For faster navigation, this Iframe is preloading the Wikiwand page for விருஷ்ணி குலம்.

விருஷ்ணி குலம்

வட இந்தியாவில் சிந்து ஆறு - கங்கை ஆற்றிக்கும் இடைப்பட்ட பகுதியை வாழிடமாகக் கொண்ட விருஷ்ணி குலத்தின் உட்பிரிவினர்களான அருச்சுனயானர்கள், யௌதேயர்கள், பௌரவர்கள், குலிந்தர்கள், வேமகர்கள் மற்றும் ஆதும்பரர்கள்
பலராமன் மற்றும் கிருஷ்ணர் உருவம் பொறித்த இந்தோ-கிரேக்க மன்னர்களின் நாணயங்கள், ஆண்டு, கி. மு. 190-180
விருஷ்ணிகளின் 7-ஆம் நூற்றாண்டின் வெள்ளி நாணயம்

விருஷ்ணி குலம் (Vrishnis) பண்டைய பரத கண்டத்தின் குரு நாட்டின் பேரரசர் யயாதியின் மகன் யதுவின் வழிவந்த விருஷ்ணி என்பாரின் வழித்தோன்றல்கள் ஆவார். விருஷ்ணியின் இரண்டு மனைவியர்கள் காந்தாரி மற்றும் மாத்திரி ஆவார். மனைவி மாத்திரி மூலம் விருஷ்ணிக்கு தேவமிதுசா என்ற மகன் பிறந்தான். கிருஷ்ணரின் தந்தையான வசுதேவர் தேவமிதுசாவுக்குப் பிறந்தவர் ஆவார்.[1] இந்துப் புராணங்களின் படி, விருஷ்ணியின் குலத்தவர்கள் துவாரகையை வாழிடமாகக் கொண்டவர்கள் ஆவார்.

வரலாறு

[தொகு]

யயாதி - தேவயானி இணையரின் மூத்த மகன் யது ஆவார். தன் மகள் தேவயானிக்கு துரோகம் செய்து, தேவயானியின் தோழிப் பெண்னான சர்மிஷ்டையுடன், யயாதி புணர்ந்து குழந்தைகளை பெற்ற காரணத்தினால், சுக்கிராச்சாரியால் சபிக்கப்பட்டு கிழத்தன்மை அடைந்தான். யயாதி தனது தவறுக்கு வருந்தியதால், உனது கிழத்தன்மையை உனது மகன்களில் ஒருவனுக்கு கொடுத்து, இழந்த கிழத்தன்மை மீண்டும் பெற்றுக் கொள்ளலாம் என யயாதிக்கு சாபத்திற்கான பரிகாரம் கூறினார்.

யயாதியின் கிழத்தன்மையை ஏற்க மறுத்த காரணத்தினால்,யதுவும், அவனது வழித்தோன்றல்களும் இனி நாட்டை அரசாளும் உரிமையில்லாது போகக்கடவது என யயாதி அளித்த சாபத்தால், யதுவின் வழித்தோன்றல்கள் நாட்டை ஆள இயலாது ஆடு, மாடுகள் மேய்த்து பால், தயிர், வெண்ணெய் போன்ற பால் பொருட்களை உற்பத்தி செய்யும் இடைத் தொழில் செய்து வாழ்ந்தனர். அவர்களை யாதவர்கள் என்பர்.[2]

காலப்போக்கில் யது குலத்தில், விருஷ்ணிகள், அந்தகர்கள், போஜர்கள், குகுரர்கள் என நான்கு உட்பிரிவுகள் கிளைத்தன.[3][4]

விருஷ்ணிகள் துவாரகைக்கு குடிபெயர்தல்

[தொகு]

