கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி | |
---|---|
ஆள்கூறுகள்: 11°44′17″N 78°57′43″E / 11.738°N 78.962°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கள்ளக்குறிச்சி |
பகுதி | தொண்டை நாடு |
அரசு | |
• வகை | தேர்வு நிலை நகராட்சி |
• நிர்வாகம் | கள்ளக்குறிச்சி நகராட்சி |
• மக்களவை உறுப்பினர் | கவுதம சிகாமணி |
• சட்டமன்ற உறுப்பினர் | எம். செந்தில்குமார் |
• மாவட்ட ஆட்சியர் | ஷ்ரவன் குமார் ஜடாவத், இ. ஆ. ப |
மக்கள்தொகை (2015) | |
• மொத்தம் | 57,628 |
மொழிகள் | |
• அலுவல்மொழி | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீடு | 606 202 |
தொலைபேசி குறியீடு | 0-4151 |
வாகனப் பதிவு | TN-15 |
சென்னையிலிருந்து தொலைவு | 244 கி.மீ (151 மைல்) |
விழுப்புரத்திலிருந்து தொலைவு | 76 கி.மீ (47 மைல்) |
சேலத்திலிருந்து தொலைவு | 102 கி.மீ (63 மைல்) |
திருச்சியிலிருந்து தொலைவு | 138 கி.மீ (86 மைல்) |
கள்ளக்குறிச்சி (Kallakurichi) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருக்கும் ஒர் தேர்வுநிலை நகராட்சி ஆகும். இதுவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் தலைநகராகவும் விளங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]மதவாரியான கணக்கீடு | ||||
---|---|---|---|---|
மதம் | சதவீதம்(%) | |||
இந்துக்கள் | 83.87% | |||
முஸ்லிம்கள் | 13.4% | |||
கிறிஸ்தவர்கள் | 1.72% | |||
சைனர்கள் | 0.17% | |||
சீக்கியர்கள் | 0.04% | |||
பௌத்தர்கள் | 0.02% | |||
மற்றவை | 0.71% | |||
சமயமில்லாதவர்கள் | 0.08% |
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 21 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 12,801 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 52,507 ஆகும். இந்நகரத்தின் எழுத்தறிவு 86.17% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 984 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 5541 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 902 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே மற்றும்ஆகவுள்ளனர்.[1]
2011 ஆம் ஆண்டு மதவாரியான கணக்கெடுப்பின்படி, கள்ளக்குறிச்சியில் இந்துக்கள் 83.87%, முஸ்லிம்கள் 13.4%, கிறிஸ்தவர்கள் 1.72%, சீக்கியர்கள் 0.04%, பௌத்தர்கள் 0.02%, சைனர்கள் 0.17%, 0.71% பிற மதங்களைப் பின்பற்றுபவர்கள் மற்றும் சமயமில்லாதவர்கள் 0.08% பேர்களும் உள்ளனர்.
முக்கிய சுற்றுலாத் தலங்கள்
[தொகு]கோமுகி அணை, மணிமுக்தா அணை, சின்னதிருப்பதி கோவில், தென்பொன்பரப்பி சிவன் கோவில், ஆஞ்சநேயர் கோவில், கல்வராயன் மலை, மேகம் நீர்வீழ்ச்சி, பெரியார் நீர்வீழ்ச்சி,கவியம் நீர்வீழ்ச்சி, தியாகதுருகம் மலை மற்றும் பழமைவாய்ந்த பீரங்கி குண்டுகள், எஸ். ஒகையூர் பெரிய ஏரி மற்றும் ஒகையூர் பழமைவாய்ந்த சிவன் கோவில், சித்தலூர் பெரியாயி கோவில்.
