For faster navigation, this Iframe is preloading the Wikiwand page for ஸ்ட்ரூமா ஆறு.

ஸ்ட்ரூமா ஆறு

ஸ்ட்ரூமா (Струма), ஸ்ட்ரிமோனாஸ் (Στρυμόνας)
பல்கேரியா மற்றும் கிரேக்கத்தில் ஸ்ட்ரூமா ஆற்றின் போக்கு
அமைவு
Countriesபல்காரியா மற்றும் கிரேக்கம்
சிறப்புக்கூறுகள்
மூலம் 
 ⁃ அமைவுபல்கேரியாவின் விட்டோஷாவின் தெற்கு சரிவுகள்
 ⁃ ஏற்றம்2,180 m (7,150 அடி)
முகத்துவாரம் 
 ⁃ அமைவு
ஏஜியன் கடல், கிரேக்கம்
 ⁃ ஆள்கூறுகள்
40°47′9″N 23°50′56″E / 40.78583°N 23.84889°E / 40.78583; 23.84889
நீளம்415 km (258 mi)
வடிநில அளவு17,330 km2 (6,690 sq mi)
வெளியேற்றம் 
 ⁃ சராசரி2.1 m3/s (74 cu ft/s) at Pernik; 76.2 m3/s (2,690 cu ft/s) at Marino pole

ஸ்ட்ரூமா அல்லது ஸ்ட்ரிமோனாஸ் ( பல்கேரிய: Струма  [ˈstrumɐ] ; கிரேக்கம்: Στρυμόνας‎  [striˈmonas] ; துருக்கியம்: (Struma) Karasu [kaɾaˈsu], 'கருப்பு நீர்') என்பது பல்கேரியா மற்றும் கிரேக்கத்தில் பாயும் ஒரு ஆறாகும். இதன் பழங்காலப் பெயர் ஸ்ட்ரைமோன் ( கிரேக்கம் : Στρυμών [stryˈmɔːn] ). இதன் வடிகால் பகுதி 17,330 km2 (6,690 sq mi) ஆகும், இதில் 8,670 km2 (3,350 sq mi) பல்கேரியாவிலும், 6,295 km2 (2,431 sq mi) கிரேக்கத்திலும், மீதமுள்ள 2,365 km2 (913 sq mi) வடக்கு மக்கெதோனியாவில் உள்ளது.[1] இது பல்கேரியாவில் உள்ள விட்டோசா மலையிலிருந்து உருவாகி, முதலில் மேற்கு நோக்கி ஓடி, பின்னர் தெற்கு நோக்கி பாய்ந்து, பல சமவெளிகளை உருவாக்கி, குலா கிராமத்தில் கிரேக்க எல்லைக்குள் நுழைகிறது. கிரேக்கத்தில், இது கெர்கினி ஏரியிலிருந்து வெளியேறும் முக்கிய நீர்வழியாகும், இது வலசைவரும் காட்டுப் பறவைகளுக்கான குறிப்பிடத்தக்க மையமாகும். செரெஸ் பிராந்திய அலகில் ஆம்பிபோலிசுக்கு அருகில், ஏஜியன் கடலில் உள்ள ஸ்ட்ரைமோனியன் வளைகுடாவில் இந்த ஆறு கடலில் கலக்கிறது. இந்த ஆற்றின் நீளம் 415 கிலோமீட்டர்கள் (258 மைல்கள்) (இதில் 290 கிலோமீட்டர்கள் (180 mi) ) பல்கேரியாவில் ஓடுகிறது. இது நாட்டின் ஐந்தாவது-நீளமான மற்றும் பால்கனின் உட்புறத்தில் மட்டுமே ஓடும் மிக நீளமான ஆறுகளில் ஒன்றாகும்.

ஆற்றுச் சமவெளிப் பகுதிகள் பல்கேரிய (பிரின் மாசிடோனியா) நிலக்கரி சுரங்கங்கப் பகுதிகளாகும். இது இன்றைய காலத்தை விட கடந்த காலத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. பல்கேரியப் பகுதியின் தெற்குப் பகுதி ஒரு முக்கியமான ஒயின் பிராந்தியமாகும். கிரேக்க பகுதியில் உள்ள சமவெளி வேளாண் தொழில் நிறைந்த ஒரு பகுதி ஆகும். இது கிரேக்கத்தின் நான்காவது பெரிய சமவெளி ஆகும். இதன் துணை ஆறுகளில் கொன்ஸ்கா ஆறு, டிராகோவிஷ்டிட்சா, ரில்ஸ்கா ஆறு, பிளாகோவ்கிராட்ஸ்கா பிஸ்ட்ரிட்சா, சந்தன்ஸ்கா பிஸ்ட்ரிட்சா, ஸ்ட்ருமிட்சா , பிரின்ஸ்கா பிஸ்ட்ரிட்சா, ஆங்கிடிஸ் ஆகியவை அடங்கும் .

வரலாறு

[தொகு]
கிரேக்க கடற்கரைக்கு அருகில் ஆற்றின் ஒரு தோற்றம்
இயோனில் உள்ள பழங்கால பாரசீக கோட்டை (இடது) மற்றும் ஸ்ட்ரைமோன் ஆற்றின் முகப்பு (வலது), என்னியா ஹோடோய் (ஆம்பிபோலிஸ்) இலிருந்து தோற்றம்.

