For faster navigation, this Iframe is preloading the Wikiwand page for இர்பான் பதான்.

இர்பான் பதான்

இர்பான் பதான்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்இர்பான் பதான்
உயரம்1.85 m (6 அடி 1 அங்)
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைஇடதுகை வேகப்பந்து வீச்சு, மித வேகப் பந்து வீச்சு
பங்குசகலதுறை
உறவினர்கள்YK Pathan (half-brother)
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 248)டிசம்பர் 12 2003 எ. ஆத்திரேலியா
கடைசித் தேர்வுஏப்ரல் 3 2008 எ. தென்னாப்பிரிக்கா
ஒநாப அறிமுகம் (தொப்பி 153)சனவரி 9 2004 எ. ஆத்திரேலியா
கடைசி ஒநாபபிப்ரவரி 8 2009 எ. இலங்கை
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே.து ஒ.நா மு.த.து ப.அ.து
ஆட்டங்கள் 29 107 87 152
ஓட்டங்கள் 1,105 1,368 2,946 1,870
மட்டையாட்ட சராசரி 31.57 22.80 31.01 22.53
100கள்/50கள் 1/6 0/5 2/18 0/7
அதியுயர் ஓட்டம் 102 83 111* 83
வீசிய பந்துகள் 5,884 5,194 16,348 7,471
வீழ்த்தல்கள் 100 152 301 220
பந்துவீச்சு சராசரி 32.26 29.90 28.99 28.67
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
7 1 14 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
2 n/a 3 n/a
சிறந்த பந்துவீச்சு 7/59 5/27 7/35 5/27
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
8/– 18/– 26/– 27/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், டிசம்பர் 5 2009

இர்பான் கான் பதான் (Irfan Khan Pathan (ஒலிப்பு; பிறப்பு: 27 அக்டோபர் 1984) இந்தியத் துடுப்பாட்ட அணி வீரர் ஆவார். இவர் இந்திய அணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம், தேர்வுத் துடுப்பாட்டம், பன்னாட்டு இருபது20 ஆகிய மூன்று வடிவங்களிலும் விளையாடியுள்ளார். 2003- 2004 ஆண்டில் நடைபெற்ற பார்டர்- சுனில் காவஸ்கர் கோப்பைக்கான போட்டியில் அறிமுகம் ஆனார். ஏப்ரல் 2008 இல் இவர் கடைசியாக தேர்வுத் துடுப்பாட்டத்தில் விளையாடினார்.[1]

துவக்கத்தில் இவர் துயல்பந்து வீசல் மற்றும் விரைவு வீச்சு போன்றவற்றால் அறியப்பட்டார். இவர் வசீம் அக்ரம் போன்றே பந்து வீசுகிறார் என்ற ஒப்பீடு இருந்தது. 2006 ஆம் ஆண்டில் கராச்சியில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்ட போட்டியில் அறிமுகம் ஆனார். முதல்போட்டியில் முதல் ஓவரில் ஹாட்ரிக் இலக்குகள் வீழ்த்தியவர் எனும் சாதனையைப் படைத்தார். பின் இவரின் நிலையில்லாத விளையாட்டுத் திறனால் இந்திய அணியில் இவருக்கு இடம் கிடைக்கவில்லை. பின் 2007 ஐசிசி உலக இருபது20 தொடரில் இவர் இந்திய அணியில் இடம் பிடித்தார்.

இர்பான் பதான், வினோத் காம்ப்ளி மற்றும் லட்சுமண் சிவராமகிருஷ்ணன் ஆகியோர் இந்தியாஸ் லாஸ்ட் பாய்ஸ் என சசி தரூர் குறிப்பிடுகிறார்.[2]

2004 ஆம் ஆண்டில் இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் இவரை ஆண்டின் சிறந்த வீரராக அறிவித்தது. மேலும் 2004 ஆம் ஆண்டில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத் தொடரை இந்திய அணி வெற்றி பெறுவதற்கு மிக முக்கியமான காரணியாக இருந்தார். ஊடகங்களால் இவர் இதியத் துடுப்பாட்ட அணியின் புளூ ஐய்ட் பாய் எனப் புகழப்பட்டார்.[3] 2004 ஆம் ஆண்டின் இறுதியில் வங்காளதேச துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டித் தொடரின் இரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 18 இலக்குகள் எடுத்தார். ஆனால் 2005 ஆம் ஆண்டின் துவக்கத்திலிருந்து சரியான திறனை வெளிப்படுத்தத் தவறினார்.

