For faster navigation, this Iframe is preloading the Wikiwand page for சியான் செமீன்.

சியான் செமீன்

சியான் செமீன்
Jiang Zemin
江泽民
2002இல் சியாங்
சீனப் பொதுவுடமைக் கட்சியின் பொதுச் செயலாளர்
பதவியில்
24 சூன் 1989 – 15 நவம்பர் 2002
முன்னையவர்சாவோ சியாங்
பின்னவர்கூ சிங்தாவ்
மக்கள் சீனக் குடியரசின் 5-ஆவது அரசுத்தலைவர்
பதவியில்
27 மார்ச் 1993 – 15 மார்ச் 2003
பிரதமர்
Vice President
முன்னையவர்யாங் சாங்குன்
பின்னவர்கூ சிங்தாவ்
மத்திய ராணுவ ஆணையத் தலைவர்
பதவியில்
  • கட்சி ஆணையம்: 9 நவம்பர் 198919 செப்டம்பர் 2004
  • அரசு ஆணையம்: 19 மார்ச் 19908 மார்ச் 2005
முன்னையவர்டங் சியாவுபிங்
பின்னவர்கூ சிங்தாவ்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1926-08-17)17 ஆகத்து 1926
கியாங்து, கியாங்சு, சீனக் குடியரசு
இறப்பு30 நவம்பர் 2022(2022-11-30) (அகவை 96)
சிங்கான் மாகாணம், சாங்காய், சீனா
அரசியல் கட்சிசீனப் பொதுவுடமைக் கட்சி
துணைவர்
வாங் யெப்பிங் (தி. 1949)
பிள்ளைகள்சியாங் மியான்கெங்
பெற்றோர்
  • சியாங் சிசுன் (தந்தை)
  • வு யெப்பிங் (தாய்)
முன்னாள் கல்லூரி
  • நாஞ்சிங் பல்கலைக்கழகம்
  • சங்காய் சியாவோ துங் பல்கலைக்கழகம் (இளங்கலை)
தொழில்மின்பொறியியல்
கையெழுத்து
மத்திய குழு உறுப்புரிமை
  • 1989–2002: 13-ஆவது, 14-ஆவது, 15-ஆவது அரசியற்குழு நிலைக்குழு
  • 1989–2005: 13-ஆவது, 14-ஆவது, 15-ஆவது, 16-ஆவது மத்த்கிய இராணுவ ஆணையம்
  • 1987–2002: 13-ஆவது, 14-ஆவது, 15-ஆவது அரசியற்குழு
  • 1983–2002: 12-ஆவது, 13-ஆவது, 14-ஆவது, 15-ஆவது மத்திய குழு
  • 1988–2008: 7-ஆவது, 8-ஆவது, 9-ஆவது, 10-ஆவது, 11-ஆவது தேசிய மக்கள் பேரவை

ஏனைய அரசியல் பொறுப்புகள்
  • 1987–89: பொதுவுடமைக் கட்சிக் குழுச் செயலாளர், சாங்காய்
  • 1984–87: நகர முதல்வர், சங்காய்
  • 1983–85: மின்னணுத் தொழில் அமைச்சர்

மக்கள் சீன குடியரசின்
பெருந்தலைவர்

சியான் செமீன் (Jiāng Zémín; 17 ஆகத்து 1926 – 30 நவம்பர் 2022) ஒரு சீன அரசியல்வாதி ஆவார். இவர் 1989 முதல் 2002 வரை சீனப் பொதுவுடமைக் கட்சியின் பொதுச் செயலாளராகவும், 1989 முதல் 2004 வரை மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவராகவும், 1993 முதல் 2003 வரை சீனாவின் அரசுத்தலைவராகவும் பணியாற்றினார். மா சே துங், டங் சியாவுபிங், சீ சின்பிங் என்ற வரிசையில் சியான் சீனத் தலைமையின் மூன்றாம் தலைமுறையின் முக்கியத் தலைவராக இருந்தார்.

1989 தியனன்மென் சதுக்க எதிர்ப்புகள், படுகொலைகளைத் தொடர்ந்து சமரச வேட்பாளராக சியான் எதிர்பாராதவிதமாக ஆட்சிக்கு வந்தார். மாணவர் இயக்கத்திற்கான ஆதரவிற்காக சாவோ சியாங் பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் கட்சியின் பொதுச் செயலாளராக சியான் செமீன் நியமிக்கப்பட்டார்.[1][2] அப்போது, சாங்காய் நகரின் கட்சித் தலைவராக சியான் இருந்தார். சீன அரசியலில் "எட்டு முதியவர்களின்" ஈடுபாடு படிப்படியாகக் குறைந்ததால்,[3] சியான் 1990களின் போது நாட்டில் "முக்கிய தலைவராக" ஆவதற்கு தனது அதிகாரத்தை ஒருங்கிணைத்துக்கொண்டார். 1992 இல் டங் சியாவுபிங்கின் தெற்கு சுற்றுப்பயணத்தால் வலியுறுத்தப்பட்டதன் படி, அந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைபெற்ற 14வது கட்சி தேசியப் பேரவையின் போது சியான் தனது உரையில் "சோசலிச சந்தைப் பொருளாதாரம்" என்ற சொல்லை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தினார், இது "சீர்திருத்தத்தைத் திறந்த நிலையில்" வைத்திருக்கத் துரிதப்படுத்தியது.[4]

