For faster navigation, this Iframe is preloading the Wikiwand page for 2009 சூலை 22 சூரிய கிரகணம்.

2009 சூலை 22 சூரிய கிரகணம்

சூலை 22, 2009-இல் நிகழ்ந்த கதிரவ மறைப்பு
Totality from Kurigram District, Bangladesh
Map
மறைப்பின் வகை
இயல்புமுழு மறைப்பு
காம்மா0.0698
அளவு1.0799
அதியுயர் மறைப்பு
காலம்399 வி (6 நி 39 வி)
ஆள் கூறுகள்24°12′N 144°06′E / 24.2°N 144.1°E / 24.2; 144.1
பட்டையின் அதியுயர் அகலம்258 km (160 mi)
நேரங்கள் (UTC)
(P1) பகுதி கிரகணம் துவக்கம்23:58:18
(U1) முழு கிரகணம் துவக்கம்0:51:16
பெரும் மறைப்பு2:36:25
(U4) முழு மறைப்பு முடிவு4:19:26
(P4) பகுதி கிரகணம் முடிவு5:12:25
மேற்கோள்கள்
சாரோசு136 (37 of 71)
அட்டவணை # (SE5000)9528

2009 சூலை 22 சூரிய கிரகணம் (solar eclipse of July 22, 2009) 21ம் நூற்றாண்டின் மிக நீண்ட முழுமையான சூரிய கிரகணம் ஆகும். இந்நிகழ்வு சில இடங்களில் 6 நிமிடங்கள் 39 நொடிகள் வரை நீட்டித்திருந்தது[1]. இந்நிகழ்வைக் காண்பதற்காக கிழக்கு சீனா, நேபாளம், மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு பெருந்தொகையான உல்லாசப்பயணிகளும் வானியல் நோக்கர்களும் சென்றிருந்தனர்[1][2][3].

இந்த கிரகணம் 1991 ஆம் ஆண்டு ஜூலை 11 இல் நிகழ்ந்த பெரும் சூரிய கிரகணத்தைப் போல சாரோசு தொடரின் ஒரு பகுதியாகும். இத்தொடரின் அடுத்த நிகழ்வு 2032 இல் நிகழும்[4].

இந்நிகழ்வானது ஒரே மாதத்தில் நிகழ்ந்த மூன்று கிரகணங்களில் இரண்டாவதாகும். 2009 இல் ஜூலை 7 ஆம் நாளில் சந்திர கிரகணமும் ஆகஸ்ட் 6 ஆம் நாளில் இன்னுமொரு சந்திர கிரகணமும் நிகழ்ந்தன.

சூரியகிரகணம் தெரிந்த இடங்கள்

[தொகு]
தென்கிழக்கு சீனாவில் நிகாழ்ந்த சூரியகிரகணத்தின் செய்மதிப் படம்

வடக்கு மாலை தீவுகள், வடக்கு இந்தியா, கிழக்கு நேபாளம், வடக்கு வங்காள தேசம், பூட்டான், வடக்கு பிலிப்பீன்ஸ், மியான்மாரின் வடக்கு முனை, மத்திய சீனா, பசிபிக் பெருங்கடல் (ரியூகியூ தீவுகள், மார்ஷல் தீவுகள், கிரிபட்டி உட்பட) ஆகிய இடங்களில் சூரிய கிரகணத்தை அவதானிக்க முடிந்தது.

இந்தியாவில்

[தொகு]

முழுமையான கிரகணம் இந்தியாவின் சூரத், உஜ்ஜைன், இந்தூர், போபால், வாரணாசி, அலகாபாத், கயா, பாட்னா, ஜல்பைகுரி, குவஹாத்தி, இடாநகர் ஆகிய நகரங்களில் காணக்கூடியதாக இருந்தது[5]. பீகாரின் டரெகானா நகரிலேயே மிக அழகான சூரிய கிரகணம் தென்படும் என எதிர்வு கூறப்பட்டது[6][7]. தரெக்னாவில் ஏராளமான விண்வெளி ஆர்வலர்களும், சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும், முக்கியப் பிரமுகர்களும் சூரிய கிரகணத்தைக் காண பெருமளவில் கூடியிருந்தார்கள்[8].

