For faster navigation, this Iframe is preloading the Wikiwand page for பிருத்து.

பிருத்து

பிருது
பசு வடிவத்திலிருக்கும் பிருத்வியைத் துரத்தும் பிருத்து.
தேவநாகரிपृथु
வகைவைணவ சமயம், இறையாண்மையுடைய சக்கரவர்த்தி
ஆயுதம்வில் அம்பு
துணைஆர்ச்சி
பெற்றோர்கள்வேணா (தந்தை)
சகோதரன்/சகோதரிநிசாதன்
குழந்தைகள்விஜித்ஸ்வன்

பிருத்து (Prithu) ("பெரிய, முக்கியமான, அமோகமான") [1] ஒரு இறையாண்மையாக ( சக்கரவர்த்தி ), புராணங்களில் இடம்பெற்ற ஒருவராவார். இந்து மதத்தின்படி, இவர் காக்கும் கடவுளான [[விஷ்ணு]வின் அவதாரமாகக் கருதப்படுகிறார். பிருத்து, பிரித்தி மற்றும் பிருத்வி வைன்யா என்றும் அழைக்கப்படுகிறார். அதாவது, "பிருத்து — வேனாவின் மகன்". பிருது "முதலில் தோன்றிய மன்னராகக்" கொண்டாடப்படுகிறார். இவரிடமிருந்து பூமி பிருத்வி என்ற பெயரைப் பெற்றது. [2] இவர் முக்கியமாக பூமித் தெய்வமான பிருத்வியை துரத்திய புராணக்கதையுடன் தொடர்புடையவர். பூமி ஒரு பசுவின் வடிவத்தில் மறைந்து ஓடியது. இறுதியில் தனது பாலை உலகின் தானியமாகவும் தாவர உணவாகவும் கொடுக்க ஒப்புக்கொண்டது. [3] இதிகாசமான மகாபாரதம், விஷ்ணு புராணம் மற்றும் பாகவத புராணம் ஆகியவை இவரை விஷ்ணுவின் ஒரு அவதாரமாக விவரிக்கின்றன. [4]

புராணக்கதைகள்

[தொகு]

பிறப்பு

[தொகு]

பிருத்துவின் பிறப்பானது ஒரு பெண்ணுடனான இனப்பெருக்கம் இல்லாதது. (" யோனி இல்லாமல் பிறந்தவர்"). ஆசை மற்றும் அகங்காரத்தால் தீண்டப்படாதவர். இதனால் தர்மத்துடன் ஆட்சி செய்ய தனது புலன்களைக் கட்டுப்படுத்தினார்.[5]

பாகவத புராணம், விஷ்ணு புராணம். அரி வம்சம் மற்றும் மானவ புராணம் ஆகியவை பிருத்துவின் கதையைச் சொல்கிறது: துருவனின் வம்சாவளியைச் சேர்ந்த வேணா என்பவன், வேத சடங்குகளை புறக்கணித்த ஒரு தீய அரசனாவான். இதனால் ரிஷிகள் அவரைக் கொன்றனர். வாரிசு இல்லாமல் இராச்சியத்தை விட்டு வெளியேறினர் . மேலும், வேணாவின் அராஜகத்தால் பஞ்சம் ஏற்பட்டது. எனவே, முனிவர்கள் வேனாவின் உடலைக் கசக்கினர். அதில் முதலில் ஒரு இருண்ட குள்ள வேட்டைக்காரன் தோன்றினான். இது வேணாவின் தீமையின் அடையாளமாகும். அவன் செம்பு முடி, சிவப்பு கண்கள் மற்றும் குட்டையான உயரத்தில் இருந்தான். அவன் மிகவும் சாந்தகுணமுள்ளவராக இருந்ததால், முனிவர்கள் அவனை "நிசிதன்" என அழைத்தனர். பின்னர், அவன் நிசாதன் என்று அழைக்கப்பட்டான். அவன் நிசாத இனத்தை நிறுவினான். வேணாவின் பாவங்கள் போய்விட்டதால், உடல் இப்போது தூய்மையானது. பிருத்து, வேணாவின் சடலத்தின் வலது கையிலிருந்து வெளிப்பட்டார். [6]

மனைவிகள் மற்றும் குழந்தைகள்

[தொகு]

