For faster navigation, this Iframe is preloading the Wikiwand page for பிரியங்கா காந்தி.

பிரியங்கா காந்தி

பிரியங்கா காந்தி
கிழக்கு உத்தரப்பிரதேச அகில இந்தியக் காங்கிரசு செயற்குழுவின் பொதுச் செயலர்[1]
பதவியில் உள்ளார்
பதவியில்
7 பெப்ரவரி 2019
தலைவர்ராகுல் காந்தி,சோனியா காந்தி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு12 சனவரி 1972 (1972-01-12) (அகவை 52)
புது தில்லி, இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு (2019–தற்போது வரை)
துணைவர்ராபர்ட் வதேரா (தி. 1997)
பிள்ளைகள்2
பெற்றோர்ராஜீவ் காந்தி
சோனியா காந்தி
உறவினர்நேரு-காந்தி குடும்பம்
கல்விதில்லி பல்கலைக்கழகம் (இளங்கலை)
கையெழுத்து

பிரியங்கா காந்தி (Priyanka Gandhi, பிறப்பு: 1972 சனவரி 12) இந்திய அரசியல்வாதி. இவர் ராஜீவ் காந்தி, சோனியா காந்தி ஆகியோரின் மகளும், ராகுல் காந்தியின் சகோதரியும், பெரோஸ் கான்(யூனூஸ் ஹான் மகன்) இந்திரா காந்தி ஆகியோரின் பேர்த்தியும் ஆவார். 2019 சனவரி 23 இல் இவர் கிழக்கு உத்தரப்பிரதேசத்துக்கான அகில இந்திய காங்கிரசு செயற்குழுவின் பொதுச் செயலராக நியமிக்கப்பட்டார்.[2]

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

தற்போதைய ஆளும் கூட்டணியான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவியும் மற்றும் இந்திய தேசிய காங்கிரசின் தலைவியுமான சோனியா காந்தி-ராஜீவ் காந்தியின் இரண்டாவது குழந்தையாவார்.

இவரின் தந்தை ராஜீவ் காந்தி, பாட்டி இந்திரா காந்தி மற்றும் முப்பாட்டனார் ஜவஹர்லால் நேரு ஆகிய அனைவரும் இந்திய பிரதமர்களாக பதவி வகித்தவர்கள் ஆவார்கள். இவரின் பாட்டனார் பெரோஸ் காந்தி மதிப்புக்குரிய நாடாளுமன்ற உறுப்பினராகவும், இவரின் முப்பாட்டனார் மோதிலால் நேரு அவர்கள் இந்திய சுதந்திர போராட்ட இயக்கத்தின் முக்கிய தலைவராகவும் திகழ்ந்தவர்கள் ஆவர்.

இவர் (புது டில்லியில்)[3] ஜீசஸ் மற்றும் மேரி கான்வென்ட்டில் உள்ள மாடர்ன் பள்ளிக்கூடத்தில் பயின்றார். தில்லி பல்கலைக்கழகத்தில் உளவியல் பிரிவில் பட்டம் பெற்றார். வியு2பிஜிஒய் (VU2PGY) என்ற பெயர்கொண்ட பொழுதுபோக்கு வானொலியை இயக்குபவராக இருந்தார்.

அரசியல் வாழ்க்கை

[தொகு]

அரசியலில் பிரியங்கா காந்தி, காந்தி குடும்பத்தின் வாரிசாகவே சில காலம் பேசப்பட்டார். தனது தாயார் மற்றும் சகோதரருக்கு உதவியாகவே இருந்தபோதிலும், தனது குடும்பத்திற்கே (தனது குழந்தைகளுக்கே) முக்கியத்துவம் கொடுக்கிறார். ஆரம்பத்தில் இவர் காங்கிரஸ் கட்சிக்காக உத்திரப்பிரதேசத்தில் தொடர்ந்து தேர்தல் பிரச்சாரம் செய்தபோது, அரசியலில் தனக்கு சிறிதளவே ஆர்வம் உள்ளதாகக் கூறினார்.

1999 இல் தேர்தல் பிரச்சாரத்தின்போது பிபிசி வானொலிக்கு அளித்த பேட்டியில் "நான் மனதளவில் மிகத்தெளிவாக இருக்கின்றேன். மக்களை நான் விரும்புகின்ற அளவுக்கு, அரசியல் என்னை ஈர்க்கவில்லை. அரசியலில் இல்லாமலேயே அவர்களுக்கு என்னால் நிறைய நன்மைகளைச் செய்ய இயலும்[[4]. "ஆயிரம் முறை சொல்லிவிட்டேன், நான் அரசியலில் சேருவதற்கு ஆர்வம் காட்டவில்லை ...[5]" என்ற அவரின் பதிலின் மூலம் அவர் அரசியலில் சேருவது குறித்த கேள்விகளுக்கான சந்தேகங்கள் தீர்க்கப்பட்டன.

