பிரம்மேசுவரர் கோயில், கிக்கேரி
பிரம்மேசுவரர் கோயில், கிக்கேரி | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | மாண்டியா |
மொழிகள் | |
• அலுவல் | கன்னடம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
பிரம்மேசுவரர் கோயில் (Brahmeshvara Temple) என்பது இந்திய மாநிலமான கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தில் 12 ஆம் நூற்றாண்டில் போசளர் கட்டிடக்கலை பாணியில் கிக்கேரி நகரத்தில் கட்டப்பட்ட ஒரு இந்துக் கோவில் ஆகும். இது, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரமான சரவணபெலகுளாவிலிருந்து 10 கி.மீ தொலைவிலுள்ளது. பொ.ச. 1171இல் போசள மன்னன் முதலாம் வீர நரசிம்மன் ஆட்சியின் போது பொம்மரே நாயகிட்டி என்ற பணக்கார பெண்மணியால் இந்த கோயில் கட்டப்பட்டது. [1] இந்தக் கோயில் இந்திய தொல்பொருள் ஆய்வகத்தின் கர்நாடக மாநில பிரிவின் கீழ் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாகும். [2]
கட்டிடக்கலை
[தொகு]கோயிலின் வடிவமைப்பு தனித்துவமானது. கோயிலின் உட்புறம் அதன் அடிப்பகுதிக்கு அப்பால் அகலப்படுத்தப்பட்டு வெளிப்புற சுவர்கள் குவிந்த வடிவத்தில் வெளியேறுகிறது. இது ஒரு ஒற்றை சன்னதி கட்டுமானமாகும். மண்டபத்தின் ஒரு இடத்தில் இந்துக் கடவுளான சிவனின் நான்கு அடி உயர உருவம் உள்ளது. மண்டபத்தின் தூண்களில் உச்சியின் மீது செதுக்கப்பட்ட மதனிகா சிற்பங்கள் (சலாபஞ்சிகா என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு பெண்ணின் சிற்பத்தை குறிக்கிறது. பகட்டான பெண் அம்சங்களைக் காட்டுகிறது) சிறந்த கலைப் படைப்புகளாகும்.[3]
புகைப்படங்கள்
[தொகு]-
கிக்கேரி, பிரம்மேசுரவரர் கோயிலின் துவாரபாலகர்கள்
-
கோயில் சன்னிதியின் நட்சத்திர அமைப்பு
-
கோயிலின் மண்டபங்கள், வெளிப்புற அலங்காரங்கள்
-
கோயிலின் வெளிப்புற மண்டபம்
-
கோயிலுள்ள கீர்த்தி முகங்கள்
-
கோவிலில் சுவர் சிற்பங்கள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Mandya District Tourism". National Informatics Center, Mandya. Archived from the original on 2012-05-21. பார்க்கப்பட்ட நாள் 2012-06-20.
- ↑ "Protected Monuments in Karnataka". Archaeological Survey of India, Government of India. Indira Gandhi National Center for the Arts. பார்க்கப்பட்ட நாள் 10 August 2012.
- ↑ "Mandya District Tourism". National Informatics Center, Mandya. Archived from the original on 2012-05-21. பார்க்கப்பட்ட நாள் 2012-06-20.
குறிப்புகள்
[தொகு]- Gerard Foekema, A Complete Guide to Hoysala Temples, Abhinav, 1996 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7017-345-0
- Kamath, Suryanath U. (2001) [1980]. A concise history of Karnataka: from pre-historic times to the present. Bangalore: Jupiter books. LCCN 80905179. இணையக் கணினி நூலக மைய எண் 7796041.
- "Mandya District Tourism". National Informatics Center, Mandya. Archived from the original on 2012-05-21. பார்க்கப்பட்ட நாள் 2012-06-20.
வெளி இணைப்புகள்
[தொகு]Text is available under the CC BY-SA 4.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.