மனக்கணக்கு (திரைப்படம்)
மனக்கணக்கு (Manakanakku) 1986 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ் நாடகத் திரைப்படமாகும். ஆர். சி. சக்தி[1] இயக்கிய இப்படத்தில் விஜயகாந்த், சரத் பாபு, ராஜேஷ், அம்பிகா மற்றும் ராதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். கமல்ஹாசன் விருந்தினராக நடித்தார். இப்படம் அம்பிகாவும், ராதாவும் சொந்தக் குரலில் பேசி நடித்த ஒரே திரைப்படமாகும். இப்படம் கமல்ஹாசனும், விஜயகாந்தும் இணைந்து நடித்த ஒரே திரைப்படமும் ஆகும்.
நடிகர்கள்
[தொகு]- விஜயகாந்த் ராமன்
- ராதா லட்சுமி
- ராஜேஷ் - பாண்டியன்
- சரத் பாபு- லட்சுமியின் கணவர்
- மாலாஸ்ரீ- நடிகை
- அம்பிகா - கல்யாணி
- எம். எல். ஏ தங்கராஜ்
- 'ராக்கெட்' ராமநாதன்
- கமல்ஹாசன்- திரைப்பட இயக்குனர் (விருந்தினர் தோற்றம்)
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்தார்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Veteran filmmaker RC Sakthi no more". தி டெக்கன் குரோனிக்கள். 24 February 2015. பார்க்கப்பட்ட நாள் 27 August 2020.
- ↑ "Mana Kanakku Songs: Mana Kanakku MP3 Tamil Songs by M. S. Viswanathan Online Free on Gaana.com" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-14.
Text is available under the CC BY-SA 4.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.