கிமு 437 இல், பண்டைய கிரேக்க நகரமான ஆம்பிபோலிஸ் ஏஜியனில் ஆற்று முகத்துவாரத்துக்கு அருகில், முன்பு என்னியா ஹோடோய் ('ஒன்பது சாலைகள்') என்று அழைக்கப்பட்ட இடத்தில் நிறுவப்பட்டது. கிமு 480 இல் பாரசீகத்தின் முதலாம் செர்கஸ் தனது படையெடுப்பின் போது ஆற்றைக் கடந்தபோது, ஆற்றுக் கடவுளுக்குப் பலியாக ஒன்பது சிறுவர்கள் மற்றும் ஒன்பது கன்னிப்பெண்களை உயிருடன் புதைத்தார்.[2] கிமு 479 இல் என்னியா ஹோடோய் அருகே செர்க்செசி எஞ்சிய இராணுவத்தை மாசிடோனின் முதலாம் அலெக்சாந்தரின் படைகள் தோற்கடித்தன. கிமு 424 இல் எசுபார்த்தன் தளபதி பிராசிடாஸ் முழு கிரேக்க தீபகற்பத்தையும் கடந்து ஆம்பிபோலிசை முற்றுகையிட்டு கைப்பற்றினார். பண்டைய ஆதாரங்களின்படி, ஆறு அதன் முகத்துவாரத்திலிருந்து பழங்கால (இன்று வறண்ட) செர்சினிடிஸ் ஏரி வரை செல்லக்கூடியதாக இருந்தது. இது உள்நாட்டு கப்பல் போக்குவரத்துக்கு சாதகமாக இருந்தது; எனவே பழங்காலத்தில் ஒரு முக்கியமான நீர்வழி பாதையாக இருந்தது. இது ஸ்ட்ரைமோனியன் வளைகுடாவின் கடற்கரை முதல் செரெஸ் நகரத்திற்கும் இடையேயான உள்நாட்டுப் பகுதிகளுடன் தொடர்பு கொள்ள உதவியாக இருந்திருக்கிறது.[3]

பல்கேரியாவில் ஆற்றின் படுகை

முதலாம் உலகப் போரில் மாக்கெடோனிய முன்னணியின் ஒரு பகுதியாக இந்த ஆற்றுப் சமவெளி இருந்தது. இரண்டாம் உலகப் போரில் உருமேனியாவிலிருந்து யூத அகதிகளை அழைத்துச் கொண்டு, கருங்கடலில் செல்லும்போது டார்பிடோ படகால் மூழ்கடிக்கப்பட்டு, கிட்டத்தட்ட 800 இறந்த ஸ்ட்ருமா என்ற கப்பலுக்கு இந்த ஆற்றின் பெயர்தான் இடப்பட்டது.

காட்சியகம்

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. "Preliminary Flood Risk Assessment". Ministry of Environment, Energy and Climate Change. p. 86. Archived from the original on 15 February 2020.
  2. Herodotus 7,114 . The history may be Greek slander, though, as human sacrifice is not known as an Iranian cultic practice.
  3. Dimitrios C. Samsaris, Historical Geography of Eastern Macedonia during the Antiquity (= Makedonikí bibliothíki, 49). Society of Macedonian Studies, Thessaloniki 1976, p. 16 ff. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 960-7265-16-5 (in Greek; online text பரணிடப்பட்டது 2017-04-24 at the வந்தவழி இயந்திரம்).

    Dimitrios C. Samsaris, A History of Serres (in the Ancient and Roman Times). Thessaloniki 1999, pp. 55–60 (in Greek; website of the municipality of Serres பரணிடப்பட்டது 2018-06-24 at the வந்தவழி இயந்திரம்).

வெளி இணைப்புகள்

[தொகு]
{{bottomLinkPreText}} {{bottomLinkText}}
ஸ்ட்ரூமா ஆறு
Listen to this article

This browser is not supported by Wikiwand :(
Wikiwand requires a browser with modern capabilities in order to provide you with the best reading experience.
Please download and use one of the following browsers:

This article was just edited, click to reload
This article has been deleted on Wikipedia (Why?)

Back to homepage

Please click Add in the dialog above
Please click Allow in the top-left corner,
then click Install Now in the dialog
Please click Open in the download dialog,
then click Install
Please click the "Downloads" icon in the Safari toolbar, open the first download in the list,
then click Install
{{::$root.activation.text}}

Install Wikiwand

Install on Chrome Install on Firefox
Don't forget to rate us

Tell your friends about Wikiwand!

Gmail Facebook Twitter Link

Enjoying Wikiwand?

Tell your friends and spread the love:
Share on Gmail Share on Facebook Share on Twitter Share on Buffer

Our magic isn't perfect

You can help our automatic cover photo selection by reporting an unsuitable photo.

This photo is visually disturbing This photo is not a good choice

Thank you for helping!


Your input will affect cover photo selection, along with input from other users.

X

Get ready for Wikiwand 2.0 🎉! the new version arrives on September 1st! Don't want to wait?