For faster navigation, this Iframe is preloading the Wikiwand page for 108 வைணவத் திருத்தலங்கள்.

108 வைணவத் திருத்தலங்கள்

திருமால்

திவ்ய தேசங்கள் (Divya Desam) என்பது 108 வைணவத் திருத்தலங்களைக் குறிக்கும். பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்ற சிறப்புமிக்க வைணவத் திருத்தலங்கள் திவ்ய தேசம் எனவும், திவ்ய தேசங்களைப் பற்றிய பாடல்கள் மங்களாசாசனம் எனவும் அழைக்கப்படுகின்றன.

ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற திருத்தலங்கள் 108 ஆகும். அவையே 108 திவ்ய தேசங்கள் எனப்படுகின்றன. இவற்றில் 105 தலங்கள் இந்தியாவிலும், ஒன்று நேபாளிலும் உள்ளன.இவற்றைத் தவிர மற்ற 2 தலங்கள் வானுலகிலும் உள்ளன. 108 தலங்களுக்கும் தம் வாழ்நாளில் சென்று அத்தலத்திற்குரிய பாடல்களைப் பாடுதல் ஒரு வைணவ சமய வழிபாடாக உள்ளது.

தொகுப்பு

[தொகு]

வைணவத் திருத்தலங்கள் 108 என்று தொகுத்துக் காட்டியவர் அழகிய மணவாள தாசர். இவர் திருமலை நாயகர்[1] ஆட்சியில் அலுவலராகப் பணியாற்றியவர். இவர் தம் காலத்தில் சிறப்புற்று விளங்கிய வைணவத் தலங்களை 108 என்று வரையறை செய்துகொண்டு, அவை இருந்த நாடு வாரியாப் பிரித்துக்கொண்டு, ஒவ்வொரு ஊருக்கும் ஒரு வெண்பா பாடியுள்ளார். அது நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி என்னும் நூலாக வெளிவந்துள்ளது.[2]

திவ்ய தேச வகைப்பாடு

[தொகு]

திவ்ய தேசங்கள் அக்காலத்தில் இருந்த அரசுகளின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன.

  • சோழநாட்டு திருப்பதிகள் - 40
  • நடுநாட்டு திருப்பதிகள் - 2
  • தொண்டைநாட்டு திருப்பதிகள் - 22
  • வடநாட்டு திருப்பதிகள் - 11
  • மலைநாட்டுத் திருப்பதிகள் - 13
  • பாண்டியநாட்டுத் திருப்பதிகள் - 18
  • நில உலகில் காணமுடியாத திருப்பதிகள் - 2

108 வைணவத் திருத்தலங்கள்

[தொகு]

108 வைணவத் திருத்தலங்களில்

அமையப் பெற்றுள்ளன.

