For faster navigation, this Iframe is preloading the Wikiwand page for இந்திய உளவுத்துறை.

இந்திய உளவுத்துறை

இந்திய உளவு அமைப்பு (ஐ.பி.)
துறை மேலோட்டம்
அமைப்பு1887
தலைமையகம்புதுதில்லி, இந்தியா
குறிக்கோள்जागृतं अहर्निशं (English: Always Alert)
பணியாட்கள்வகைப்பாடு
ஆண்டு நிதி2,384.1 கோடி (US$298.6 மில்லியன்) (2019–2020)[1]
அமைப்பு தலைமை
மூல அமைப்புஇந்திய அரசின் உள்துறை அமைச்சகம்
வலைத்தளம்www.mha.gov.in

இந்திய உளவுத் துறை (ஐ.பி.) (Intelligence Bureau (India) (Intelligence Bureau (IB) என்பது இந்தியாவின் உள்நாட்டு உளவுப் பிரிவாகும்.[2] இந்த உளவு அமைப்பு இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. இதன் தலைமை இயக்குநர் ஒரு இந்தியக் காவல் பணி அதிகாரி ஆவார். இதன் தற்போதைய இயக்குநராக இராஜிவ் ஜெயின் 26 சூன் 2019 முதல் உள்ளார்.[3]

வரலாறு

[தொகு]

பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் இந்த உளவு அமைப்பு, 1885-இல் மேஜர் ஜெனரல் சார்லஸ் மெக் கிரிகோர் தலைமையில் நிறுவப்பட்டது. அப்போதைய இதன் நோக்கம், ருசியாவின் படைகள், பிரித்தானிய இந்தியாவிற்கு எதிராக, ஆப்கானித்தானில் குவிப்பதை கண்காணிப்பதையும், தடுப்பதையும் நோக்கமாக கொண்டிருந்தது. 1909-இல் இலண்டனில் உள்ள இந்திய விடுதியில் தங்கிச் செயல்படும், இந்திய விடுதலைப் புரட்சியாளர்களை கண்காணிக்க இந்த உளவு அமைப்பு பயன்படுத்தப்பட்டது. 1921-இல் இந்த உள்வு அமைப்பின் பெயர் இந்திய அரசியல் உளவு அமைப்பு (Indian Political Intelligence (IPI) எனப்பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்திய விடுதலைக்குப் பின்னர், 1947-ஆம் ஆண்டு முதல் இந்த அமைப்பு, மத்திய உளவு அமைப்பு எனும் பெயரில் இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிற்து.

பொறுப்புகள்

[தொகு]

ஐ.பி. எனப்படும் இந்திய உள்வு அமைப்பு உள்நாட்டு உளவு வேலைகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு பணிகளைச் செய்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது. இதன் உள்வு அதிகாரிகள், பல சட்ட அமலாக்க நிறுவனங்களின் ஊழியர்களைக் கொண்டுள்ளது. பெரும்பாலும் இந்தியக் காவல் பணி, இந்திய வருவாய் பணி (ஐ.ஆர்.எஸ்.) மற்றும் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இருப்பினும் புலனாய்வுப் பணியகத்தின் தலைமை இயக்குநர் (காவல்துறை தலைமை இயக்குநர்) எப்போதும் இந்தியக் காவல்துறையின் காவல்துறை தலைமை இயக்குநர் இ.கா.ப. அதிகாரியாக இருந்து வருகிறார். உள்நாட்டு உளவுத்துறை பொறுப்புகளுக்கு மேலதிகமாக, ஐ.பி. குறிப்பாக எல்லைப் பகுதிகளில் உளவுத்துறை சேகரிப்பதில் பணிபுரிகிறது. 1968-இல் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவு[4] நிறுவப்படும் வரை ஐ.பி. உளவு அமைப்பு 1968 முடிய வெளிநாட்டுப் புலனாய்வு பொறுப்புகளுடன் பணிபுரிந்தது.

நடவடிக்கைகள்

[தொகு]

இந்திய உளவு அமைப்பு துவக்கத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உளவு வேலைகளில் ஈடுபட்டு இருந்த்தாலும், இவ்வமைப்பால் 1962 இந்திய சீன போர் மற்றும் 1965 இந்திய பாகிஸ்தான் போர்க்களைப் பற்றி முன்கூட்டி துப்பறிந்து இந்திய அரசுக்கு செய்தி தெரிவிக்க இயலாமல் போயிற்று. எனவே இவ்வமைப்பிற்கு 1965-இல் உள்நாட்டில் உளவு பணி மேற்கொள்ளும் அதிகாரம் மட்டும் வழங்கப்பட்டு, வெளிநாடுகளில் உள்வுப் பணி மேற்கொள்வதற்கு ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பு நிறுவப்பட்டடது. (Research and Analysis Wing).[5]

நாடு முழுவதும் இந்திய உளவு அமைப்பு 25,000 படையினரைக் கொண்டுள்ளது. மேலும் 3,500 தனியார் அமைப்புகள் இதனுடன் சேர்ந்து செயல்படுகின்றனர்.[6][7]

உளவு அமைப்புக்கு சட்டப் பாதுகாப்பு

[தொகு]

பிரித்தானிய இந்தியா அரசால் இந்த உளவு அமைப்பு 23 டிசம்பர் 1887-இல் நிறுவப்பட்டபோது எவ்வித சட்டத்தின் கீழும் நிறுவப்படவில்லை. எனவே இந்த அமைப்பை சட்டபூர்வமற்ற அமைப்பாக அறிவிக்கக் கோரி 2013-இல் இந்திய உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.[8]

