For faster navigation, this Iframe is preloading the Wikiwand page for புதிய பொதுப் பட்டியல்.

புதிய பொதுப் பட்டியல்

புதிய பொதுப் பட்டியல்
New General Catalogue (NGC)
NGC 3982
Spiral Galaxy NGC 3982 displays numerous spiral arms filled with bright stars, blue star clusters, and dark dust lanes. It spans about 30,000 light years, lies about 68 million light years from Earth and can be seen with a small telescope in the constellation of Ursa Major.
நிறுவனம்ஜே. எ. ஈ. டிரெயர்
துன்சிங்க் வானாய்வகம், டப்ளின் பல்கலைக்கழகம்
தரவு மூலம்வில்லியம் ஹேர்ச்செல்
ஜான் ஹெர்ச்செல்
மற்றும் பலர்
(சுலென்டிக், டிஃப்ட் ஆகியோரால் புதிப்பிக்கப்பட்டது)
இலக்குகள்விண்மீன்சாராப் பொருட்கள் பற்றிய மதிப்பீடு
Data productsஎன்ஜிசி பட்டியல்
பூனைக்கண் நெபுலா
பு.பொ.ப 6326 [1]

நெபுலா மற்றும் விண்மீன் கொத்துகளின் புதிய பொதுப் பட்டியல் (New General Catalogue of Nebulae and Clusters of Stars, சுருக்கமாக NGC) என்பது உள் வானிலுள்ள நெபுலா மற்றும் விண்மீன் கொத்துகள் போன்று நன்கு அறியப்பட்ட வான்பொருட்களின் பட்டியலாகும். 1888 ஆம் ஆண்டில் ஜான் லூயிஸ் எமில் டிரேயர் தொகுத்த இப்பட்டியல் தற்போது, ஜான் ஹெர்ச்செல் அவர்களின் நெபுலா மற்றும் விண்மீன் கொத்துகளின் புதிய பதிப்பு பெயர்ப்பட்டியலாக விளங்குகிறது. இப்புதிய பட்டியலில் உள்ள 7840 பொருட்களும் புதிய வானுறுப்புகள் எனப்படுகின்றன. விரிவான பெயர்ப் பட்டியல்களுள் ஒன்றான இது அனைத்து வகையான உள்வான் பொருட்களையும் உள்ளடக்கியுள்ளது. நெபுலா மற்றும் விண்மீன் கொத்துகள் என்பது மட்டுமல்ல விண்மீன் திரள்களும் இதற்குள் உள்ளடங்கும். புதிய பொது பெயர்ப்பட்டியலுடன் கூடுதலாக இரண்டு அட்டவணைப் பட்டியல்களை (சுருக்கமாக அ.ப) துணைப்பட்டியல்களாக டிரேயர் வெளியிட்டார். 1520 உறுப்புகளுடன் முதலாவது துணைப்பட்டியல் 1895 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இரண்டாவது பட்டியல் 3866 உறுப்புகளுடன் 1908 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. ஆக அட்டவணைப் பட்டியலில் மொத்தமாக 5386 உறுப்புகள் இடம் பெற்றிருந்தன.

வானத்தின் தென் துருவத்தில் உள்ள புதிய பொருட்கள் எண்ணிக்கையில் முற்றிலும் சற்று குறைவாகவே வகைபடுத்தப்பட்டுள்ளன. ஆனால், ஜான் ஹெர்ச்செல் அல்லது ஜேம்ஸ் டன்லப் ஆகியோர் பல பொருட்களை அவதானித்தனர். மேலும் புதிய பொதுப்பட்டியலில் பல பிழைகள் காணப்பட்டன. அப்பிழைகளைக் களையும் முயற்சியாக 1973 ஆம் ஆண்டில் சுலெண்டிக்கு மற்றும் டிப்ட், புதிய பொதுப் பட்டியல் 2000.0 திட்டமாக 1888 ல் சின்னோட் என்பவர்களால மேற்கொள்ளப்பட்ட முயற்சி பகுதிமுயற்சியாக இருந்தது.