தொடர் எண் தலக்குறிப்புகள் பெருமாள் - தாயார் பாசுரங்கள் திருக்கோலம் திருமுகமண்டலம் அமைவிடம் நாடு
01. திருவரங்கம் அரங்கநாதர் அரங்கநாயகி 247 கிடந்த தெற்கு தமிழகம் - திருச்சி சோழநாடு
02. திருக்கோழி, (உறையூர் பகுதி) அழகிய மணவாளன் - வாசலட்சுமி(நாச்சியார்) 002 நின்ற வடக்கு தமிழகம்-திருச்சி சோழநாடு
03. உத்தமர் கோயில் புருஷோத்தமன் - பூர்ணவல்லி 001 கிடந்த கிழக்கு தமிழகம்-திருச்சி சோழநாடு
04. திருவெள்ளறை புண்டரீகாட்சன் - பங்கயச் செல்வி 024 நின்ற கிழக்கு தமிழகம்-திருச்சி சோழநாடு
05. அன்பில் சுந்தரராஜபெருமாள் வடிவழகியநம்பி - அழகியவல்லி 001 கிடந்த கிழக்கு தமிழகம்-திருச்சி சோழநாடு
06. கோயிலடி அப்பக்குடத்தான் - இந்திராதேவி (கமலவல்லி) 033 கிடந்த மேற்கு தமிழகம்-திருச்சி சோழநாடு
07. திருக்கண்டியூர் ஹர சாப விமோசன பெருமாள் கோயில் ஹரசாபவிமோசனர் - கமலவல்லி 001 நின்ற கிழக்கு தமிழகம்-தஞ்சை சோழநாடு
08. திருக்கூடலூர் (கூடலூர்-ஆடுதுறை) ஜகத்ரட்சகன் - பத்மாசானவல்லி 010 நின்ற கிழக்கு தமிழகம்-குடந்தை சோழநாடு
09. கபிஸ்தலம் கஜேந்திரவரதர் - ரமாமணிவல்லி 001 கிடந்த கிழக்கு தமிழகம்-குடந்தை சோழநாடு
10. புள்ளபூதங்குடி வல்வில் ராமன் - பொற்றாமறையாள் 010 கிடந்த கிழக்கு தமிழகம்-குடந்தை சோழநாடு
11. ஆதனூர் ஆண்டளக்கும் ஐயன் கோயில் ஆண்டளக்குமய்யன் - ஸ்ரீரங்கநாயகி 001 கிடந்த கிழக்கு தமிழகம்-குடந்தை சோழநாடு
12. கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயில் சாரங்கபாணி, ஆராவமுதன் - கோமளவல்லி 051 கிடந்த கிழக்கு தமிழகம்-குடந்தை சோழநாடு
13. ஒப்பிலியப்பன் ஒப்பிலியப்பன் - பூமிதேவி 047 நின்ற கிழக்கு தமிழகம்-குடந்தை சோழநாடு
14. நாச்சியார்கோயில் நறையூர்நம்பி - நம்பிக்கை நாச்சியார் 110 நின்ற கிழக்கு தமிழகம்-குடந்தை சோழநாடு
15. திருச்சேறை சாரநாதப்பெருமாள் கோயில் சாரநாதன் - சாரநாயகி 013 நின்ற கிழக்கு தமிழகம்-குடந்தை சோழநாடு
16. நாதன் கோயில் திருநந்திபுரவிண்ணகரம் ஜகந்நாதர் - செண்பகவல்லி 010 இருந்த கிழக்கு தமிழகம்-குடந்தை சோழநாடு
17. திருவெள்ளியங்குடி கோலவில்லி ராமர் - மரகதவல்லி 010 கிடந்த கிழக்கு தமிழகம்-குடந்தை சோழநாடு
18. திருக்கண்ணமங்கை பக்தவத்சலன் - அபிஷேகவல்லி 014 நின்ற கிழக்கு தமிழகம்-குடந்தை சோழநாடு
19. திருக்கண்ணபுரம் சௌரிராஜன் - கண்ணபுரநாயகி 128 நின்ற கிழக்கு தமிழகம்-சீர்காழி சோழநாடு
20. திருக்கண்ணங்குடி லோகநாதன் - லோகநாயகி 010 நின்ற கிழக்கு தமிழகம்-சீர்காழி சோழநாடு
21. திருநாகை (நாகப்பட்டினம்) சௌந்தர்யராஜன் - சௌந்தர்யவல்லி 010 நின்ற கிழக்கு தமிழகம்-நாகப்பட்டினம் சோழநாடு