இருப்பினும் இவர் தனது தாயார் மற்றும் சகோதரரின் தொகுதிகளான ரே பரேய்லி மற்றும் அமேதி ஆகியவற்றிற்கு தொடர்ந்து விஜயம் செய்ததன் மூலம் மக்களை நேரடியாக சந்தித்து வந்தார். இத்தொகுதியில் இவர் மிகப் பிரபலமானவராவார். இவர் செல்லும் இடமெல்லாம் பெரும் கூட்டம் கூடும். ஒவ்வொரு தேர்தலின் போதும் அமேதியில், "பிரியங்கா தேர்தலில் போட்டியிடவேண்டும்" என்ற முழக்கம் பிரபலமாக எழுப்பப்படும். (இந்த முழக்கம் அமேதியிலிருந்து பிரியங்காவுக்காக [தேர்தலில் நிற்பதற்காக] எழுப்பப்படுவதாகும்)[6].

இவர் தொடர்ந்து சிறந்த ஒருங்கிணைப்பாளராகவும், சமசிந்தனை உடையவராகவும் மற்றும் இவரின் தாயாருக்கு "அரசியல் விஷயங்களில் நல்ல ஆலோசகராகவும்" செயல்படுவதாக நம்பப்படுகின்றது[6].

2004 இன் இந்திய பொதுத்தேர்தலில் இவரது தாயாரின் தேர்தல் பிரச்சாரத்திற்கு மேலாளராகவும் மற்றும் இவரது சகோதரர் ராகுல் காந்தியின் தேர்தல் பிரச்சாரத்தை மேற்பார்வை செய்தும் இவர் உதவினார். ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் தேர்தல் சமயத்தில் அவர் கூறியதாவது, "அரசியல் என்பது மக்களுக்கு சேவை செய்வதாகும். நானும் ஏற்கனவே அதைத்தான் செய்துகொண்டிருக்கின்றேன். இன்னும் தொடர்ந்து ஐந்து வருடங்களுக்கு அதை செய்வேன் என்று கூறினார்."[7]. இக்கருத்து இவர் உத்திரப்பிரதேச காங்கிரஸ் கட்சிக்காக சில பொறுப்புகளை ஏற்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. பிபிசியின் ஹிந்தி சேவைக்கு இவர் அளித்த பேட்டியில், இலங்கையில் நடக்கும் சண்டையைப்பற்றி குறிப்பிடுகையில், "எது உங்களை தீவிரவாதியாக மாற்றியதோ அதற்கு நீங்கள் காரணம் இல்லை, ஆனால் நீங்கள் தேர்ந்தெடுக்கும் முறை உங்களை தீவிரவாதியாக உருவாக்கும்” எனக்கூறினார்.

2007, உத்திரபிரதேச சட்டசபை தேர்தல்கள்

[தொகு]

2007 இல் உத்திரப்பிரதேசத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ராகுல் காந்தி மாநிலம் முழுவதும் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அப்போது இவர் அமேதி, ரேய்பரேலி பகுதியில் உள்ள பத்து தொகுதிகளில் கவனம் செலுத்தி, இரண்டு வாரங்களை செலவிட்டு, தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்சித் தொண்டர்களிடையே நிலவிய மோதலை முடிவுக்கு கொண்டு வந்தார்[8].

முழுவதுமாக இம்மாநிலத்தில் உள்ள 402[9] தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 22 இடங்களை மட்டுமே வெல்ல வழி வகுத்தது. இது கடந்த பத்தாண்டுகளில் இக்கட்சி வென்ற மிக குறைந்த அளவாகும். எப்படி இருப்பினும், இவருடைய மற்றும் பிரியங்காவின் ஒருங்கிணைக்கும் தன்மையும், ஓட்டுக்களைப் பெறும் திறமையும் வெளிப்பட்டது. 2002 இல் நடந்த சட்டசபை தேர்தலில் மொத்தம் பத்து தொகுதிகளில்(அமேதி ரேபரேலி) இரண்டு தொகுதிகளை மட்டும் வென்ற இக்கட்சி இப்போது பத்து இடங்களை வென்றதன் மூலம் பரவலான முன்னேற்றம் வெளிப்பட்டது. அனைத்து தொகுதிகளிலும் குறிப்பிடத்தக்க வாக்குகளை பெற்றப்போதும் தற்போது மீதம் உள்ள எட்டு இடங்களை மட்டுமே இக்கட்சி வென்றுள்ளது. இது கட்சிக்குள் ஆரம்பத்தில் அதிருப்தியை உண்டாக்கியது, எனினும் கட்சி வளர்ச்சி அடைந்தது.[10] ரேய்பரேலியின் ஐந்து தொகுதிகள் மற்றும் அமேதியின் தொகுதிகளின் விவரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன.

