தஞ்சாவூர் வீரபத்திரர் கோயில்
வீரபத்திரர் கோயில், தஞ்சாவூரில் அமைந்துள்ளது.
அமைவிடம்
[தொகு]நாயக்கர் காலக் கோயில்களுள் வீரபத்திரர் கோயில் குறிப்பிடத்தக்கதாகும். தஞ்சைக் கோட்டையின் கிழக்கு வாயிலுக்கு எதிரில், அகழிக்கு வெளியே அதனையொட்டி அமைந்துள்ள இரண்டு கோயில்களில் தென் புறம் இக்கோயில் உள்ளது. [1]
வரலாறு
[தொகு]முதல் நாயக்க மன்னராகிய செவ்வப்ப நாயக்கர் காலத்தில் தஞ்சைக்கு வந்த கோவிந்த தீட்சிதர் முதல் மூன்று நாயக்க வேந்தர்களுக்கும் அமைச்சராகவும், ஆசிரியராகவும் ஒட்டக்கூத்தரைப் போல மிகப் புகழ் பெற்று விளங்கினார். இவரே வீரபத்திரர் கோயில் எழக் காரணமாக இருந்திருக்கலாம். [1] இக்கோயில் முன் மண்டபம், மூலவர் கருவறை, இறைவி கருவறை, விமானம் ஆகியவற்றைக் கொண்டு அமைந்துள்ளது. மூலவர் சன்னதிக்கு வலப்புறமாக அம்மன் சன்னதி உள்ளது. உள்ளே நுழையும்போது ஒரு நந்தி காணப்படுகிறது. மூலவர் சன்னதிக்கு எதிரே நந்தியும், பலிபீடமும் உள்ளன.
தேவஸ்தான கோயில்
[தொகு]தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். [2]
இறைவன்
[தொகு]கோயிலின் கருவறையிலுள்ள சுவாமி வாளையும், கேடயத்தையும் ஏந்தியுள்ளார். இத்திருமேனி கர்நாடகப் பாணியில் அமைந்ததாகும். கும்பகோணம் வீரபத்திரர் கோயிலிலுள்ள திருமேனியும் இதனை ஒத்தே காணப்படுகிறது. [1] இக்கோயிலின் மூலவராக அகோர வீரபத்திரர் நின்ற நிலையில் உள்ளார். இறைவி நிஷ்டாம்பிகை ஆவார்.
இவற்றையும் காண்க
[தொகு]அடிக்குறிப்புகள்
[தொகு]தஞ்சாவூர் கோயில்கள் | |
---|---|
மாவட்ட தலைநகரம் | |
மாநிலம் | |
பகுதி | |
சிவன் கோயில்கள் | பெருவுடையார் கோயில் · கைலாசநாதர் கோயில் · பூமால் ராவுத்தர் கோயில் · நாகநாதசுவாமி கோயில் · கொங்கணேஸ்வரர் கோயில் · அய்யங்குளம் விசுவநாதர் கோயில் · ரத்னகிரீஸ்வரர் கோயில் · காசி விசுவநாதர் கோயில் · சிவேந்திரர் கோயில் · மணிகர்ணிகேஸ்வரர் கோயில் · வீரபத்திரர் கோயில் · தெற்கு வீதி காசி விசுவநாதர் கோயில் · மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் · விஜயமண்டப தியாகராஜர் கோயில் · வசிஷ்டேஸ்வரர் கோயில் |
விநாயகர் கோயில்கள் | |
பெருமாள் கோயில்கள் | கோதண்டராமர் கோயில் · தஞ்சை மாமணிக் கோயில் · வரதராஜப்பெருமாள் கோயில் · யோகநரசிம்மப்பெருமாள் கோயில் · கீழ கோதண்டராமர் கோயில் · விஜயராமர் கோயில் · ராஜகோபாலசுவாமி கோயில் · பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில் · கோவிந்தராஜப் பெருமாள் கோயில் · பஜார் ராமர் கோயில் · ஜனார்த்தனப் பெருமாள் கோயில் · தஞ்சாவூர் கலியுக வெங்கடேசப்பெருமாள் கோயில் |
அம்மன் கோயில்கள் | |
அனுமார் கோயில்கள் | |
பிற கோயில்கள் |
Text is available under the CC BY-SA 4.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.