22. திருத்தஞ்சை மாமணிக் கோயில் நீலமேகம் - செங்கமலவல்லி 005 இருந்த கிழக்கு தமிழகம்-தஞ்சை சோழநாடு
23. தேரழுந்தூர் ஆமருவியப்பன் கோயில் ஆமருவியப்பன் - செங்கமலவல்லி 045 நின்ற கிழக்கு தமிழகம்-குத்தாலம் சோழநாடு
24. திருச்சிறுபுலியூர் தலசயனப்பெருமாள் கோயில் அருள்மாகடல் - திருமாமகள் 010 கிடந்த தெற்கு தமிழகம்-சீர்காழி சோழநாடு
25. தலைச்சங்காடு நாண்மிதியப்பெருமாள்- தலைச்சங்கநாச்சியார் 002 நின்ற கிழக்கு தமிழகம்-சீர்காழி சோழநாடு
26. திருஇந்தளூர், மாயவரம் பரிமளரங்கநாதர் - புண்டரீகவல்லி 011 கிடந்த கிழக்கு தமிழகம்-மாயவரம் சோழநாடு
27. திருக்காழிச்சீராம விண்ணகரம், சீர்காழி தாடாளன் - லோகநாயகி 010 நின்ற கிழக்கு தமிழகம்-சீர்காழி சோழநாடு
28. திருக்காவளம்பாடி கோபாலக்ருஷ்ணன் செங்கமலநாச்சியார்; 010 நின்ற கிழக்கு தமிழகம்-சீர்காழி சோழநாடு
29. அரிமேய விண்ணகரம் குடமாடுகூத்தர் - அம்ருதகடவல்லி 010 நின்ற கிழக்கு தமிழகம்-சீர்காழி சோழநாடு
30. வண்புருடோத்தமம் புருஷோத்தமர் - புருஷோத்தமநாயகி 010 நின்ற கிழக்கு தமிழகம்-சீர்காழி சோழநாடு
31. செம்பொன் செய்கோயில் செம்பொன்னரங்கர் - சுவேதபுஷ்பவல்லி 010 நின்ற கிழக்கு தமிழகம்-சீர்காழி சோழநாடு
32. திருமணிமாடக் கோயில் சாச்வததீபநாராயணர் - புண்டரீகவல்லி 012 இருந்த கிழக்கு தமிழகம்-சீர்காழி சோழநாடு
33. வைகுந்த விண்ணகரம் வைகுண்டநாதர் - வைகுண்டவல்லி 010 இருந்த கிழக்கு தமிழகம்-சீர்காழி சோழநாடு
34. திருத்தெற்றியம்பலம் செங்கண்மால் - செங்கமலவல்லி 010 கிடந்த கிழக்கு தமிழகம்-சீர்காழி சோழநாடு
35. திருமணிக்கூடம் மணிக்கூடநாயகன் - திருமகள் நாச்சியார் 010 நின்ற கிழக்கு தமிழகம்-சீர்காழி சோழநாடு
36. திருப்பார்த்தன் பள்ளி தாமரைநாயகி - தாமரையாள் கேள்வன் 010 நின்ற மேற்கு தமிழகம்-சீர்காழி சோழநாடு
37. திருவாழி-திருநகரி கோயில்கள் வயலாளி மணவாளன் – அம்ருதகடவல்லி, வேதராஜன் - அமிர்தவல்லி 042 இருந்த மேற்கு தமிழகம்-சீர்காழி சோழநாடு
38. திருத்தேவனார்த் தொகை தேவநாயகர் - சமுத்ரதனயா 010 நின்ற கிழக்கு தமிழகம்-சீர்காழி சோழநாடு
39. திருவெள்ளக்குளம் சீநிவாசன் - பத்மாவதி 010 நின்ற கிழக்கு தமிழகம்-சீர்காழி சோழநாடு
40. திருச்சித்ரகூடம், சிதம்பரம் கோவிந்தராஜர் - புண்டரீகவல்லி 032 கிடந்த கிழக்கு தமிழகம்-சீர்காழி சோழநாடு
41. திருவந்திபுரம் தேவநாதன் - ஹேமாப்ஜவல்லி 010 நின்ற கிழக்கு தமிழகம்-கடலூர் நடுநாடு
42. திருக்கோவிலூர் திரிவிக்ரமன் - பூங்கோவல்நாச்சியார் 021 நின்ற கிழக்கு தமிழகம்-கடலூர் நடுநாடு
43. திருக்கச்சி வரதராஜன் - பெருந்தேவி 007 நின்ற மேற்கு தமிழகம்-காஞ்சி தொண்டை நாடு