அசல் பட்டியல்

[தொகு]

வில்லியம் ஹெர்ச்செல், அவருடைய மகன் ஜான் மற்றும் அவரைச் சார்ந்த மற்றவர்களின் உற்று நோக்கல் குறிப்புகளைப் பயன்படுத்தி 1880 ஆம் ஆண்டில் ஜான் லூயிஸ் எமில் டிரேயர் அவர்கள் அசல் புதிய பொது பெயர்ப்பட்டியலைத் தொகுத்தார். ஏற்கனவே இவர் நெபுலா மற்றும் விண்மீன் கொத்துகளை உள்ளடக்கிய ஹெர்ச்செலின் பொது [2] பெயர்ப்பட்டியலுக்கு நிரப்பியாக 1000 புதிய உறுப்புகளடங்கிய ஒரு துணைப்பட்டியலை வெளியிட்டிருந்தார். 1886 ஆம் ஆண்டில், புதிய பொது பட்டியலை நிரப்ப மேலுமொரு அட்டவணைப் பட்டியலை இவர் பரிந்துரைத்தார்.ஆனால் ராயல் வானியல் கழகம்அதற்குப் பதிலாக ஒரு புதிய பொதுப்பட்டியலின் பதிப்பை வெளியிடுமாறு டிரேயரைக் கேட்டுக் கொண்டது. இதனால் ராயல் வானியல் கழகத்தின் நினைவாக 1888 ஆம் ஆண்டில் ஒரு புதிய பொதுப் பட்டியல் வெளியிடப்பட்டது[3][4]

2 முதல் 72 அங்குலம் வரை குறுக்களவு கொண்ட தொலை நோக்கிகள் மூலமாக பெறப்பட்ட தெளிவற்ற அறிக்கைகள் மற்றும் முரண்பாடுகளை வைத்துக் கொண்டு புதிய பொதுப் பட்டியலைத் தொகுப்பது டிரேயருக்கு ஒரு சவலாக இருந்தது. அவ்வாறு தொகுக்கும்போது, தான் வெளியிட்ட பட்டியலை அவர் சரிபார்த்தபோது, தன்பட்டியலில் இல்லாத சில பொருட்களையும் வெளிப்படையாகத் தன் பட்டியலுடன் சேர்த்துக் கொண்டார். இத்தொகுப்புப் பணியில் டிரேயர் கவனமாக ஈடுபட்டாலும் பட்டியலில் சிலபிழைகள் ஏற்பட்டன. இவை தவிர பொருட்களின் நிலை மற்றும் விளக்கவுரைகளிலும் பல பிழைகள் காணப்பட்டன. ஆகவே இவர் தொடர்புடைய முழுமையான ஆதாரக் குறிப்புகளை கொடுத்தார். எதிர்கால வானியலாருக்கு இக்குறிப்புகள் புதிய பொதுப் பட்டியலின் அசல் குறிப்புகளை ஆராயவும் அவசியமான திருத்தம் வெளியிடவும் பேருதவியாக இருந்தன [5]

பிற்காலத்தில் மேலும் 5386 பொருட்களைக் கொண்ட இரண்டு அட்டவணைப் பட்டியல்களுடன் புதிய பொதுப் பட்டியல் விரிவு படுத்தப்பட்டது. இவற்றில் பெரும்பாலான உறுப்புகளின் கண்டுபிடிப்புகள் புகைப்படங்களால் சாத்தியமானது.

அட்டவணைப் பட்டியல்

[தொகு]

இரண்டு அட்டவணைப் பட்டியல்களாக டிரேயர் அவர்கள் வெளியிட்ட நெபுலா மற்றும் விண்மீன் கொத்துகளின் பட்டியல்களே புதிய பொதுப் பட்டியலில் மேற்கொள்ளப்பட்ட முதல் மேம்படுத்தல் பணியாகும். 1895 [6] ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட முதல் அட்டவணைப்பட்டியல் 1520 உறுப்புகளையும் 1908 [7] ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இரண்டாவது அட்டவணைப் பட்டியல் 3866 உறுப்புகளையும் கொண்டிருந்தது. இவ்விரண்டு பட்டியல்களும் கூட்டாக இணைந்து புதிய பொதுப் பட்டியலில் மொத்தம் 5386 அட்டவணைப் பட்டியல் ( சுருக்கமாக அ.ப ) உறுப்புகள் கூடுதலாக இடம்பெற்றன. 1888 மற்றும் 1907 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கண்டறியப்பட்ட விண்மீன் திரள்கள், விண்மீன் கொத்துகள் மற்றும் நெபுலாக்களின் பட்டியலாக இப்ப்ட்டியல் சுருங்கியது. 1912 [8] ஆம் ஆண்டில் அட்டவணைப் பட்டியல் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வெளியிடப்பட்டது.