கம்சனின் மாமனாரும், மகத நாட்டு மன்னனுமான ஜராசந்தன், கம்சனின் இறப்பிற்கு காரணமான கிருஷ்ணர் வாழ்ந்த மதுரா மீது பலமுறை பெரும் படைகளுடன் முற்றுகையிட்டான். கிருஷ்ணரும், பலராமரும் ஜராசந்தனின் படைகளை விரட்டி அடித்தனர். பின்னர் காலயவனன் என்ற அசுரன் பெரும் படைகளுடன், மதுராவை சூழ்ந்து கொண்டு அடிக்கடி தொடர் தாக்குதல்கள் நடத்தினான். பாதுகாப்பு காரணங்களால் கிருஷ்ணர், தனது குல மக்களான விருஷ்ணிகளை, மதுராவிலிருந்து துவாரகையில் குடியமர்த்தினார்.[5]

கிருஷ்ணரின் குடும்பம்

[தொகு]

கிருஷ்ணரின் குடும்ப மரத்தை காட்டும் அட்டவணை:[6][7]

 
விருஷ்ணி
 
மனைவி♀#
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
யுதாஜித்
 
மனைவி♀#
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
அனமித்திரன்
 
மனைவி♀#
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
விருஷ்ணி
 
மனைவி♀#
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
சித்திரரதன்
 
மனைவி♀#
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
விதுரதன்
 
மனைவி♀#
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
4 தலைமுறைகள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
ஹிருத்திகா
 
மனைவி♀#
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
தேவமிதன்
 
மனைவி♀#
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
சூரசேனர்
 
மனைவி♀#
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
தேவகி ♀#
 
வசுதேவர்
 
 
 
 
 
ரோகிணி♀#
 
குந்தி
 
9 பிற மகன்கள்
 
4 பிற மகள்கள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
கிருஷ்ணர்
 
பிற மகன்கள்
 
பலராமன்
 
சுபத்திரை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
ருக்மணி ♀#
 
ச‌‌த்‌தியபாமா‌ ♀#
 
ஜாம்பவதி ♀#
 
நக்னசித்தி ♀#
 
காளிந்தி♀#
 
மாத்திரி ♀#
 
மித்திரவிந்தை♀#
 
பத்திரை ♀#
 
ரோகிணி♀#
 
பிற 16,100 மனைவிகள்♀#
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
பிரத்தியுமனன், சாருதேஷ்னன், சுதேசனன், சாருகுப்தன், விசாரு மற்றும் சாரு
 
பானு, சுபானு, சுவர்பானு, பிரபானு, பானுமான், சந்திரபானு, பிரகத்பானு, அதிபானு, ஸ்ரீபானு மற்றும் பிரதிபானு
 
சாம்பன், சுமித்திரை, புருஜித், சதஜித், சகஸ்ரஜித், விஜயா, சித்திரகேது, வசுமான், திராவிடன் மற்றும் கிரது
 
வீரா, சந்திரா, அஸ்வசேனன், சித்திரகுப்தன், வேகவான், விருஷா, அமன், சங்கு, வசு மற்றும் குந்தி
 
சுருதா, கவில் விருஷா, வீரா, சுபானு, பத்திரா, சாந்தி, தர்சன், பூர்ணமாசம் மற்றும் சோமகன்
 
பிராகோசா, கத்ரவன், சிம்மன், பாலா, பிரபாலா, உர்தாகன், மகாசக்தி, சகா, ஓஜா மற்றும் அபராஜிதன்
 
விரகன், ஹர்சன், அனிலன், கிரிதரன், வர்தனன், உன்னதன், மகாஅம்சன், பவானா, வாகினி மற்றும் குசுத்தி
 
சங்கரஜித், விருகத்சேனன், சூரன், பிரபாகரன், அரிஜித், ஜெயா மற்றும் சுபத்திரை, வாமன், ஆயூர் மற்றும் சத்தியகன்
 
தீப்திமான், தாம்ரதப்தன் மற்றும் பிற எண்மர்
 
ஒவ்வொரு மனைவிக்கும் தலா 10 மகன்களும், 1 மகளையும் பெற்றனர்
 

விருஷ்ணி குலத்தின் அழிவு

[தொகு]

குருச்சேத்திர போரில் துரியோதனன் கொல்லப்பட்ட துயரத்தின் விளைவால் காந்தாரி, கிருஷ்ணரின் விருஷ்ணி குலம் விரைவில் அழியும் என வஞ்சினம் உரைத்தாள். காந்தாரி சாபத்தின் படி, குருசேத்திரப் போர் முடிந்த 36வது ஆண்டில், கிருஷ்ணரின் மகன் சாம்பனுக்கு முனிவர்கள் இட்ட சாபத்தின் விளைவாக, கிருஷ்ணரின் மகன்கள், பேரன்கள் மற்றும் விருஷ்ணி குலத்தவர்கள், அளவிற்கு மேல் மது அருந்தி ஒருவருடன் ஒருவர் சண்டையிட்டு மடிந்தனர்.