44. அட்டபுயக்கரம் ஆதிகேசவன் - அலர்மேல்மங்கை 012 நின்ற மேற்கு தமிழகம்-காஞ்சி தொண்டை நாடு
45. திருத்தண்கா (தூப்புல்) தீபப்பிரகாசர் - மரகதவல்லி 002 நின்ற மேற்கு தமிழகம்-காஞ்சி தொண்டை நாடு
46. திருவேளுக்கை அழகிய சிங்க பெருமாள் கோயில் முகுந்தநாயகன் - வேளுக்கைவல்லி 004 இருந்த மேற்கு தமிழகம்-காஞ்சி தொண்டை நாடு
47. திருநீரகம் (காஞ்சி) ஜகதீசப்பெருமாள் - நிலமங்கைவல்லி 001 நின்ற தெற்கு தமிழகம்-காஞ்சி தொண்டை நாடு
48. திருப்பாடகம் (காஞ்சி) பாண்டவ தூதர் - ருக்மணி,சத்யபாமா 006 இருந்த கிழக்கு தமிழகம்-காஞ்சி தொண்டை நாடு
49. திரு நிலாத்திங்கள் துண்டம் (காஞ்சி) நிலாத்திங்கள்துண்டத்தான் - நேரொருவரில்லாவல்லி 001 நின்ற மேற்கு தமிழகம்-காஞ்சி தொண்டை நாடு
50. திரு ஊரகம் (காஞ்சி) உலகளந்தபெருமாள் - அம்ருதவல்லி 006 நின்ற மேற்கு தமிழகம்-காஞ்சி தொண்டை நாடு
51. திருவெக்கா (காஞ்சி) யதோத்தகாரி - கோமளவல்லி 015 கிடந்த மேற்கு தமிழகம்-காஞ்சி தொண்டை நாடு
52. திருக்காரகம் (காஞ்சி) கருணாகரர் - பத்மாமணி 001 நின்ற தெற்கு தமிழகம்-காஞ்சி தொண்டை நாடு
53. திருக்கார்வானம் (காஞ்சி) கள்வர்பெருமாள் - கமலவல்லி 001 நின்ற மேற்கு தமிழகம்-காஞ்சி தொண்டை நாடு
54. திருக்கள்வனூர் (காஞ்சி) ஆதிவராஹர் - அஞ்சிலைவல்லி 001 நின்ற மேற்கு தமிழகம்-காஞ்சி தொண்டை நாடு
55. திருப்பவள வண்ணம் (காஞ்சி) பவளவண்ணப்பெருமாள் - பவளவல்லிநாச்சியார் 001 நின்ற மேற்கு தமிழகம்-காஞ்சி தொண்டை நாடு
56. திருப்பரமேச்சுர விண்ணகரம் பரமபதநாதன் - வைகுந்தவல்லி 010 இருந்த மேற்கு தமிழகம்-காஞ்சி தொண்டை நாடு
57. திருப்புட்குழி விஜயராகவன் - மரகதவல்லி 002 இருந்த கிழக்கு தமிழகம்-காஞ்சி தொண்டை நாடு
58. திருநின்றவூர் பத்தவத்சலர் - சுதாவல்லி 002 நின்ற கிழக்கு தமிழகம்-சென்னை தொண்டை நாடு
59. திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் கோயில் [3][4] வைத்ய வீரராகவர் - கனகவல்லி 012 கிடந்த கிழக்கு தமிழகம்-சென்னை தொண்டை நாடு
60. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி - ருக்மணி 012 நின்ற கிழக்கு தமிழகம்-சென்னை தொண்டை நாடு
61. திருநீர்மலை நீர்வண்ணபெருமாள் - அணிமாமலர்மங்கை 020 நின்ற கிழக்கு தமிழகம்-சென்னை தொண்டை நாடு
62. திருவிடவெந்தை நித்யகல்யாணர் - கோமளவல்லி 013 நின்ற கிழக்கு தமிழகம்-சென்னை தொண்டை நாடு
63. திருக்கடல்மல்லை ஸ்தல சயனப்பெருமாள் - நிலமங்கை நாச்சியார் 027 கிடந்த கிழக்கு தமிழகம்-சென்னை தொண்டை நாடு
64. திருக்கடிகை (சோளிங்கர்) யோகநரசிம்மர் - அம்ருதவல்லி 004 இருந்த கிழக்கு தமிழகம்-சென்னை தொண்டை நாடு