சியானின் தலைமையின் கீழ், சந்தைச் சீர்திருத்தங்களின் தொடர்ச்சியுடன் சீனா கணிசமான பொருளாதார வளர்ச்சியை அடைந்தது. 1997 இல் ஐக்கிய இராச்சியத்தில் இருந்து ஆங்காங்கைத் திரும்பப் பெற்றமை, 1999 இல் போர்த்துகலில் இருந்து மக்காவைத் திரும்பப் பெற்றமை, மற்றும் வெளி உலகத்துடன் அதன் உறவுகளை மேம்படுத்தியமை இவரது காலத்தில் நடந்தேறியது, அதே வேளை பொதுவுடமைக் கட்சி நாட்டின் மீதான அதன் இறுக்கத்தையும் தக்க வைத்துக் கொண்டது. பாலுன் காங் இயக்கத்தின் ஒடுக்குமுறை உட்பட மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும் சியான் விமர்சனங்களை எதிர்கொண்டார்.[5] "மூன்று பிரதிநிதிகள்" என்று அழைக்கப்படும் கட்சிக் கோட்பாட்டிற்கான அவரது பங்களிப்புகள் 2002 இல் பொதுவுடமைக் கட்சியின் அரசியலமைப்பில் எழுதப்பட்டன. சியான் 2002 முதல் 2005 வரை தனது அதிகாரப்பூர்வ தலைமைப் பதவிகளில் இருந்து படிப்படியாக விலகி வந்தார். இப்பதவிகளுக்கு கூ சிங்தாவ் நியமிக்கப்பட்டார்,[6] இருப்பினும் இவர் பின்னாள் வரை பல விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தினார். சியான் செமீன் 2022 நவம்பர் 30 அன்று, இரத்தப் புற்றுநோய் மற்றும் பல உறுப்பு செயலிழப்பால் இறந்தார்.[7][8][9][10]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Pomfret, John. "In Posthumous Memoir, China's Zhao Ziyang Details Tiananmen Debate, Faults Party". The Washington Post. 15 May 2009. p.2.
  2. Philip P. Pan (2008). Out of Mao's shadow. Simon & Schuster. pp. 4–5. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4165-3705-2. இணையக் கணினி நூலக மைய எண் 1150955831 – via Internet Archive.
  3. Holley, David (12 January 1992). "'Eight Elders' Wield Power Behind the Scenes in China". Los Angeles Times. https://www.latimes.com/archives/la-xpm-1992-01-12-mn-393-story.html. 
  4. Vogel, Ezra (2011). Deng Xiaoping and the Transformation of China. Belknap Press. p. 682. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-674-72586-7.
  5. Sarah Cook and Leeshai Lemish, 'The 610 Office:Policing the Chinese Spirit' பரணிடப்பட்டது 27 சனவரி 2013 at the வந்தவழி இயந்திரம், China Brief , Volume 11 Issue 17 (9 November 2011).
  6. Cabestan, Jean-Pierre (8 October 2009). "China's Foreign- and Security-policy Decision-making Processes under Hu Jintao". Journal of Current Chinese Affairs 38 (3): 63–97. doi:10.1177/186810260903800304. http://journals.sub.uni-hamburg.de/giga/files/journals/3/articles/61/public/61-61-1-PB.pdf. பார்த்த நாள்: 6 December 2013. 
  7. "Former Chinese leader Jiang Zemin dies aged 96". BBC News. 30 November 2022. https://www.bbc.co.uk/news/world-asia-china-63805991. 
  8. "Former Chinese president Jiang Zemin dies at 96" (in en). The Guardian. 30 November 2022. https://www.theguardian.com/world/2022/nov/30/jiang-zemin-former-chinese-president-dies-at-96. 
  9. Buckley, Chris; Wines, Michael (30 November 2022). "Jiang Zemin, Leader Who Guided China into Global Market, Dies at 96" (in en-US). The New York Times. https://www.nytimes.com/2022/11/30/obituaries/jiang-zemin-dead.html. 
  10. "Former President of China, Jiang Zemin has passed away" (in en-US). 30 November 2022. https://www.npltimes.com/former-president-of-china-jiang-zemin-has-passed-away/. 

வெளி இணைப்புகள்

[தொகு]
{{bottomLinkPreText}} {{bottomLinkText}}
சியான் செமீன்
Listen to this article

This browser is not supported by Wikiwand :(
Wikiwand requires a browser with modern capabilities in order to provide you with the best reading experience.
Please download and use one of the following browsers:

This article was just edited, click to reload
This article has been deleted on Wikipedia (Why?)

Back to homepage

Please click Add in the dialog above
Please click Allow in the top-left corner,
then click Install Now in the dialog
Please click Open in the download dialog,
then click Install
Please click the "Downloads" icon in the Safari toolbar, open the first download in the list,
then click Install
{{::$root.activation.text}}

Install Wikiwand

Install on Chrome Install on Firefox
Don't forget to rate us

Tell your friends about Wikiwand!

Gmail Facebook Twitter Link

Enjoying Wikiwand?

Tell your friends and spread the love:
Share on Gmail Share on Facebook Share on Twitter Share on Buffer

Our magic isn't perfect

You can help our automatic cover photo selection by reporting an unsuitable photo.

This photo is visually disturbing This photo is not a good choice

Thank you for helping!


Your input will affect cover photo selection, along with input from other users.

X

Get ready for Wikiwand 2.0 🎉! the new version arrives on September 1st! Don't want to wait?