போக்குவரத்து
[தொகு]சாலைப் போக்குவரத்து
[தொகு]கள்ளக்குறிச்சி நகரில் உள்ள சாலை போக்குவரத்தின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
- தேசிய நெடுஞ்சாலை 79 = உளுந்தூர்பேட்டை - எலவனாசூர்கோட்டை - தியாகதுர்கம் - கள்ளக்குறிச்சி - சின்னசேலம் - தலைவாசல் - ஆத்தூர் - வாழப்பாடி - சேலம்
- திருவண்ணமலையில் இருந்து கள்ளக்குறிச்சி மாநில நெடுஞ்சாலை தற்போது நான்கு வழி சாலையாக மாற்றப்படுகிறது
- மாநில நெடுஞ்சாலை 6 = கள்ளக்குறிச்சி - சங்கராபுரம் - மூங்கில்துறைப்பட்டு - திருவண்ணாமலை
- மாநில நெடுஞ்சாலை 9A = கள்ளக்குறிச்சி - தியாகதுர்கம் - மணலூர்பேட்டை - திருவண்ணாமலை
- மாநில நெடுஞ்சாலை 204 = கள்ளக்குறிச்சி - கண்டாச்சிமங்கலம் - கூத்தங்குடி
- மாவட்ட நெடுஞ்சாலை 811= 24 கி.மீ தியாகதுருகம் - விருகாவூர்- S.ஒகையூர் - அசகளத்தூர் - அடரி.
- மாவட்ட சாலை 135 = கள்ளக்குறிச்சி - மாதவச்சேரி - கொசப்பாடி - சங்கராபுரம்
- மாவட்ட சாலை = கள்ளக்குறிச்சி - ஏரிக்கரை
பேருந்து வசதிகள்
[தொகு]வழி | சேருமிடம் |
---|---|
சென்னை | திருவண்ணாமலை வழியாகவும், உளுந்தூர்பேட்டை , விழுப்புரம் வழியாகவும் இயக்கப்படுகிறது |
உளுந்தூர்பேட்டை மார்க்கம் | உளுந்தூர்பேட்டை, விழுப்புரம், சென்னை, காஞ்சிபுரம், பண்ருட்டி செல்லும் பேருந்துகள் |
சங்கராபுரம் மார்க்கம் | சங்கராபுரம், திருவண்ணாமலை, வேலூர், திருப்பதி, சென்னை, பெங்களூரு, திருக்கோவிலூர் செல்லும் பேருந்துகள் |
தியாகதுர்கம் மார்க்கம் | தியாகதுர்கம், திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் |
வேப்பூர் மார்க்கம் | விருத்தாசலம், நெய்வேலி, கடலூர், புதுச்சேரி, திருச்சி செல்லும் பேருந்துகள் |
சின்னசேலம் மார்க்கம் | சின்னசேலம், ஆத்தூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூரு, ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், உதகை, பாலக்காடு, துறையூர், திருச்சி செல்லும் பேருந்துகள் |
நகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல்
[தொகு]நகராட்சி அதிகாரிகள் | |
---|---|
தலைவர் | சுப்ராயலு |
ஆணையர் | குமரன் |
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் | |
சட்டமன்ற உறுப்பினர் | மா.செந்தில்குமார் |
மக்களவை உறுப்பினர் | தே. மலையரசன் |
கள்ளக்குறிச்சி நகராட்சியானது கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.
2024 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை திராவிட முன்னேற்றக் கழகத்தை (திமுக) சேர்ந்த தே. மலையரசன் வென்றார்.
2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை (அதிமுக) சேர்ந்த மா. செந்தில்குமார் வென்றார்.
தொழிற்சாலைகள்
[தொகு]- கோமுகி சர்க்கரைஆலை
- மூங்கில்துறைபட்டு சர்க்கரைஆலை
- தியாகதுருகம் சர்க்கரைஆலை
- கள்ளக்குறிச்சியை சுற்றி பரவலாக அரிசி ஆலைகள் உள்ளன.
இதனையும் காண்க
[தொகு]- கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சாவுகள், 2024
மேற்கோள்கள்
[தொகு]வெளியிணைப்புக்கள்
[தொகு]- கள்ளக்குறிச்சி நகராட்சி இணையதளம் பரணிடப்பட்டது 2010-06-15 at the வந்தவழி இயந்திரம்
வருவாய் வட்டங்கள் | |
---|---|
ஊராட்சி ஒன்றியங்கள் | |
நகராட்சிகள் | |
பேரூராட்சிகள் | |
சட்டமன்ற நாடாளுமன்றத் தொகுதிகள் | |
இணையதளம் |
Text is available under the CC BY-SA 4.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.