65. திருவயோத்தி காேதண்டராமர் - சீதாபிராட்டி 013 இருந்த வடக்கு உத்தரப் பிரதேசம் வடநாடு
66. நைமிசாரண்யம் தேவராஜன் - ஹரிலட்சுமி 010 நின்ற கிழக்கு உத்தரப் பிரதேசம் வடநாடு
67. திருப்பிரிதி பரமபுருஷன் - பரிமளவல்லி 010 கிடந்த கிழக்கு உத்தராகண்டம் வடநாடு
68. தேவப்ரயாகை திருகண்டமெனும் கடிநகர் நீலமேகம் - புண்டரீகவல்லி 011 நின்ற கிழக்கு உத்தராகண்டம் வடநாடு
69. திருவதரியாச்சிரமம் பத்ரீநாராயணனன் - அரவிந்தவல்லி 022 இருந்த கிழக்கு உத்தராகண்டம் வடநாடு
70. திருச்சாளக்கிராமம் ஸ்ரீமூர்த்தி - ஸ்ரீதேவி 012 நின்ற வடக்கு நேபாளம் வடநாடு
71. திருவடமதுரை கோவர்த்தனகிரிதாரி - சத்யபாமா 050 நின்ற கிழக்கு உத்தரப் பிரதேசம் வடநாடு
72. திருவாய்ப்பாடி கரிகிருஷ்ணப் பெருமாள் - ருக்மணி, சத்யபாமா 022 நின்ற கிழக்கு உத்தரப் பிரதேசம் வடநாடு
73. திருத்துவாரகை கல்யாணநாராயணன் - கல்யாணநாச்சியார் 013 நின்ற மேற்கு குஜராத் வடநாடு
74. அகோபிலம் (சிங்கவேள்குன்றம்) லட்சுமிநரசிம்மர் - செஞ்சுலட்சுமி 010 இருந்த கிழக்கு ஆந்திரம் வடநாடு
75. திருவேங்கடம் திருவேங்கடமுடையான் - அலர்மேல்மங்கை 202 நின்ற கிழக்கு ஆந்திரம் வடநாடு
76. திருநாவாய் நாராயணன் - மலர்மங்கை நாச்சியார் 013 நின்ற கிழக்கு கேரளம் - திருச்சூர் மலைநாடு
77. திருவித்துவக்கோடு உய்யவந்த பெருமாள் - வித்துவக்கோட்டுவல்லி 010 நின்ற தெற்கு கேரளம்-திருச்சூர் மலைநாடு
78. திருக்காட்கரை காட்கரையப்பன் - வாத்ஸல்யவல்லி 011 நின்ற தெற்கு கேரளம்-எர்ணாகுளம் மலைநாடு
79. திருமூழிக்களம் திருமூழிக்களத்தான் - மதுரவேணி 014 நின்ற கிழக்கு கேரளம் -கோட்டயம் மலைநாடு
80. திருவல்லவாழ் கோலப்பிரான் - செல்வத்திருக்கொழுந்து 022 இருந்த கிழக்கு கேரளம் - கோட்டயம் மலைநாடு
81. திருக்கடித்தானம் அற்புதநாராயணன் - கற்பகவல்லி நாச்சியார் 011 நின்ற கிழக்கு கேரளம் - கோட்டயம் மலைநாடு
82. திருச்செங்குன்றூர் இமையவரப்பன் - செங்கமலவல்லி 011 நின்ற மேற்கு கேரளம் - கோட்டயம் மலைநாடு
83. திருப்புலியூர் மாயப்பிரான் - பொற்கொடிநாச்சியார் 012 நின்ற கிழக்கு கேரளம் - கோட்டயம் மலைநாடு
84. திருவாறன்விளை திருக்குறளப்பன் - பத்மாசனி 011 நின்ற கிழக்கு கேரளம் - கோட்டயம் மலைநாடு
85. திருவண்வண்டூர் பாம்பணையப்பன் - கமலவல்லி 011 நின்ற மேற்கு கேரளம் - கோட்டயம் மலைநாடு
86. திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில் அனந்தபத்மநாபன் - ஸ்ரீஹரிலட்சுமி 011 கிடந்த கிழக்கு கேரளம்-திருவனந்தபுரம் மலைநாடு
87. திருவட்டாறு ஆதிகேசவன் - மரகதவல்லி 011 கிடந்த மேற்கு தமிழகம்-கன்னியாகுமரி மலைநாடு