திருத்தப்பட்ட புதிய பொதுப் பட்டியல்

[தொகு]

ஜாக் டபிள்யூ சுலெண்டிக் மற்றும் வில்லியம் ஜி டிப்ட் இருவரும் 1970 ஆம் ஆண்டின் முற்பகுதியில் தொகுத்த விண்மீன் கூட்டமல்லாத வானியல் பொருட்களின் பட்டிய்லே திருத்தப்பட்ட புதிய பொது பட்டியல் ( சுருக்கமாக தி.பு.பொ.ப ) ஆகும். இப்பட்டியல் 1973 ஆம் ஆண்டில் மேம்படுத்தப்பட்ட புதிய பொதுப் பட்டியலாக [9] வெளியிடப்பட்டது. எனினும், இப்பட்டியல் மூன்று கோடைகளுக்குள் தொகுக்கப்பட்டதால் புதிய பொதுப் பட்டியல் தரவுகளில் முன்னதாக மேற்கொள்ளப்பட்ட பல திருத்தங்களை ( குறிப்பாக டிரேயர் தானே வெளியிட்ட திருத்தங்களின் பட்டியல் உட்பட) இணைக்கத் தவறியிருந்தது. இவை மட்டுமின்றி மேலும் புதிய தவறுகளையும் பட்டியலில் உண்டாக்கியிருந்தது[5].

புதிய பொதுப் பட்டியல் 2000.0

[தொகு]

ரோஜர் டபிள்யூ சின்னோட் அவர்கள் 1988 ஆம் ஆண்டில் ஜே2000.0 என்ற[10][11] கூட்டமைப்பை உபயோகித்து தொகுத்த நெபுலா மற்றும் விண்மீன் கொத்துகளின் முழுமையான பெயர்ப் பட்டியலே புதிய பொதுப்பட்டியல் 2000.0 ஆகும். இது நெபுலா மற்றும் நட்சத்திரக் கொத்துகளின் முழுமையான புதிய பொது மற்றும் குறியீட்டு பெயர்ப்பட்டியல் எனவும் அழைக்கப்படுகிறது. இப்பட்டியல் பல்வேறு வானியலார்கள் சுட்டிக்காட்டிய திருத்தங்களையும் பிழைத் திருத்தங்களையும் இணைத்திருந்தது. ஆனாலும் இப்பட்டியலும் அசல் வெளியீடுகளை அலட்சியப்படுத்தி நவீன திருத்தங்களுக்கு ஆதரவும் [5] அளித்திருந்தது.

புதிய பொதுப் பட்டியல் / அட்டவணைப் பட்டியல் திட்டம்

[தொகு]

புதிய பொதுப் பட்டியல் / அட்டவனைப் பட்டியல் திட்டம் ( புபொப/அப திட்டம் ) என்பது 1993 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட கூட்டமைப்புத் திட்டம் ஆகும். இதன் நோக்கம் அனைத்துப் புதிய பொதுப் பட்டியல் உறுப்புகள் மற்றும் அட்டவணைப் பட்டியல் உறுப்புகளை அடையாளம் காண்பதும், அவற்றின் படங்களையும் அடிப்படை வானியல் தரவுகளைச் சேகரிப்பதும் ஆகும்[12].

திருத்தப்பட்ட புதிய பொதுப் பட்டியல் மற்றும் அட்டவணைப் பட்டியல்

[தொகு]

திருத்தப்பட்ட புதிய பொது பெயர்ப்பட்டியல் மற்றும் அட்டவணைப் பெயர்ப்பட்டியல் (சுருக்கமாக திபுபொப /அப ) என்பது 2009 [13][14] ஆம் ஆண்டில் ஊல்ப்காங் ஸ்டெய்னிக் அவர்கள் தொகுத்த ஒரு பட்டியலின் தொகுப்பு ஆகும். திருத்தப்பட்ட இப்பட்டியலே மிகவும் விரிவான மற்றும் அதிகாரப்பூர்வமான புதிய பொதுப் பட்டியல் மற்றும் அட்டவணைப் பட்டியல்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது [15][16].

