கோளமீன்
கோளமீன் Pufferfish | |
---|---|
வெண்புள்ளி கோளமீன் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
துணைத்தொகுதி: | |
வகுப்பு: | |
துணைவகுப்பு: | Neopterygii
|
உள்வகுப்பு: | Teleostei
|
வரிசை: | Tetraodontiformes
|
குடும்பம்: | Tetraodontidae பொனபார்ட், 1832
|
கோளமீன் (tetraodontidae, pufferfish, balloonfish, blowfish, bubblefish; இலங்கை வழக்கு: பேத்தையன் ) என்பது ஒருவகை மீனினமாகும்.[1] இம்மீனின் உடல் குட்டையாகவும், தடித்த, உருளை வடிவமாக பலூன்போல தோற்றமளிக்கக்கூடியது. இதன் மேலுதடும் கீழுதடும் மற்ற மீன்களைப் போலன்றி கடினமாகவும், அரைக்கோள வடிவமாகவும் இருக்கும். பார்ப்பதற்கு பன்றியின் வாயமைப்பை ஒத்திருக்கும். செதில்களற்ற உடலின் மேல் சிறிதும் பெரிதுமான முட்கள் காணப்படும். ஆபத்தான நேரத்தில் இவை தம் உணவுக் குழலைக் காற்றால் நிரப்பிக் கோள வடிவை அடைகின்றன. அப்போது அதன் தோல் விரிவுற்று, முட்கள் வெளியே நீட்டியபடி, அச்சந்தரும் தோற்றத்துடன் மிதந்து கொண்டிருப்பதால் இதற்கு முள்ளம்பன்றி மீன் என்ற பெயரும் உண்டு. ஜப்பான் கடல் பகுதில் காணப்படும் இவ்வகை மீன்கள் நச்சுத் தன்மை கொண்டதாக உள்ளன.[2] இதன் உடலின் மேல் சிறியதும், பெரியதுமாகக் காணப்படும் முட்களில்தான் விஷம் தேங்கி நிற்கும். இந்த நச்சு தாக்கினால் 24 மணி நேரத்துக்குள் மரணம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த மீன்களின் உடலிலிருக்கும் பாக்டீரியாக்களில் இருந்துதான் இந்த நஞ்சு உருவாகிறது.
ஜப்பானில் இந்த மீன் பிரபல உணவாக உள்ளது. இந்த மீனின் நச்சு முட்களையெல்லாம் வெட்டி எறிந்து விட்டு மசாலை போட்டுப் பொரித்து சாப்பிட்டும், சூப் வைத்தும் குடிக்கிறார்கள். ஜப்பானில் இந்த மீனைக் கொண்டு தயாராகும் சூப்பை ‘பூகு சூப்’ என்கின்றனர். இந்த மீனை வெட்டி, சமைத்துச் சாப்பிட மூன்று ஆண்டுகள் பயிற்சி தரப்படுகிறது, அதன்பிறகு இந்த மீனைச் சமைக்க உரிமம் பெறவேண்டியது அவசியம். உரிமம் பெற ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் தேர்வு எழுதினாலும், சிலர்தான் தேர்ச்சி பெறுகிறார்கள்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Froese, R.; D. Pauly (eds.). "Family Tetraodontidae – Puffers". FishBase. பார்க்கப்பட்ட நாள் 2017-08-23.
- ↑ in Japanese Pufferfish Feeds Search for Pain Drugs வால் ஸ்ட்ர்ட் 30 செப்டம்பர் 2015 சேனல்
- ↑ ஆதலையூர் சூரியகுமார் (8 மார்ச் 2017). "காரணம் ஆயிரம்: விஷ மீன்களின் விருந்து!". கட்டுரை. தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 8 மார்ச் 2017.