இலங்கையில்

[தொகு]

இலங்கையில் சூரிய கிரகணத்தை நாட்டின் வெவ்வேறு பிரதேசங்களில் அவதானிக்க முடிந்தது. கொழும்பு, யாழ்ப்பாணம், காலி உட்பட பல இடங்களில் இச்சூரிய கிரகணம் பகுதியாகத் தென்பட்டது. யாழ். குடா நாட்டில் காலை 5.58 மணி முதல் காலை 7.15 மணி வரையும் கொழும்பில் காலை 6.03 மணி முதல் 7.12 மணி வரையும் காலியில் காலை 6.03 மணி முதல் காலை 7.11 மணி வரையும் தென்பட்டது[9]

படிமங்கள்

[தொகு]

முழு கிரகணம்

[தொகு]

பகுதி கிரகணம்

[தொகு]

தொடர்பான மறைப்புகள்

[தொகு]

சாரோசு 136

[தொகு]

சாரோசு தொடர் 136 என்பது 18 ஆண்டுகள், 11 நாட்களுக்கு ஒரு தடவை இடம்பெறும் 71 கதிரவ மறைப்புகளின் நிகழ்வுகளாகும். சாரோசு தொடர் 1360 சூன் 14 இல் பகுதி மறைப்பாக ஆரம்பமானது. 1504 செப்டம்பர் 8 இல் முதலாவது வலயக் கதிரவ மறைப்பு நிகழ்ந்தது. இது ஒரு கலப்பு நிகழ்வாக 1612 நவம்பர் 22 முதல் 1703 சனவரி 17 வரை நிகழ்ந்து, முழுமையான கதிரவ மறைப்பாக 1721 சனவரி 27 இல் ஆரம்பித்தது. முழுமையான மறைப்பு 2496 மே 13 வரை தொடரும் இத்தொடர் 2622 சூலை 30 இல் பகுதி மறைப்பாக 71-ஆவது நிகழ்வாக முடிவடையும். இதன்மூலம் 1360 இல் ஆரம்பித்த இத்தொடர் 1262 ஆண்டுகளின் பின்னர் 2496 ஆம் ஆண்டில் நிறைவடையும். இத்தொடரின் மிக நீண்ட முழு மறைப்பு 1955 சூன் 20 இல் நிகழ்ந்தது. மொத்தம் 7 நிமிடங்கள், 7.74 செக்கன்கள் இது நீடித்தது. இந்தத் தொடரில் உள்ள அனைத்து கதிரவ மறைப்புகளும் நிலாவின் சந்திரனின் இறங்கு கணுவில் நிகழ்கின்றன.[10]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "AFP: Solar eclipse sparks tourism fever in China". Archived from the original on 2009-07-27. பார்க்கப்பட்ட நாள் 2009-07-27.
  2. Scientists: China the best place to observe longest solar eclipse in 2,000 years_English_Xinhua
  3. Indian students on solar eclipse 'odyssey' to China
  4. NASA: Total Solar Eclipses with Durations Exceeding 06m 00s (2001 to 3000 )
  5. NASA - Total Solar Eclipse of 2009 July 22
  6. Eclipse gives Bihar village its days in the sun
  7. Longest & Total Solar Eclipse 2009: NASA declares Taregana in Bihar is the Best Location to View Surya Grahan
  8. 'I'll remember eclipse all my life'
  9. இலங்கை உட்பட ஆசிய நாடுகளெங்கும் தென்பட்ட அபூர்வ சூரிய கிரகணம்; மக்கள் ஆர்வத்துடன் அவதானிப்பு[தொடர்பிழந்த இணைப்பு], தினகரன்
  10. SEsaros136 at NASA.gov

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Solar eclipse of 2009 July 22
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
{{bottomLinkPreText}} {{bottomLinkText}}
2009 சூலை 22 சூரிய கிரகணம்
Listen to this article

This browser is not supported by Wikiwand :(
Wikiwand requires a browser with modern capabilities in order to provide you with the best reading experience.
Please download and use one of the following browsers:

This article was just edited, click to reload
This article has been deleted on Wikipedia (Why?)

Back to homepage

Please click Add in the dialog above
Please click Allow in the top-left corner,
then click Install Now in the dialog
Please click Open in the download dialog,
then click Install
Please click the "Downloads" icon in the Safari toolbar, open the first download in the list,
then click Install
{{::$root.activation.text}}

Install Wikiwand

Install on Chrome Install on Firefox
Don't forget to rate us

Tell your friends about Wikiwand!

Gmail Facebook Twitter Link

Enjoying Wikiwand?

Tell your friends and spread the love:
Share on Gmail Share on Facebook Share on Twitter Share on Buffer

Our magic isn't perfect

You can help our automatic cover photo selection by reporting an unsuitable photo.

This photo is visually disturbing This photo is not a good choice

Thank you for helping!


Your input will affect cover photo selection, along with input from other users.

X

Get ready for Wikiwand 2.0 🎉! the new version arrives on September 1st! Don't want to wait?