தாளவாடி
தாளவாடி, தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்திலுள்ள தாளவாடி வட்டம், தாளவாடி ஊராட்சி ஒன்றியம் மற்றும் தாளவாடி ஊராட்சி ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் வருவாய் கிராமம் ஆகும்.[1]தாளவாடி வருவாய் கிராமம், மாவட்டத் தலைமையிடமான ஈரோட்டிற்கு மேற்கே 103 கிலோ மீட்டர் தொலைவிலும், சத்தியமங்கலத்திலிருந்து 57 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. தாளவாடி, ஈரோடு மாவட்டம் - கர்நாடகாவின் சாமராசநகர் மாவட்டங்களுக்கு இடையே உள்ள காட்டின் எல்லையில் அமைந்துள்ளது. இதனருகே சத்தியமங்கலம் வனவிலங்கு உய்வகம் மற்றும் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. தாளவாடியின் அஞ்சல் சுட்டு எண் 638 461 ஆகும். இதனருகே சத்தியமங்கலம் மற்றும் பவானிசாகர் நகரங்கள் அமைந்துள்ளது. இதனருகில் தெங்குமரஹாடா ஊராட்சி அமைந்துள்ளது.
கல்வி நிலையகள்
[தொகு]- தாளவாடி அரசு மேனிலைப் பள்ளி
- தாளவாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
- தாளவாடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி
மேற்கோள்கள்
[தொகு]மாவட்ட தலைமையகம் | ||
---|---|---|
மாநிலம் | ||
பகுதி | ||
வட்டம் | ||
நகராட்சிகள் | ||
பேரூராட்சிகள் |
| |
ஆறுகள் | ||
சுற்றுலா & ஆன்மிகத் தலங்கள் | ||
சட்டமன்றத் தொகுதிகள் | ||
இணையதளம் |
Text is available under the CC BY-SA 4.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.