reload
This article has been deleted on Wikipedia (Why?)

Back to homepage

Please click Add in the dialog above
Please click Allow in the top-left corner,
then click Install Now in the dialog
Please click Open in the download dialog,
then click Install
Please click the "Downloads" icon in the Safari toolbar, open the first download in the list,
then click Install
{{::$root.activation.text}}

Install Wikiwand

Install on Chrome Install on Firefox
Don't forget to rate us

Tell your friends about Wikiwand!

Gmail Facebook Twitter Link

Enjoying Wikiwand?

Tell your friends and spread the love:
Share on Gmail Share on Facebook Share on Twitter Share on Buffer

Our magic isn't perfect

You can help our automatic cover photo selection by reporting an unsuitable photo.

This photo is visually disturbing This photo is not a good choice

Thank you for helping!


Your input will affect cover photo selection, along with input from other users.

X

Get ready for Wikiwand 2.0 🎉! the new version arrives on September 1st! Don't want to wait?