மேற்கோள்கள்

[தொகு]
  1. Miszalski et al. 2011
  2. Dreyer, J. L. E. (1878). "A Supplement to Sir John Herschel's "General Catalogue of Nebulae and Clusters of Stars"". Transactions of the Royal Irish Academy 26: 391–426. Bibcode: 1878RIATr..26..381D. http://ia600504.us.archive.org/20/items/supplementtosirj00dreyrich/supplementtosirj00dreyrich.pdf. 
  3. Bradt, H. (2004). Astronomy Methods: A Physical Approach to Astronomical Observations. கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம். p. 52. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-53551-9.
  4. Dreyer, J. L. E. (1888). "A New General Catalogue of Nebulae and Clusters of Stars, being the Catalogue of the late Sir John F.W. Herschel, Bart., revised, corrected, and enlarged". Memoirs of the Royal Astronomical Society 49: 1–237. Bibcode: 1888MmRAS..49....1D. http://archive.org/download/newgeneralcatalo00dreyrich/newgeneralcatalo00dreyrich.pdf. 
  5. 5.0 5.1 5.2 Corwin, H.G. Jr. (12 October 1999). "The NGC/IC Project: An Historical Perspective". The NGC/IC Project. Archived from the original on 2012-05-10. பார்க்கப்பட்ட நாள் 2012-04-22.
  6. Dreyer, J. L. E. (1895). "Index Catalogue of Nebulae found in the years 1888 to 1894, with Notes and Corrections to the New General Catalogue". Memoirs of the Royal Astronomical Society 51: 185–228. Bibcode: 1895MmRAS..51..185D. 
  7. Dreyer, J. L. E. (1908). "Second Index Catalogue of Nebulae and Clusters of Stars; containing objects found in the years 1895 to 1907, with Notes and Corrections to the New General Catalogue and to the Index Catalogue for 1888–94". Memoirs of the Royal Astronomical Society 59: 105–198. Bibcode: 1908MmRAS..59..105D. http://archive.org/download/secondindexcatal00dreyrich/secondindexcatal00dreyrich.pdf. 
  8. Dreyer, J. L. E. (1912). "Corrections to the New General Catalogue resulting from the revision of Sir William Herschel's Three Catalogues of Nebulae". Monthly Notices of the Royal Astronomical Society 73: 37–40. doi:10.1093/mnras/73.1.37. Bibcode: 1912MNRAS..73...37D. 
  9. Sulentic, J. W.; Tifft, W. G. (1973). The Revised New Catalogue of Nonstellar Astronomical Objects. University of Arizona Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8165-0421-3.
  10. "NGC2000 - NGC2000.0: Complete New General Catalogue and Index Catalogue". Goddard Space Flight Center. பார்க்கப்பட்ட நாள் 2012-04-22.
  11. Sinnott, R. W. (1988). NGC 2000.0: The Complete New General Catalogue and Index Catalogues of Nebulae and Star Clusters. Sky Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-933346-51-2.
  12. Erdmann, R. E. (2010). "The NGC/IC Project". The NGC/IC Project. Archived from the original on 2012-12-18. பார்க்கப்பட்ட நாள் 2012-04-22.
  13. Steinicke, W. (17 January 2012). "Revised New General Catalogue and Index Catalogue". பார்க்கப்பட்ட நாள் 2012-04-22.
  14. Steinicke, W. (2010). Observing and Cataloguing Nebulae and Star Clusters: From Herschel to Dreyer's New General Catalogue. கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம். பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-19267-5.
  15. Duerbeck, H. W. (2009). "Book Review: Nebel und Sternhaufen - Geschichte ihrer Entdeckung Beobachtung und Katalogisierung (Steinicke)". Journal of Astronomical History and Heritage 12 (3): 255. Bibcode: 2009JAHH...12..255D. 
  16. Duerbeck, H. W. (2011). "Observing and Cataloguing Nebulae and Star Clusters. From Herschel to Dreyer's New General Catalogue (Steinicke)". Journal of Astronomical History and Heritage 14 (1): 78. Bibcode: 2011JAHH...14Q..78D. 

வெளி இணைப்புகள்

[தொகு]
{{bottomLinkPreText}} {{bottomLinkText}}
புதிய பொதுப் பட்டியல்
Listen to this article

This browser is not supported by Wikiwand :(
Wikiwand requires a browser with modern capabilities in order to provide you with the best reading experience.
Please download and use one of the following browsers:

This article was just edited, click to reload
This article has been deleted on Wikipedia (Why?)

Back to homepage

Please click Add in the dialog above
Please click Allow in the top-left corner,
then click Install Now in the dialog
Please click Open in the download dialog,
then click Install
Please click the "Downloads" icon in the Safari toolbar, open the first download in the list,
then click Install
{{::$root.activation.text}}

Install Wikiwand

Install on Chrome Install on Firefox
Don't forget to rate us

Tell your friends about Wikiwand!

Gmail Facebook Twitter Link

Enjoying Wikiwand?

Tell your friends and spread the love:
Share on Gmail Share on Facebook Share on Twitter Share on Buffer

Our magic isn't perfect

You can help our automatic cover photo selection by reporting an unsuitable photo.

This photo is visually disturbing This photo is not a good choice

Thank you for helping!


Your input will affect cover photo selection, along with input from other users.

X

Get ready for Wikiwand 2.0 🎉! the new version arrives on September 1st! Don't want to wait?