அமைப்பின் தர வரிசைகள்

[தொகு]
பதவிச் சின்னம் உளவு அமைப்பில் பதவிப் பெயர் காவல்துறை பதவிப் பெயர்
தலைமை இயக்குநர், இந்திய உளவு அமைப்பு இந்தியக் காவல் பணி
சிறப்பு இயக்குநர் [a] காவல் தலைமை இயக்குநர்
கூடுதல இயக்குநர் கூடுதல் காவல் தலைமை இயக்குநர்
இணை இயக்குநர் இன்ஸ்பெக்டர் ஜெனரல் (Inspector general of police)
துணை இயக்குர் கூடுதல் இன்ஸ்பெக்டர் ஜெனரல் (Deputy inspector general of police)
கூடுதல் துணை இயக்குநர் மூத்த காவல் கண்காணிப்பாளர்
உதவி இயக்குநர காவல் கண்காணிப்பாளர்
துணை மத்திய குற்றப்புலனாய்வு அதிகாரி கூடுதல் காவல் கண்காணிப்பாளர்
உதவி புலனாய்வு அதிகாரி I துணை கண்காணிப்பாளர்
உதவி புலனாய்வு அதிகாரி II காவல் ஆய்வாளர்
இளநிலை புலனாய்வு அதிகாரி I சார்-ஆய்வாளர்
இளநிலை புலனாய்வு அதிகாரி II உதவி சார்-ஆய்வாளர்
பாதுகாப்பு உதவியாளர் தலைமைக் காவலர்

இதனையும் காண்க

[தொகு]

மேலும் படிக்க

[தொகு]
  • "THE INDIAN POLICE SERVICE (UNIFORM) RULES". 1954. Archived from the original on 16 April 2009. பார்க்கப்பட்ட நாள் 13 September 2010.
  • "World Intelligence and Security Agencies". December 2006. Archived from the original on 2014-06-05. பார்க்கப்பட்ட நாள் 2020-06-09.
  • MacGregor, Lady (Ed.). The Life and Opinions of Major-General Sir Charles MacGregor. 2 vols. 1888, Edinburgh
  • MacGregor, General Sir Charles. The Defence of India. Shimla: Government of India Press. 1884.
  • Kulkarni. Sin of National Conscience. 2005.

அடிக்குறிப்புகள்

[தொகு]
  1. Four Star rank officer

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 4 February 2018. பார்க்கப்பட்ட நாள் 3 February 2018.((cite web)): CS1 maint: archived copy as title (link)
  2. "Intelligence Bureau (IB) - India Intelligence Agencies". Fas.org. 30 May 2008. Archived from the original on 26 November 2012. பார்க்கப்பட்ட நாள் 9 December 2012.
  3. "Balakot strategist Samant Goel is new RAW chief, Kashmir expert Arvind Kumar IB director". India Today. 2019-06-26. https://www.indiatoday.in/india/story/balakot-strategist-samant-goel-is-new-raw-chief-kashmir-expert-arvind-kumar-ib-director-1556415-2019-06-26. 
  4. "Nehchal Sandhu new IB director". Indian Express. 26 November 2010. http://www.indianexpress.com/news/nehchal-sandhu-new-ib-director/716221/. பார்த்த நாள்: 27 March 2012. 
  5. Shaffer, Ryan (2015). "Unraveling India's Foreign Intelligence: The Origins and Evolution of the Research and Analysis Wing". International Journal of Intelligence and CounterIntelligence 28 (2): 252–289. doi:10.1080/08850607.2015.992754. 
  6. "New IB chief has his task cut out - Thaindian News". Thaindian.com. 9 December 2008. Archived from the original on 15 மார்ச் 2010. பார்க்கப்பட்ட நாள் 10 August 2012. ((cite web)): Check date values in: |archive-date= (help)
  7. Sudha Ramachandran. "Security cracks and the remedy". Archived from the original on 6 January 2010.
  8. "Explain Intelligence Bureau's legality, HC tells Centre". The Times of India. 26 March 2012 இம் மூலத்தில் இருந்து 2013-05-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130510183119/http://articles.timesofindia.indiatimes.com/2012-03-26/india/31239443_1_ib-r-n-kulkarni-intelligence-bureau. 

வெளி இணைப்புகள்

[தொகு]
{{bottomLinkPreText}} {{bottomLinkText}}
இந்திய உளவுத்துறை
Listen to this article

This browser is not supported by Wikiwand :(
Wikiwand requires a browser with modern capabilities in order to provide you with the best reading experience.
Please download and use one of the following browsers:

This article was just edited, click to reload
This article has been deleted on Wikipedia (Why?)

Back to homepage

Please click Add in the dialog above
Please click Allow in the top-left corner,
then click Install Now in the dialog
Please click Open in the download dialog,
then click Install
Please click the "Downloads" icon in the Safari toolbar, open the first download in the list,
then click Install
{{::$root.activation.text}}

Install Wikiwand

Install on Chrome Install on Firefox
Don't forget to rate us

Tell your friends about Wikiwand!

Gmail Facebook Twitter Link

Enjoying Wikiwand?

Tell your friends and spread the love:
Share on Gmail Share on Facebook Share on Twitter Share on Buffer

Our magic isn't perfect

You can help our automatic cover photo selection by reporting an unsuitable photo.

This photo is visually disturbing This photo is not a good choice

Thank you for helping!


Your input will affect cover photo selection, along with input from other users.

X

Get ready for Wikiwand 2.0 🎉! the new version arrives on September 1st! Don't want to wait?