88. திருவண்பரிசாரம் (திருப்பதிசாரம்) கமலவல்லி - திருக்குறளப்பன் 001 இருந்த கிழக்கு தமிழகம்-கன்னியாகுமரி மலைநாடு
89. திருக்குறுங்குடி வைஷ்ணவ நம்பி - குறுங்குடிவல்லி 040 நின்ற கிழக்கு தமிழகம்-நெல்லை பாண்டிய நாடு
90. வானமாமலை தோத்தாத்ரி நாதர் - சிரீவரமங்கை 011 இருந்த கிழக்கு தமிழகம்-நெல்லை பாண்டிய நாடு
91. ஸ்ரீவைகுண்டம்
நவதிருப்பதி
கள்ளப்பிரான் - வைகுந்தவல்லி 002 நின்ற கிழக்கு தமிழகம்-நெல்லை பாண்டிய நாடு
92. திருவரகுணமங்கை (நத்தம்)
நவதிருப்பதி
விஜயாசனர் - வரகுணவல்லி 001 இருந்த கிழக்கு தமிழகம்-நெல்லை பாண்டிய நாடு
93. திருப்புளிங்குடி
நவதிருப்பதி
காய்ச்சினவேந்தன் - மலர்மகள் 012 கிடந்த கிழக்கு தமிழகம்-நெல்லை பாண்டிய நாடு
94. திருத்துலைவில்லி மங்கலம்
இரட்டைத் திருப்பதி
நவதிருப்பதி
அரவிந்தலோசநர் - விசாலக்ருஷ்ணாக்ஷி 011 நின்ற கிழக்கு தமிழகம்-நெல்லை பாண்டிய நாடு
95. திருக்குளந்தை
நவதிருப்பதி
மாயக்கூத்தர் - குளந்ததைவல்லி (அலமேலுமங்கை) 001 நின்ற கிழக்கு தமிழகம்-நெல்லை பாண்டிய நாடு
96. திருக்கோளூர்
நவதிருப்பதி
வைத்தமாநிதி - கோளூர்வல்லி 012 கிடந்த கிழக்கு தமிழகம்-நெல்லை பாண்டிய நாடு
97. திருப்பேரை
நவதிருப்பதி
மகரநெடுங்குழைக்காதர் - குழைக்காதுவல்லி நாச்சியார் 011 இருந்த கிழக்கு தமிழகம்-நெல்லை பாண்டிய நாடு
98. ஆழ்வார்திருநகரி ஆதிநாதன் கோயில், திருக்குருகூர்
நவதிருப்பதி
ஆதிநாதர் - ஆதிநாதவல்லி 011 நின்ற கிழக்கு தமிழகம்-நெல்லை பாண்டிய நாடு
99. ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி - ஆண்டாள் 002 கிடந்த கிழக்கு தமிழகம்-மதுரை பாண்டிய நாடு
100. திருத்தண்கால் தண்காலப்பன் - அன்னநாயகி 005 நின்ற கிழக்கு தமிழகம்-மதுரை பாண்டிய நாடு
101. கூடல் அழகர் கோயில் கூடலழகர் - மதுரவல்லி 002 இருந்த கிழக்கு தமிழகம்-மதுரை பாண்டிய நாடு
102. திருமாலிருஞ்சோலை அழகர் - சுந்தரவல்லி 128 நின்ற கிழக்கு தமிழகம்-மதுரை பாண்டிய நாடு
103. திருமோகூர் காளமேகம் - மோகனவல்லி 012 நின்ற கிழக்கு தமிழகம்-மதுரை பாண்டிய நாடு
104. திருக்கோஷ்டியூர் சௌம்யநாராயணர் - மகாலட்சுமி 039 கிடந்த கிழக்கு தமிழகம்-திருகோஷ்டியூர் பாண்டிய நாடு
105. திருப்புல்லாணி கல்யாணஜகந்நாதர் - கல்யாணவல்லி 021 நின்ற கிழக்கு தமிழகம்-இராமநாதபுரம் பாண்டிய நாடு
106. திருமெய்யம் சத்யகிரிநாதன் - உஜ்ஜீவன நாச்சியார் 009 நின்ற தெற்கு தமிழகம்-சிவகங்கை பாண்டிய நாடு
107. திருப்பாற்கடல் பிரசன்ன வெங்கடேச பெருமாள் - கடலமகள் நாச்சியார் 051 வானுலகம் வானுலகம்
108. பரமபதம் பரமபதநாதர் - பெரியபிராட்டியார் 036 வானுலகம் வானுலகம்