எண்: தொகுதி

கட்சி

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி அதிகாரப்பூர்வமான முடிவுகள் இதேகா %த்தில் 2007 (2002)
091 பச்சர்வான் காங்கிரஸ் ராஜா ராம் முடிவு : 91 பரணிடப்பட்டது 2008-09-29 at the வந்தவழி இயந்திரம் 33.19 (9.95)
093 ரேபரேலி சுயே அகிலேஷ் குமார்சிங்க் முடிவு : 93 பரணிடப்பட்டது 2008-09-29 at the வந்தவழி இயந்திரம் 20.25 (74.18)
094 சதொன் காங்கிரஸ் ஷிவ் கணேஷ் முடிவு  : 94 பரணிடப்பட்டது 2008-09-29 at the வந்தவழி இயந்திரம் 49.13 (6.69)
095 சரேணி காங்கிரஸ் அசோக் குமார் சிங்க் முடிவு : 95 பரணிடப்பட்டது 2008-09-29 at the வந்தவழி இயந்திரம் 43.53 (20.86)
096 தால்மஆவ் காங்கிரஸ் அஜய் பால் சிங்க் முடிவு : 96 பரணிடப்பட்டது 2008-09-29 at the வந்தவழி இயந்திரம் 36.38 (9.23)
092 திலோய் சாய் மயன்கேஷ்வர் ஷரன் சிங்க் முடிவு : 92 பரணிடப்பட்டது 2008-09-29 at the வந்தவழி இயந்திரம் 31.34 (24.02)
097 சலோன் காங்கிரஸ் ஷிவ் பலக் பாசி முடிவு : 97 பரணிடப்பட்டது 2008-09-29 at the வந்தவழி இயந்திரம் 37.14 (25.17)
105 அமேதி காங்கிரஸ் அமிதா சிங்க் முடிவு : 105 பரணிடப்பட்டது 2008-09-29 at the வந்தவழி இயந்திரம் 40.59 (28.06)
106 குரிகஞ் பிஎஸ்பி சந்திர பிரகாஷ் முடிவு : 106 பரணிடப்பட்டது 2008-09-29 at the வந்தவழி இயந்திரம் 24.55 (22.71)
107. ஜக்டிஷ்பூர் காங்கிரஸ் ராம் சேவாக் முடிவு : 107 பரணிடப்பட்டது 2008-09-29 at the வந்தவழி இயந்திரம் 37.6 (33.04)

ரேபரேலி தொகுதியை கவனிக்கவும், 1993 முதல் வெற்றிபெற்று வரும் முன்னாள் காங்கிரஸ் வேட்பாளர், இதே காங்கிரசிலிருந்து விலகி சுயேச்சையாக நின்று வெற்றிபெற்றார். மற்ற அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் குறிப்பிட்டு சொல்லும்படியான வெற்றியைப் பெற்றுள்ளது.

சொந்த வாழ்க்கை

[தொகு]

டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் ராபர்ட் வத்ராவை இவர் திருமணம் செய்துகொண்டார்.[11] இவர்களுக்கு ரைஹன் மற்றும் மிராயா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளன.

மஸ்ஸிமோ குவோற்றோச்சியின் தொடர்புகள் பற்றிய குற்றச்சாட்டுகள்

[தொகு]

போபோர்ஸ் ஊழலுக்குப்பின் ஆயுத வியாபாரியான ஒட்டோவியோ குவோற்றோச்சி, 6 பிப்ரவரி 2007 அன்று அர்ஜென்டினாவில் கைது செய்யப்பட்டார். ஆனால் இந்திய அரசாங்கம் அவரை இந்தியா கொண்டுவர தவறிவிட்டது. இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ், ராகுல் மற்றும் பிரியங்காவுடன் இருபது வருடங்களாக வளர்ந்த ஒட்டோவியோவின் மகன் மஸ்ஸிமோ குவோற்றோச்சியை இதில் தொடர்புபடுத்தி குற்றம் சாட்டியது. இந்தியாவுக்கு புதியவர்களான இருவரின் தாயார்களும் பிப்ரவரி 17[12] அன்று ஒரு விருந்தில் சந்தித்துக் கொண்டனர். இருப்பினும் இதை காங்கிரஸ் பொது செயலாளர் திக்விஜய் சிங் திட்டவட்டமாக மறுத்தார். ஒரு பேட்டியில் அவர் கூறுகையில்: "குவோற்ரோட்ச்சியின் விசாரணையில் அரசாங்கம் எப்போதும் தலையிடவில்லை என்பதை நான் திட்டவட்டமாக கூறிக்கொள்கிறேன். இதைப்போலவே ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியும் இது தொடர்பாக எதையும் செய்யவில்லை,"[13]. முடிவில்லாத யுகங்கள் இவ்விஷயத்தில் தொடர்கின்றன, மாசினோ இந்தியாவில் இருந்தபொழுது, குவோற்ரோச்சி கைதானது பற்றி சி பி ஐ ஒப்புக்கொள்ளத் தாமதித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது[14].

