பெ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரி
குறிக்கோளுரை | அறிவும் சேவையும் |
---|---|
வகை | தொழில்நுட்பக் கல்லூரி |
உருவாக்கம் | 1951 |
முதல்வர் | டாக்டர் ஆர். ருத்தரமூர்த்தி |
கல்வி பணியாளர் | 750 |
பட்ட மாணவர்கள் | 4000 |
பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 1200 |
அமைவிடம் | , , |
வளாகம் | நகர் புறம், 45 ஏக்கர் |
சேர்ப்பு | அண்ணா பல்கலைக்கழகம் |
இணையதளம் | http://www.psgtech.edu |
பெ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரி (P. S. G. College of Technology) தமிழ் நாட்டின் தலைசிறந்த தொழில்நுட்பக் கல்லூரிகளில் ஒன்றாகும். இது அரசு உதவி பெறும் தனியார் தொழில்நுட்பக் கல்லூரியாகும். கோயம்புத்தூரில் 1951ஆம் ஆண்டு ஜி. ஆர். கோவிந்தராஜலு, டாக்டர் ஜி. ஆர். தாமோதரன் என்பவர்களால் உருவாக்கப்பட்ட கல்லூரியாகும். இந்தியாவில் தொழிற்சாலையுடன் கூடிய ஒரே கல்லூரி இதுவாகும்.[1]
1926ஆம் ஆண்டு பெரியவீடு சாமநாயுடு கோவிந்தசாமி நாயுடுவால் நிறுவப்பட்ட பி. எஸ். ஜி அறக்கட்டளையின் கீழ் அமைக்கப்பட்டதால் அவர் நினைவாக பெ. சா. கோ. என்னும் பெயர் வைக்கப்பட்டது.[2] இக்கல்லூரியின் தற்போதைய முதல்வர் முனைவர் ஆர். ருத்தரமூர்த்தி. இந்நிறுவனம் மூன்று 5 வருட ஒருங்கிணைந்த பொறியியல் படிப்புகளை வழங்குகிறது. இது வகுப்பு அறை பயிற்சியை தொழில்துறை பயிற்சி மூலம் ஒருங்கிணைக்கிறது.
குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள்:
[தொகு]- மயில்சாமி அண்ணாதுரை - திட்ட இயக்குநர், சந்திராயன்-1 திட்டம், இந்திய விண்வெளி ஆய்வு மையம்.
- சிவ நாடார் - நிறுவனர் மற்றும் தலைவர், ஹச் சி எல்
- கே. பாண்டியராஜன், நிறுவனர் மா ஃபோய், மேனாள் தமிழக அமைச்சர்
- பீளமேடு தண்டாயுதபாணி, நடுவண் அரசால் இந்தியை ஆட்சி மொழியாக்க நிறைவேற்றப்பட்ட அலுவல்மொழி சட்டம், 1963ஐ அமல் படுத்துவதை எதிர்த்து, தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிப்புப் போராட்டத்தின் போது நஞ்சுண்டு இறந்த போராளி ஆவார்.
- கோயமுத்தூர் சாந்தி சமூக சேவை மைய நிறுவனர் சாந்தி கியர்ஸ் ப.சுப்பிரமணியன்
மேலும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "பெ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரி".
- ↑ "பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி பற்றி". பார்க்கப்பட்ட நாள் 26 ஆகஸ்ட் 2024.
((cite web))
: Check date values in:|accessdate=
(help)
வெளி இணைப்புகள்
[தொகு]Text is available under the CC BY-SA 4.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.