For faster navigation, this Iframe is preloading the Wikiwand page for மஸ்தானி.

மஸ்தானி

மஸ்தானி
மஸ்தானியின் ஓவியம்
மஸ்தானியின் ஓவியம், 18-ஆம் நூற்றாண்டு
பிறப்புமாவ், சகானியா, புந்தேல்கண்ட்
இறப்பு1740
புனே
பெற்றோர்சத்திரசால்
ருக்கானி பாய் பேகம்
வாழ்க்கைத்
துணை
பாஜிராவ்
பிள்ளைகள்ஷாம்செர் பகதூர் (கிருஷ்ணா ராவ்)

மஸ்தானி, (ஆங்கிலம்: Mastani, மராத்தி: मस्तानी) புந்தேல்கண்ட் மகாராஜா சத்ரசாலின் மகளாவார். இவர் மராத்திய பேஷ்வா பாஜிராவின் இரண்டாவது மனைவியுமாவார்.[1][2]

இளமைப்பருவம்

[தொகு]

இவர் மயூ சகண்யா எனும் இடத்தில் பிறந்தவர். இவரது தாய் ருக்கானிபாய் பேகம் ஒரு பாரசீகப் பெண் ஆவார்.[3] இவர்  பிறந்த மயூ சகண்யா எனும் இடம் தற்போது மத்தியப் பிரதேசத்தில் சத்தர்பூர் மாவட்டத்தில் சிறிய கிராமமாகவுள்ளது. இவருடைய தந்தையார்தான் பன்னா இராச்சியத்தை நிறுவியவர். இவரும் இவருடைய தந்தையாரும் கிருஷ்ணனைக் கடவுளாக வழிபடும் பிரணாமி சம்பிரதாயத்தை பின்பற்றியவர்கள்.[2]

திருமண வாழ்க்கை

[தொகு]

1728ம் ஆண்டு முகம்மது கான் பங்கஷின் படையெடுப்பினால் தோற்கடிக்கப்பட்ட சத்திரசால் மகாராஜாவும் அவரது குடும்பமும் சிறைபிடிக்கபட்டனர். சத்திரசால் மகாராஜா இரகசியமாக பாஜிராவின் உதவியை வேண்டினார். இருப்பினும் மால்வா எனும் இடத்தில் இராணுவக் கூடம் அமைத்து தங்கியிருந்ததால், பாஜிராவ் 1729 ஆம் ஆண்டு புந்தல்கண்ட் நகரை நோக்கிச்செல்லும் வரை எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. அதன்பின் ஜயிட்பூர் எனும் இடத்தை அடைந்தபின் பங்கஷை தோற்கடித்தார். ஜயிட்பூர் தற்போது உத்தர பிரதேசத்தில் குல்பகர் எனும் இடத்தின் அருகே அமைந்துள்ளது.[4]

சத்திரசால் மகாராஜா பாஜிராவிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தனது மகளான மஸ்தானியை பாஜிராவிற்குத் திருமணம் செய்து வைத்தார். அத்தோடு தனது இராச்சியத்தின் மூன்றில் ஒரு பகுதியான ஜான்ஸி, சகர் மற்றும் கல்பி போன்ற இடங்களையும் வழங்கினார்.[1][5] பாஜிராவ் முன்னரே ஒரு பெண்ணைத் திருமணம் செய்திருந்தார். இருப்பினும் சத்ரசால் மகாராஜாவின் வேண்டுகோளை ஏற்றார் பாஜிராவ்.[6]

புனேவிற்கு திரும்பியபின் மஸ்தானி இசுலாமிய சம்பிரதாயத்தை சேர்ந்தவர் என்பதால் அவரது திருமணம் ஏற்று கொள்ளபடவில்லை. மஸ்தானி புனே நகரில் பாஜிராவின் நிறுவிய சனிவார்வாடா மாளிகையிலும்  சில காலங்கள் தங்கியிருந்தார். சனிவார்வாடா மாளிகையின் வடகிழக்கு மூலையில் மஸ்தானி மகால் அமைந்திருந்தது. அத்துடன் அதற்கெனத் தனியான  வெளியேறும் வழியும் அமைந்திருந்தது. அவ்வழி மஸ்தானி தர்வாஜா என அழைக்கப்பட்டது. இவற்றுக்கெல்லாம் காரணம் பாஜிராவின் குடும்பம் மஸ்தானியை வெறுத்தமையாகும். அதன்பிறகு பாஜிராவ் மஸ்தானிக்கென தனியான இடத்தை 1734ம் ஆண்டு கொத்ருட் எனும் இடத்தில் நிறுவினார்.[7] இந்த இடம் கார்வெ வீதியில் தற்போதும் மிருட்டியுன்செய் எனும் கோவிலாக உள்ளது.