((cite web))
: Check date values in:|accessdate=
and|date=
(help)
அ - ஓ | அயிரை மீன் (நொய்) . அகலை . அஞ்சாலை (கடல் பாம்பு) அடுக்குப்பல் சுறா . அதல் . அதவாழன் திருக்கை . அம்பட்டண் கத்தி . அம்புட்டன் வாழ . அமீனீ உளுவை . அயிலை . அரணை மீன் (தும்பிலி) . அவிலி (அவீலீ) . அவுரி மீன் . அறுக்குளா . அனுவ மீன் . அனை . ஆட்கான்டி . ஆற்றிறால் . ஆற்று மீன் . ஆசுக்கர் . இப்பி . இருங்கெளுத்தி . இந்திய இழைத்துடுப்புப் பாரை . உழுவை . உலர் கூனி இறால் . ஊசிக்கணவாய் . ஊசிக்கவலை . ஊசிப்பாரை . ஊட்டான் . எக்காள மீன் . எருமை நாக்கு . எலிச்சூரை . ஏரல் மீன் . ஒட்டி. ஓட்டுக் கணவாய் . ஓரா . ஓலைவாளை |
---|---|
க | கடல் ஊசி மீன் . கட்லா . கடல்விரால் . கடலப்பம் . கடவரை (கடல் விரால்) . கடல் கொவிஞ்சி . கண்ணாடிக் காறல் . கணவாய் மை . கருங்கண்ணி . கருங்கற்றளை . கருந்திரளி . கருந்திரளி . கருமுறைச்செல்வி . கருவண்டன் . கருவாவல் . கருவாளை . கரை மீன் . கல் நவரை . கல்லாரல் . கல் மீன் . கல்பர் விலாங்கு . களவாய் மீன் . கற்றளை . காரல் மீன் . கார்த்திகை வாளை . காலா (மீன்) . காறல் (பொடி மீன்) . கானாங்கெளுத்தி . கிழக்கன் . கிழங்கான் . கிளாத்தி . கிளி மீன் . கீச்சான் மீன் (மொண்டொழியன்) . கீரி மீன் . கீரைமீன் . குஞ்சுப்பாரை . குண்டன் சுறா . குதிப்புக்காறல் . குதிப்பு (சுதும்பு) . கும்டுல் . கும்புளா . குமரிச் சுறா . குருவித் திருக்கை (வெளவால் திருக்கை) . குழிக்காறல் . குளத்து மீன் (நன்னீர் மீன்) . கூந்தா . கூரல் . கூனிப் பாரை . கெண்டை . கெலவல்லா . கெளிறு (கெளுத்தி) . கொட்டிலி . கொடுவா மீன் . கொண்டல் (மீன்) . கொண்டை. கொப்பரன் . கொம்பன் சுறா (உழவாரச்சுறா) . கொம்புத் திருக்கை (கொடுவாத் திருக்கை) . கொய் (நுணலை) . கொள்ளுக் கலவாய் . கொறுக்கை . கோர சுறா . கோரோவா . கோலாக்கெண்டை . கோளமீன் . கோழி மீன் |
ச - வ | சவப்பெட்டி மீன் . சாதாக்கெண்டை மீன் . சாம்பல் நிற மடவை . சிறையா . சீலா மீன் (நெய்மீன்) . சுதும்பு (குதிப்பு) . சுறா . சூடைவலை . சூடை .சூரை . செங்காலை . செவ்விளை . சொர்க்க மீன் . தளபொத்து . திரளி . திருக்கை . சிலேபி . துடுப்பு மீன் . தூண்டில்மீன் . நவரை . நான்கு கண் மீன் . நுரையீரல்மீன் . நெத்திலி . நெய்மீன் . பளயா . பன்னா மீன் . பாரை . பாறை மீன் . பால் மீன் . பாலை மீன் . பழுப்புநிறச் சேற்று மீன் . பிரானா மீன் . புல் கெண்டை மீன் . பெருங்கடல் கதிரவமீன் . பெரும்பாரை . பெரும் திருக்கை . பெளி மீன் . பொறுவா . பொன் மீன் . பேத்தா . மடவை . மண்ணா . மணலை . மத்தி (மீன்) . மிருகால் . மின் விலாங்குமீன் . மின்திருக்கை . மேக்கொங் மாகெளிறு . முண்டான் . முரல் . ரோகு . வங்கவராசி . வஞ்சிரம் . வரிக் கற்றளை . வழுக்குச்சுறா . வளையாமீன் . வாளை மீன் . விரால் மீன் . விரியன் மீன் . விலாங்கு . விளை . வெங்கடைப் பாரை . வெங்கண்ணி (உல்லம்) . வெண்கெண்டை . வெண்கெளிறு . வெண்ணெய்த்தோலி . வெள்ளி அரிஞ்சான் . வெள்ளிக்கெண்டை மீன் . வெள்ளை அரிஞ்சான் . வெள்ளை வாவல் . வெள்ளைக்கிழங்கா . வெள்ளைச் சுறா . வெளவால் மீன் . வேளா மீன் . வேளாச்சுறா . வேளா |
Text is available under the CC BY-SA 4.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.