விருஷ்ணி குல பெண்கள், குழந்தைகள், கிருஷ்ணர் மற்றும் பலராமர் மட்டும் உயிருடன் எஞ்சியிருந்தனர். விருஷ்ணி குல பெண்களையும், குழந்தைகளையும், முதியோர்களை அத்தினாபுரம் கூட்டிச் செல்லுமாறு கிருஷ்ணர், குரு நாட்டு அருச்சுனனுக்கு ஓலை அனுப்பினார்.

விருஷ்ணி குலத்தினரின் நிலை கண்டு வருந்திய பலராமர் ஜீவசமாதி அடைந்தார். கிருஷ்ணர் பிரபாச பட்டினம் நகரத்திற்குச் சென்று காட்டில் ஓய்வு எடுக்கையில், வேடன் எய்திய அம்பு கிருஷ்ணரின் காலில் குத்தியதால், கிருஷ்ணர் உயிர் துறந்து வைகுந்தம் சென்றார்.

அருச்சுனன் விருஷ்ணி குல பெண்களையும், குழந்தைகளையும் அத்தினாபுரம் கூட்டிச் செல்லும் வழியில், ஆபிரர்கள் எனும் கூட்டத்தினர் [8] தாக்கி, பொருட்களை கொள்ளையடித்து விருஷ்ணி குல பெண்களையும், குழந்தைகளையும் கவர்ந்து சென்றனர்.[9] ருக்குமணி முதலான கிருஷ்ணரின் எண்மனையாட்டிகள், கூட்டுத் தீக்குளிப்பு செய்து கொண்டு உயிர்த்தியாகம் செய்தனர். பின்னர் கடல்நீர் துவாரகை நகரத்திற்குள் புகுந்து உள்வாங்கிக் கொண்டது.

பண்டைய இலக்கியங்களில் விருஷ்ணிகள்

[தொகு]

பாணினியின் அஷ்டத்யாயி எனும் சமசுகிருத நூலில் (IV.1.114, VI.2.34) அந்தகர்களுடன் விருஷ்ணி குலம் ஒப்பிடுகிறது.

கௌடில்யரின் அர்த்தசாஸ்திரம் எனும் நூலில் விருஷ்ணி குலத்தினரை சங்கா எனும் பழங்குடி மக்களின் கூட்டமைப்புடன் ஒப்பிடுகிறது. மகாபாரத காவியத்தின் துரோண பருவத்தில் (துரோண பருவம், 141.15) விருஷ்ணிகளையும், அந்தகர்களையும் விராத்தியர் இன மக்களுடன் ஒப்பிடுகிறது.[10]

யதுவின் வழித்தோன்றல்களான விருஷ்ணிகளைப் போன்று குகுரர்கள், போஜர்கள், அந்தகர்களை சங்கம் வளர்த்து வாழ்ந்தவர்கள் என்றும், இச்சங்கத்திற்கு வசுதேவ கிருஷ்ணன் சிறப்புடையவன் என மகாபாரத காவியத்தின் சாந்தி பருவம் 81.25-இல் குறிப்பிடுகிறது.