ஷம்ஷேர் பஹதூர் (கிருஷ்ணா ராவ்)

[தொகு]

மஸ்தானி மற்றும் பாஜிராவின் புதல்வரின் பெயர் ஷம்ஷேர் பஹதூர் ஆகும். இவர் பிறந்ததும் இவருக்கு கிருஷ்ண ராவ் என பெயரிட்டனர். சில மாதங்களிற்குப் பின்னர் பாஜிராவின் முதலாவது மனைவியான காஷிபாய் ஆண்பிள்ளைையொன்றை பெற்றெடுத்தார். இருப்பினும் கிருஷ்ண ராவ் ஒரு இந்து-முஸ்லீம் என்பதால் மதகுருமார்கள் கிருஷ்ண ராவோவிற்கு உபநயனம் வழங்க மறுத்தனர். இறுதியில் கிருஷ்ண ராவிற்கு ஷம்ஷேர் பஹதூர் என பெயரிடப்பட்டதுடன் அவன் முஸ்லீம் இனத்தவனாக வளர்க்கப்பட்டான்.[6] 1740 ஆம் ஆண்டு பாஜிராவின் மரணத்தை அடுத்து மஸ்தானியும் இறந்தார்.

பாஜிராவ் மற்றும் மஸ்தானியின் மரணத்துக்குப் பின்னர் அவர்களது மகனான ஷம்ஷேர் பஹதூர் பாஜிராவின் இரண்டாவது மனைவியான காஷிபாயின் அரவணைப்பில் வளர்ந்தார். காஷிபாய் ஷம்ஷேர் பஹதூரை 6 வயது முதல் தனது மகனில் ஒருவனாகவே வளர்த்து வந்தார். பாஜிராவின் ஆட்சிக்கு உட்பட்ட பண்டா மற்றும் கல்பியின் ஒருபகுதி ஷம்ஷேர் பஹதூருக்கு வழங்கப்பட்டது. 1761 ம் ஆண்டு மராட்டியர்களுக்கும் ஆப்கானியர்களுக்கும் இடையில் நடந்த மூன்றாம் பானிபட் போரில் இவருடைய படை பங்கு கொண்டது. இந்த யுத்தத்தில் காயமடைந்த ஷம்ஷேர் பஹதூர் டீக் எனும் இடத்தில் இறந்தார்.[8]

மரணம்

[தொகு]

1740 ம் ஆண்டு பாஜிராவின் மரணத்தை அடுத்து மஸ்தானி இறந்தார். இவரது மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. அதாவது இவர் பாஜிராவின் மரணத்தை கேள்விப்பட்டதனை அடுத்து நஞ்சருந்தி மரணித்திருக்கலாம் எனவும் அல்லது பாஜிராவின் குடும்பத்தினரால் இவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் நம்பபடுகிறது.

பிரபல கலாச்சாரத்தில்

[தொகு]

பாஜிராவ் மஸ்தானி ராவ் என்கிற மராத்திய நாவலை மையமாக வைத்து, பாஜிராவ் மஸ்தானி எனும் இந்தி திரைப்படம் வெளியானது.[9][10]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Chopra, Kusum. Mastani (in ஆங்கிலம்). Rupa Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788129133304.
  2. 2.0 2.1 "How Bajirao and Mastani became a byword for doomed romance".
  3. Sen, Sailendra (2013). A Textbook of Medieval Indian History. Primus Books. pp. 187–188. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9-38060-734-4.
  4. G.S.Chhabra (1 January 2005). Advance Study in the History of Modern India (Volume-1: 1707-1803). Lotus Press. pp. 19–28. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-89093-06-8.
  5. "How Bajirao's Mastani united Hindus and Muslims after her death" (in en-US). http://www.indiatvnews.com/news/india/mastani-grave-pabel-village-visited-by-hindus-and-muslims-55996.html. 
  6. 6.0 6.1 Mehta, J. L. (2005). Advanced study in the history of modern India, 1707-1813. Slough: New Dawn Press, Inc. p. 124. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781932705546.
  7. Rajakelkar Museum பரணிடப்பட்டது 8 மார்ச்சு 2005 at the வந்தவழி இயந்திரம் accessed 3 March 2008
  8. Burn, Sir Richard (1964). The Cambridge History of India (in ஆங்கிலம்). CUP Archive.
  9. பாஜிராவ் மஸ்தானி - படம் எப்படி?
  10. திரைப்பார்வை: பாஜிராவ் மஸ்தானி - சாம்ராஜ்ய அரசியலில் சிக்கிய காதல்
{{bottomLinkPreText}} {{bottomLinkText}}
மஸ்தானி
Listen to this article

This browser is not supported by Wikiwand :(
Wikiwand requires a browser with modern capabilities in order to provide you with the best reading experience.
Please download and use one of the following browsers:

This article was just edited, click to reload
This article has been deleted on Wikipedia (Why?)

Back to homepage

Please click Add in the dialog above
Please click Allow in the top-left corner,
then click Install Now in the dialog
Please click Open in the download dialog,
then click Install
Please click the "Downloads" icon in the Safari toolbar, open the first download in the list,
then click Install
{{::$root.activation.text}}

Install Wikiwand

Install on Chrome Install on Firefox
Don't forget to rate us

Tell your friends about Wikiwand!

Gmail Facebook Twitter Link

Enjoying Wikiwand?

Tell your friends and spread the love:
Share on Gmail Share on Facebook Share on Twitter Share on Buffer

Our magic isn't perfect

You can help our automatic cover photo selection by reporting an unsuitable photo.

This photo is visually disturbing This photo is not a good choice

Thank you for helping!


Your input will affect cover photo selection, along with input from other users.

X

Get ready for Wikiwand 2.0 🎉! the new version arrives on September 1st! Don't want to wait?