பெருமாள் பார்வை படும் திசைகள்

[தொகு]

108 திவ்ய தேசங்களில் பெருமாள் அட்டவணையில் கண்டுள்ள திசைகளில் அருள்பாலிக்கிறார்.

பார்வை படும் திசை திவ்ய தேசங்கள்
கிழக்கு 79
மேற்கு 19
வடக்கு 3
தெற்கு 7
மண்டலம் திவ்ய தேசங்கள்
சோழ நாடு 40
நடுநாடு 2
தொண்டை நாடு 22
வட நாடு 11
மலை நாடு 13
பாண்டிய நாடு 18
வானுலகம் 2

படத்தொகுப்பு

[தொகு]

காண்க

[தொகு]

செயலி 

[தொகு]

108 திவ்ய தேசம் செயலி 

வெளி இணைப்பு

[தொகு]

மேற்கோள்

[தொகு]
  1. நாயகம் - கேரளாவில் நாயர் - நாயகர் என்றே முன்னோர் பதிப்புகளில் உள்ளன
  2. அழகிய மணவாள தாசர் என்கிற பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் வெண்பாக்களால் இயற்றிய நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி, சென்னைக் கல்விச் சங்கத்துத் தமிழ்ப் புலவராய் இருந்த வேங்கடால முதலியார் அச்சிட்ட பிரதிகளுக்கு இணங்க, பிழையறப் பரிசோதிக்கப்பட்டு, சென்னை -ஊ. புஷ்பரத செட்டியாரால் கலாரத்நாகரம் என்னும் அச்சுக்கூடத்தில் விபவ ஆண்டு, ஐப்பசி மாதம் பதிப்பிக்கப்பட்டது
  3. [ http://www.tamilvu.org/slet/l4100/l4100pd4.jsp?bookid=74&pno=358 திருவள்ளூர் (திரு எவ்வுள்)]
  4. தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/115
{{bottomLinkPreText}} {{bottomLinkText}}
108 வைணவத் திருத்தலங்கள்
Listen to this article

This browser is not supported by Wikiwand :(
Wikiwand requires a browser with modern capabilities in order to provide you with the best reading experience.
Please download and use one of the following browsers:

This article was just edited, click to reload
This article has been deleted on Wikipedia (Why?)

Back to homepage

Please click Add in the dialog above
Please click Allow in the top-left corner,
then click Install Now in the dialog
Please click Open in the download dialog,
then click Install
Please click the "Downloads" icon in the Safari toolbar, open the first download in the list,
then click Install
{{::$root.activation.text}}

Install Wikiwand

Install on Chrome Install on Firefox
Don't forget to rate us

Tell your friends about Wikiwand!

Gmail Facebook Twitter Link

Enjoying Wikiwand?

Tell your friends and spread the love:
Share on Gmail Share on Facebook Share on Twitter Share on Buffer

Our magic isn't perfect

You can help our automatic cover photo selection by reporting an unsuitable photo.

This photo is visually disturbing This photo is not a good choice

Thank you for helping!


Your input will affect cover photo selection, along with input from other users.

X

Get ready for Wikiwand 2.0 🎉! the new version arrives on September 1st! Don't want to wait?