அரி வம்சப் புராணத்தின் படி (II.4.37-41) விருஷ்ணி குலத்தினர், நந்தகோபனுக்குப் பிறந்த விஷ்ணு துர்கையை வழிபட்டனர் என்று அதே புராணத்தில் (II.2.12) கூறப்பட்டுள்ளது.[11]மதுராவில் கண்டெடுத்த மோரா வெல் எனும் கல்வெட்டுகளின்படி, விருஷ்ணிகளில் சங்கர்ஷனர், வாசுதேவன், பிரத்தியுமனன், அனிருத்தன் மற்றும் சாம்பன் ஆகிய ஐவர் மாவீர்ர்களாக கருதப்பட்டனர்.[12]

விருஷ்ணிகளின் நாணயம்

[தொகு]

விருஷ்ணிகளின் வெள்ளி நாணயம், தற்கால பஞ்சாப் மாநிலத்தின் ஹோசியார்பூரில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்நாணயம் தற்போது பிரித்தானிய அருங்காட்சியகம், இலண்டனில் உள்ளது.[13] பின்னாட்களில் விருஷ்ணிகளின் செப்பு நாணயங்கள், களிமண் முத்திரைகள் லூதியானா அருகே கண்டெடுக்கப்பட்டது.[14]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Pargiter F.E. (1922, reprint 1972). Ancient Indian Historical Tradition, Delhi: Motilal Banarsidass, pp.103-7
  2. Yadava
  3. Vaisnavism, Saivism and Minor Religious Systems, Delhi: Asian Educational Service, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-206-0122-2, p.11).
  4. [1]
  5. Sister Nivedita & Ananda K.Coomaraswamy: Myths and Legends of the Hindus and Bhuddhists, Kolkata, 2001 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7505-197-3
  6. "Krishna's visit to Prabhasa along with his family, Mausala Parva, Mahabharata - Kashiram Das". Archived from the original on 2013-12-12. பார்க்கப்பட்ட நாள் 2017-03-27.
  7. Family Trees, The descendants of Pururava.
  8. The Mahabharata Book 16: Mausala Parva, Kisari Mohan Ganguli, tr. [1883-1896]
  9. Yadavas through the ages, from … – J. N. Singh Yadav – Google Books. Books.google.co.in. 28 August 2007. பார்க்கப்பட்ட நாள் 18 October 2011.
  10. Raychaudhury, H.C. (1972). Political History of Ancient India, Calcutta: University of Calcutta, pp.126-8
  11. Bhattacharji, Sukumari (2000). The Indian Theogony: Brahmā, Viṣṇu and Śiva, New Delhi: Penguin, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-14-029570-2, p.173
  12. Srinivasan, Doris Meth (1997). Many Heads, Arms and Eyes : Origin, Meaning and Form of Multiplicity in Indian Art. New York: Brill. p. 211. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-04-10758-8.
  13. Lahiri, Bela (1974). Indigenous States of Northern India (Circa 200 B.C. to 320 A.D.), Calcutta: University of Calcutta, pp.242-3
  14. Handa, Devendra (2006). Sculptures from Haryana: Iconography and Style. Shimla: Indian Institute of Advanced Study. p. 86. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7305-307-8.
{{bottomLinkPreText}} {{bottomLinkText}}
விருஷ்ணி குலம்
Listen to this article

This browser is not supported by Wikiwand :(
Wikiwand requires a browser with modern capabilities in order to provide you with the best reading experience.
Please download and use one of the following browsers:

This article was just edited, click to reload
This article has been deleted on Wikipedia (Why?)

Back to homepage

Please click Add in the dialog above
Please click Allow in the top-left corner,
then click Install Now in the dialog
Please click Open in the download dialog,
then click Install
Please click the "Downloads" icon in the Safari toolbar, open the first download in the list,
then click Install
{{::$root.activation.text}}

Install Wikiwand

Install on Chrome Install on Firefox
Don't forget to rate us

Tell your friends about Wikiwand!

Gmail Facebook Twitter Link

Enjoying Wikiwand?

Tell your friends and spread the love:
Share on Gmail Share on Facebook Share on Twitter Share on Buffer

Our magic isn't perfect

You can help our automatic cover photo selection by reporting an unsuitable photo.

This photo is visually disturbing This photo is not a good choice

Thank you for helping!


Your input will affect cover photo selection, along with input from other users.

X

Get ready for Wikiwand 2.0 🎉! the new version arrives on September 1st! Don't want to wait?