சில சமயங்களில் பிருத்துவின் மகள் அல்லது மனைவியாகக் கருதப்படும் பிருத்வியைத் தவிர, பிருத்துவுக்கு அர்ச்சி என்ற மனைவியும் ஐந்து மகன்களும் உள்ளனர். அர்ச்சி, பிருத்துவுடன் வேணாவின் உடலில் இருந்து வெளிப்பட்டு, விஷ்ணுவின் மனைவியான லட்சுமி தேவியின் அவதாரமாகக் கருதப்படுகிறார். பிருத்துவின் மகன் விஜித்ஸ்வன், இறையாண்மையுடைய மன்னனாக, இராச்சியத்தின் நடுப்பகுதியைக் கட்டுப்படுத்தினான். பிருத்துவின் மற்ற மகன்களான அர்யர்க்சன், தும்ரகேசன், விருகன் மற்றும் திராவிடன் ஆகியோர் முறையே கிழக்கு, தெற்கு, மேற்கு மற்றும் வடக்கே அரசாட்சி செய்தனர். [7] [8]

பிரபலமான கலாச்சாரத்தில்

[தொகு]

சீன அறிஞரான சுவான்சாங் (கி.பி. 640) " ராஜா (ராஜா) என்ற பட்டத்தைப் பெற்ற முதல் நபர் என்று கூறப்படும் பிருத்துவின் பெயரால் பெயரிடப்பட்ட பெகோவா நகரம் இருந்ததை பதிவு செய்கிறார். பிருத்துவுடன் தொடர்புடைய மற்றொரு இடம் பிருதுதகா (எழுத்து. "பிருதுவின் குளம்"), சரசுவதி ஆற்றின் கரையில் உள்ள ஒரு நகரம், அங்கு பிருத்து தனது தந்தையின் சிராத்தத்தை செய்ததாக நம்பப்படுகிறது. இந்த நகரம் வடக்கு மற்றும் மத்திய இந்தியாவிற்கு இடையிலான எல்லை என்றும், பதஞ்சலியால் நவீன பெகோவா என்றும் குறிப்பிடப்படுகிறது. [9]

இந்திய பஞ்சாயத்து ராஜ் இயக்கத்தை வடிவமைத்தவர்களில் ஒருவரான சிறீமன் நாராயண், அதன் தோற்றத்தைக் "கங்கைக்கும் யமுனைக்கும் இடையே உள்ள தோவாப் பகுதியைக் குடியேற்றத்தின் போது, பிருத்து மன்னரால் இந்த அமைப்பு முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது என்று நம்பப்படுகிறது." [10] என எழுதுகிறார்:

குறிப்புகள்

[தொகு]
  1. Monier Williams Sanskrit-English Dictionary (2008 revision)
  2. Singh p.1712
  3. The Vedas use the Sanskrit word annam meaning generic "food-stuffs". "Annam". Bhaktivedanta VedaBase Network. Archived from the original on 24 June 2010.
  4. Singh p.1713
  5. Pattnaik, Devdutt (2001). The Man Who Was a Woman and Other Queer Tales from Hindu Lore. Haworth Press. p. 55. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781560231813.
  6. www.wisdomlib.org (2013-05-25). "The Kings Vena and Prithu". www.wisdomlib.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-04.
  7. Pattnaik, Devdutt (1807). The Goddess in India: The Five Faces of the Eternal Feminine. India: Asiatic Society of Bengal (Original from Oxford University). pp. 253–5. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780892818075.
  8. Srikrishna Prapnnachari. The Crest Jewel: srimadbhagwata Mahapuran with Mahabharata. Srikrishna Prapnnachari. pp. 94–100. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788175258556.
  9. Singh pp.1713–4
  10. P. 14 Panchayati Raj By Pratap Chandra Swain

உசாத்துணை

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
{{bottomLinkPreText}} {{bottomLinkText}}
பிருத்து
Listen to this article

This browser is not supported by Wikiwand :(
Wikiwand requires a browser with modern capabilities in order to provide you with the best reading experience.
Please download and use one of the following browsers:

This article was just edited, click to reload
This article has been deleted on Wikipedia (Why?)

Back to homepage

Please click Add in the dialog above
Please click Allow in the top-left corner,
then click Install Now in the dialog
Please click Open in the download dialog,
then click Install
Please click the "Downloads" icon in the Safari toolbar, open the first download in the list,
then click Install
{{::$root.activation.text}}

Install Wikiwand

Install on Chrome Install on Firefox
Don't forget to rate us

Tell your friends about Wikiwand!

Gmail Facebook Twitter Link

Enjoying Wikiwand?

Tell your friends and spread the love:
Share on Gmail Share on Facebook Share on Twitter Share on Buffer

Our magic isn't perfect

You can help our automatic cover photo selection by reporting an unsuitable photo.

This photo is visually disturbing This photo is not a good choice

Thank you for helping!


Your input will affect cover photo selection, along with input from other users.

X

Get ready for Wikiwand 2.0 🎉! the new version arrives on September 1st! Don't want to wait?