For faster navigation, this Iframe is preloading the Wikiwand page for சரவாக் ஆளுநர்.

சரவாக் ஆளுநர்

யாங் டி பெர்துவா சரவாக்
Yang di-Pertua Sarawak
தற்போது
வான் சுனைடி துங்கு ஜாபார்
(Wan Junaidi Tuanku Jaafar)

1 மார்ச் 2014 முதல்
வாழுமிடம்ஆசுதானா சரவாக்
The Astana, Kuching, Sarawak
நியமிப்பவர்யாங் டி பெர்துவான் அகோங்
பதவிக் காலம்4 ஆண்டுகள்
அரசமைப்புக் கருவிசரவாக் அரசியலமைப்பு
உருவாக்கம்16 செப்டம்பர் 1963
இணையதளம்Astana Negeri Sarawak

சரவாக் ஆளுநர் அல்லது யாங் டி பெர்துவா சரவாக் (ஆங்கிலம்: Sabah Sarawak; மலாய்: Yang di-Pertua Negeri of Sarawak) என்பது மலேசிய மாநிலமான சரவாக் மாநிலத்தின் கவர்னர் (Governor) எனும் ஆளுநரைக் குறிப்பிடும் பதவி. யாங் டி பெர்துவா என்பவரை மாண்புமிகு (ஆங்கிலம்: His Excellency; மலாய்: Tuan Yang Terutama (TYT) எனும் மரியாதை அடைமொழியில் அழைப்பது வழக்கம்.[1]

சரவாக் மாநிலத்தின் தற்போதைய ஆளுநர் வான் சுனைடி துங்கு ஜாபார் (Wan Junaidi Tuanku Jaafar). 26 சனவரி 2024 முதல் பொறுப்பு வக்கிக்கிறார். இவருக்கும் முன்னர் துன் பெகின் ஸ்ரீ அப்துல் தாயிப் மகமூத் (Abdul Taib Mahmud) பொறுப்பு வகித்தார். அப்துல் தாயிப் மகமூத் 2014 மார்ச் 1-ஆம் தேதி முதல் 26 சனவரி 2024 வரை பொறுப்பு வகித்தார்.[2]

பொது

[தொகு]

சரவாக் ஆளுநரின் அதிகாரப்பூர்வ அரசு இல்லம் ஆசுதானா சரவாக். இந்த இல்லம் சரவாக் ஆற்றின் வடக்கு கரையில் கூச்சிங் மாநகரில் அமைந்துள்ளது.[3]

துன் அப்துல் தாயிப் மகமுட், 2014 பிப்ரவரி 28-ஆம் தேதி, சரவாக் மாநிலத்தின் யாங் டி பெர்துவா நெகிரிக்கான நற்சான்றிதழைப் பெற்றார். அடுத்த நாள் பதவியேற்றார். அடுத்து அவர் 2-ஆவது முறையாக 2018 பிப்ரவரி 28-ஆம் தேதி மீண்டும் ஆளுநராக நியமிக்கப் பட்டார்.[4][5]

நியமனம்

[தொகு]

சரவாக் மாநிலத்தின் அரசியலமைப்பின் பிரிவு 1 (1)-இன் கீழ் (Article 1 (1) of the Constitution) யாங் டி பெர்துவா நெகிரி (ஆளுநர்) பதவி நிறுவப்பட்டது. சரவாக் மாநிலத்தின் முதலமைச்சருடன் கலந்தாலோசித்த பிறகு, மலேசிய மாமன்னர் யாங் டி பெர்துவான் அகோங் அவர்களால் இந்தப் பதவிக்கான ஆளுநர் நியமிக்கப் படுகிறார்.[6]

யாங் டி பெர்துவா சரவாக் ஆளுநர் எனும் கவர்னருக்குத் துணை ஆளுநர்; அல்லது உதவியாளர் இல்லை. அதாவது துணை ஆளுநர் பதவி இல்லை. இருப்பினும், நோய் அல்லது உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட்டு, அவற்றின் காரணமாக சரவாக் மாநிலத்தை ஆட்சி செய்ய இயலாமல் போகலாம்.

அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அவரின் சேவையைத் தொடர்வதற்கு, வேறு ஒரு நபரை நியமிக்கும் அதிகாரத்தை மலேசிய மாமன்னர் யாங் டி பெர்துவான் அகோங் அவர்கள் பெற்று உள்ளார்.

பொது

[தொகு]

யாங் டி பெர்துவா நெகிரி (ஆங்கிலம்: Yang di-Pertua Negeri; மலாய்: Yang di-Pertua Negeri) என்பது; மலேசிய மாநிலங்களான பினாங்கு, மலாக்கா, சபா, சரவாக் ஆகிய மாநிலங்களின் ஆளுநரைக் குறிப்பிடும் பதவி.

இந்தப் பதவி நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை மலேசிய மாமன்னர் யாங் டி பெர்துவான் அகோங் அவர்களால் நியமிக்கப்படும் பதவி ஆகும். இருப்பினும், யாங் டி பெர்துவா நெகிரியின் பதவிக் காலத்தை நீட்டிக்கும் அதிகாரம் மலேசிய மாமன்னர் யாங் டி பெர்துவான் அகோங் அவர்களிடம் மட்டுமே உள்ளது.

சரவாக் மாநிலத்தின் முதல்வரின் சம்மதத்தைப் பெற்ற பின்னர் தான், யாங் டி பெர்துவா நெகிரி நியமிக்கப் படுகிறார்கள்.[7]

அதிகாரங்கள்

[தொகு]

யாங் டி பெர்துவான் அகோங் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் போல சரவாக் மாநில யாங் டி பெர்துவா நெகிரிக்கும் அதிகாரங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இருப்பினும் நீதித் துறையில் சரவாக் மாநில யாங் டி பெர்துவா நெகிரிக்கு குறைந்த அளவு அதிகாரங்களே வழங்கப்பட்டு உள்ளன.

ஒரு மாநிலத்தின் யாங் டி பெர்துவா நெகிரி, அந்த மாநிலத்தின் தலைவராகப் பொறுப்பு வகிப்பதால், அவர் மலேசிய ஆட்சியாளர்களின் மாநாட்டில்; (ஆங்கிலம்: Conference of Rulers அல்லது Council of Rulers அல்லது Durbar; மலாய்: Majlis Raja-Raja ஜாவி: مجليس راج); கலந்து கொள்ள முடியும்.

சரவாக் அரசியலமைப்புச் சட்டம்

[தொகு]

ஆனால், மலேசியாவின் மாமன்னராகும் அதிகாரம் மட்டும் யாங் டி பெர்துவா நெகிரிக்கு வழங்கப்படவில்லை. சரவாக் மாநிலத்தின் அரசியலமைப்பு 10-ஆவது விதியின்படி (Article 10 of the Constitution) மாநிலச் சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டு, மாநிலச் செயற்குழு உறுப்பினர்களின் ஆலோசனையின் பேரில் செயல்பட வேண்டும். ஆனாலும் சில கட்டங்களில் தனிப்பட்ட விருப்பத்தின் பேரிலும் முடிவுகளை வழங்க இயலும்.[8]

சரவாக் மாநிலத்தின் அரசியலமைப்புச் சட்டம்; சரவாக் மாநிலத்தில் முக்கியமான அரசாங்க அதிகாரிகளை நியமிப்பதற்கு மாநில ஆளுநருக்கு அதிகாரம் வழங்கியுள்ளது.

ஆளுநரின் அதிகாரங்கள்

[தொகு]

இருப்பினும் மாநிலத்தின் முதலமைச்சரை நியமிப்பதைத் தவிர்த்து, மற்ற உயர் அரசாங்க அதிகாரிகளை நியமிக்கும் போது முதலமைச்சருடன் கலந்தாலோசிக்க வேண்டும். அதன் பின்னரே அரசாங்க அதிகாரிகளை நியமிக்கலாம். ஓர் அலுவலக அதிகாரியைப் பணிநீக்கம் செய்யும் போதும் இதே செயல்முறை நீடிக்கின்றது.