2005 ஆம் ஆண்டில் கிறெக் சப்பல் இந்தியத் துடுப்பாட்ட அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஆன பின்பு பதானின் திறமையைக் கண்டறிந்தார்.[4] அதன் பின் பந்து வீச்சு மற்றும் துடுப்பாடுவது என இரண்டிலும் கவனம் செலுத்தி சகலத் துறையினராக ஆனார். டிசம்பர் 10,2005 இல் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக புது தில்லியில் நடைபெற்ற தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் 93 ஓட்டங்கள் எடுத்தார்.[4] கிறெக் சப்பலின் தலைமையின் கீழ் சகலத் துறையராக சிறப்பாக செயல்பட்டார். மேலும் எதிரணியின் முக்கிய வீரர்களின் இலக்கினைக் கைப்பற்றினார். பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் சகலத் துறையினருக்கான தரவரிசைப் பட்டியலில் இரண்டாவது இடமும், தேர்வுத் துடுப்பாட்ட பந்து வீச்சாளர் தரவரிசையில் முதல் ஐந்து இடத்திற்குள்ளும் இடம்பிடித்தார். இதனால் துடுப்பாட்ட விமர்சகர்கள் இவரை இந்திய அணியின் முன்னாள் தலைவர் (துடுப்பாட்டம்) மற்றும் பந்து வீச்சாளர் கபில்தேவ் உடன் ஒப்பிட்டனர்.[4]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

இர்பான் பதான் அக்டோபர் 27, 1984 இல் வடோதராவில், குஜராத், இந்தியா பிறந்தார். இவர் குஜராத்திலுள்ள பஷ்தூன் மக்கள் மரபைச் சார்ந்தவர். இவர் வடோதராவில் வறுமையான குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு யூசுப் பதான் எனும் மூத்த சகோதரர் உள்ளார். இவரும் இந்தியத் துடுப்பாட்ட அணிக்காக விளையாடியுள்ளார்.

இவர் சவூதி அரேபியாவிலுள்ள ஜித்தாவைப் பூர்வீகமாகக் கொண்ட சஃபா பெயிக் என்பவரை பெப்ரவரி 4, 2016 இல் மக்காவில் திருமணம் செய்தார்.[5][6] சஃபா , மிர்சா ஃபரூக் பெயிக்கின் மகள் ஆவார். இந்தத் தம்பதிக்கு இம்ரான் கான் பதான் எனும் மகன் உள்ளார்.

சான்றுகள்

[தொகு]
  1. "Cricket Records | India | Records | One-Day Internationals | Most wickets | ESPN Cricinfo". Stats.espncricinfo.com. Archived from the original on 2 மார்ச்சு 2013. பார்க்கப்பட்ட நாள் 29 சூலை 2012.
  2. "Shashi Tharoor". Cricinfo. Archived from the original on 14 நவம்பர் 2012.
  3. "I'll keep knocking on the Indian team's door, says Irfan Pathan". mid-day. 14 மார்ச்சு 2014. Archived from the original on 1 மே 2014.
  4. 4.0 4.1 4.2 Bhattacharya, Rahul (31 May 2004). "Irfan Pathan's excellent adventure". கிரிக்இன்ஃபோ. http://content-aus.cricinfo.com/ci/content/story/141301.html. பார்த்த நாள்: 2006-12-22. 
  5. Irfan Pathan marries model Safa Baig after Virat Kohli's heartbreak : Cricket, News – India Today பரணிடப்பட்டது 9 பெப்பிரவரி 2016 at the வந்தவழி இயந்திரம்
  6. "Irfan Pathan trolled for posting 'unislamic' image with wife". Archived from the original on 18 சூலை 2017.

வெளியிணைப்புகள்

[தொகு]

Irfan Pathan Body Statistics

Irfan Pathan Hat-Trick Wickets

{{bottomLinkPreText}} {{bottomLinkText}}
இர்பான் பதான்
Listen to this article

This browser is not supported by Wikiwand :(
Wikiwand requires a browser with modern capabilities in order to provide you with the best reading experience.
Please download and use one of the following browsers:

This article was just edited, click to reload
This article has been deleted on Wikipedia (Why?)

Back to homepage

Please click Add in the dialog above
Please click Allow in the top-left corner,
then click Install Now in the dialog
Please click Open in the download dialog,
then click Install
Please click the "Downloads" icon in the Safari toolbar, open the first download in the list,
then click Install
{{::$root.activation.text}}

Install Wikiwand

Install on Chrome Install on Firefox
Don't forget to rate us

Tell your friends about Wikiwand!

Gmail Facebook Twitter Link

Enjoying Wikiwand?

Tell your friends and spread the love:
Share on Gmail Share on Facebook Share on Twitter Share on Buffer

Our magic isn't perfect

You can help our automatic cover photo selection by reporting an unsuitable photo.

This photo is visually disturbing This photo is not a good choice

Thank you for helping!


Your input will affect cover photo selection, along with input from other users.

X

Get ready for Wikiwand 2.0 🎉! the new version arrives on September 1st! Don't want to wait?