சரவாக் மாநிலத்தின் அரசியலமைப்புச் சட்டத்தில், மாநிலச் சட்டமன்றத்தில் ஆளுநரின் அதிகாரங்கள் விவரமாக விவரிக்கப்பட்டு உள்ளன.

மாநிலச் சட்டமன்றத்தில் ஒரு மசோதா நிறைவேற்றப்பட்ட 30 நாட்களுக்குள் அந்த மசோதாவிற்கு யாங் டி பெர்துவா நெகிரி ஒப்புதல் அளிக்க வேண்டும். அதே வேளையில், ஒவ்வோர் ஆண்டும் சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தில் யாங் டி பெர்துவா நெகிரி உரையாற்ற வேண்டும்.

நிர்வாகம்

[தொகு]

சரவாக் மாநிலச் சட்டமன்றத்தில் யாங் டி பெர்துவா நெகிரியின் முக்கியமான செயல்பாடுகள்:

  • பெரும்பான்மை பெற்ற பிரதான கட்சியின் தலைவரை முதலமைச்சராக (ஆங்கிலம்: Ketua Menteri; மலாய்: Chief Minister) நியமிப்பது;
  • மாநிலத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்களை (Executive Council) நியமிப்பது; (சபா மற்றும் சரவாக் மாநிலங்களில் சபா அமைச்சரவை; சரவாக் அமைச்சரவை (Cabinet) என அழைக்கப்படுகிறது);
  • மாநில அரசாங்கத்தின் துறைத் தலைவர்களை நியமிப்பது;
  • மாநிலச் சட்டமன்றம் கலைக்கப் படுவதற்கு ஒப்புதல் அளிப்பது;
  • மாநிலச் சட்டமன்றம் கலைக்கப் படுதலைத் தடுத்து நிறுத்துவது;
  • அரச விருதுகள்; அரச பதக்கங்கள் வழங்குவது;
  • மாநிலத்தில் செய்யப்பட்ட குற்றங்களுக்கு மன்னிப்பு வழங்குவது; (இந்தக் குற்றங்களில் இராணுவக் குற்றங்கள் மற்றும் சிரியா குற்றங்களுக்கு யாங் டி பெர்துவான் அகோங் மட்டுமே மன்னிப்பு வழங்க இயலும்).

சரவாக் யாங் டி பெர்துவா பட்டியல்

[தொகு]

1965-ஆம் ஆண்டு தொடங்கி 2022-ஆம் ஆண்டு வரையிலான சரவாக் மாநிலத்தின் யாங் டி பெர்துவா பட்டியல்: (2022 ஆகஸ்டு மாதம், இற்றை செய்யப்பட்டது.)

நிலை தோற்றம் பெயர்
(பிறப்பு–இறப்பு)
பதவி காலம் இடம் நாள்கள்
1 அபாங் ஜொகாரி ஒப்பேங்
Abang Openg
(1905–1969)
16 செப்டம்பர் 1963 28 மார்ச் 1969 கூச்சிங் 5 ஆண்டுகள், 193 நாள்கள்
2 துவாங்கு பூஜாங்
Tuanku Bujang
(1898–1986)
2 ஏப்ரல் 1969 1 ஏப்ரல் 1977 சிபு 8 ஆண்டுகள், 0 நாட்கள்
3 அபாங் முகமட் சலாவுடின்
Abang Muhammad Salahuddin
(1921–2022)
2 ஏப்ரல் 1977 1 ஏப்ரல் 1981 சிபு 3 ஆண்டுகள், 345 நாட்கள்
4 அப்துல் ரகுமான் யாக்கோப்
Abdul Rahman Ya'kub
(1928–2015)
2 ஏப்ரல் 1981 1 ஏப்ரல் 1985 பிந்துலு 4 ஆண்டுகள், 0 நாட்கள்
5 அகமட் சைடி அட்ருஸ்
Ahmad Zaidi Adruce
(1924–2000)
2 ஏப்ரல் 1985 5 திசம்பர் 2000 சிபு 15 ஆண்டுகள், 247 நாட்கள்
6 அபாங் முகமட் சலாவுடின்
Abang Muhammad Salahuddin1
(1921–2022)
22 பெப்ரவரி 2001 28 பெப்ரவரி 2014 சிபு 13 ஆண்டுகள், 6 நாட்கள்
7 துன் அப்துல் தாயிப் மகமூத்
Abdul Taib Mahmud

(1936–2024)
1 மார்ச்சு 2014 26 சனவரி 2024 மிரி 10 ஆண்டுகள், 203 நாட்கள்
8
Tun Pehin Sri Dr. Haji
வான் சுனைடி துங்கு ஜாபார்
Wan Junaidi Tuanku Jaafar
(born 1946)
26 சனவரி 2024 தற்சமயம் சிமுஞ்சான் 0 ஆண்டுகள், 238 நாட்கள்

குறிப்பு

[தொகு]
1.^ சரவாக் மாநிலத்தின் ஆளுநராக இருமுறை பணியாற்றிய முதல் யாங் டி பெர்துவா நெகிரி, அபாங் முகமட் சலாவுடின் ஆவார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Milne, R. S. (1963). "Malaysia: A New Federation in the Making". Asian Survey 3 (2): 76–82. doi:10.2307/3023678. பன்னாட்டுத் தர தொடர் எண்:0004-4687. https://www.jstor.org/stable/3023678. 
  2. Bernama (2022-03-01). "Taib Mahmud sworn in as Sarawak governor for third term". MalaysiaNow. பார்க்கப்பட்ட நாள் 2022-03-29.
  3. Yang di-Pertua Negeri of Sarawak பரணிடப்பட்டது 7 செப்டெம்பர் 2015 at the வந்தவழி இயந்திரம்
  4. "King bestows 'Tun' title on Taib Mahmud". The Star (Malaysia). 26 May 2014. http://www.thestar.com.my/News/Nation/2014/05/26/Tun-Taib-Mahumud/. 
  5. "Abdul Taib continues service as Sarawak governor for another two years". The Star (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-29.
  6. "Yang di-Pertua Negeri". Sabah Government. பார்க்கப்பட்ட நாள் 2016-06-17.
  7. "Section 19A, Eighth Schedule, Federal Constitution of Malaysia" (PDF). Archived from the original (PDF) on 10 அக்டோபர் 2017. பார்க்கப்பட்ட நாள் 29 February 2020.
  8. "Constitution of the State of Sabah: Part 1" (PDF). Attorney-General's Chamber of the State of Sabah. Archived from the original (PDF) on 4 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 1 October 2013.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
{{bottomLinkPreText}} {{bottomLinkText}}
சரவாக் ஆளுநர்
Listen to this article

This browser is not supported by Wikiwand :(
Wikiwand requires a browser with modern capabilities in order to provide you with the best reading experience.
Please download and use one of the following browsers:

This article was just edited, click to reload
This article has been deleted on Wikipedia (Why?)

Back to homepage

Please click Add in the dialog above
Please click Allow in the top-left corner,
then click Install Now in the dialog
Please click Open in the download dialog,
then click Install
Please click the "Downloads" icon in the Safari toolbar, open the first download in the list,
then click Install
{{::$root.activation.text}}

Install Wikiwand

Install on Chrome Install on Firefox
Don't forget to rate us

Tell your friends about Wikiwand!

Gmail Facebook Twitter Link

Enjoying Wikiwand?

Tell your friends and spread the love:
Share on Gmail Share on Facebook Share on Twitter Share on Buffer

Our magic isn't perfect

You can help our automatic cover photo selection by reporting an unsuitable photo.

This photo is visually disturbing This photo is not a good choice

Thank you for helping!


Your input will affect cover photo selection, along with input from other users.

X

Get ready for Wikiwand 2.0 🎉! the new version arrives on September 1st! Don't want to wait?