குறிப்புகள்

[தொகு]
  1. https://aajtak.intoday.in/story/priyanka-gandhi-appointed-congress-general-secretary-lok-sabha-election-rahul-gandhi-1-1056274.html
  2. IANS. "Priyanka Gandhi enters active politics, given charge of eastern UP". Khaleej Times. பார்க்கப்பட்ட நாள் 2019-01-23.
  3. அமிர்தா கபூர் எம்.என். கபூரின் கதைகள் பரணிடப்பட்டது 2008-07-08 at the வந்தவழி இயந்திரம், மாடர்ன் பள்ளியின் வரலாறு
  4. மைக் ஊல்ட்ரிஜ், பிபிசி செய்திகள், பிரியங்கா: பாரம்பரிய பரம்பரையின் மகள், 1 அக்டோபர் 1999
  5. ரெடிப் வலைப்பின்னல்: ரெடிப் வலைப்பின்னலின் தேர்தல் நேர்காணல்/பிரியங்கா வத்ர
  6. 6.0 6.1 Purnima S. Tripathi (Volume 19 - Issue 26, December 21, 2002 - January 03, 2003). "A flutter in Amethi". Frontline (magazine) இம் மூலத்தில் இருந்து மே 4, 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090504111724/http://www.hinduonnet.com/fline/fl1926/stories/20030103004403100.htm. பார்த்த நாள்: 2007-08-15. 
  7. Sanjay K Jha (2004). "Priyanka says, I am already in politics". The Pioneer (daily), Sultanpur. http://www.dailypioneer.com/indexn12.asp?main_variable=VOTE_2004&file_name=vote365.txt&counter_img=365. பார்த்த நாள்: 2008-08-15. "She has dedicated herself to managing the election of her mother in Rae Bareli, doing everything from handling small details of the campaign to addressing public meetings herself." 
  8. Atiq Khan (2007-04-14). "Priyanka campaigns in Amethi". தி இந்து இம் மூலத்தில் இருந்து 2009-05-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090503231304/http://www.hindu.com/2007/04/14/stories/2007041410270300.htm. 
  9. உ பி சட்டசபை தேர்தல் முடிவுகள், தேர்தல் ஆணைய இணைய தளம் பரணிடப்பட்டது 2008-09-29 at the வந்தவழி இயந்திரம்
  10. "Gandhi siblings' magic worked in Rae Bareli, Amethi". May 11, 2007. http://www.rxpgnews.com/politics/Gandhi-siblings-magic-worked-in-Rae-Bareli-Amethi_27514.shtml. பார்த்த நாள்: 2008-08-16. 
  11. Ashok Malik (March 4, 2007). "The clue to Mr Q". The Pioneer. http://www.dailypioneer.com/columnist1.asp?main_variable=Columnist&file_name=ASHOK64%2Etxt&writer=ASHOK&validit=yes. "The Quattrocchi children were born and grew up here and were friends of Rahul and Priyanka Gandhi. It is believed that Robert Vadra's mother knew the Quattrocchi household fairly well, and that is where a future couple first met." 
  12. Coomi Kapoor (March 04, 2007). "Three-monkeys mode". இந்தியன் எக்சுபிரசு. http://www.indianexpress.com/story/24764.html. பார்த்த நாள்: 2006-06-19. 
  13. Indo-Asian News Service (March 10, 2007). "Congress, Sonia want Q's extradition: Digvijay Singh". Hindustan Times இம் மூலத்தில் இருந்து 2012-02-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120214122650/http://www.hindustantimes.com/News-Feed/india/Congress-Sonia-want-Q-s-extradition/Article1-209332.aspx. பார்த்த நாள்: 2006-06-19. 
  14. Sanjay Dubey (Mar 10 , 2007). "The Quattrocchi Quagmire: The kickback cloud hovers over him. His son does business in India. Why can't the CBI get him?". tehelka.com இம் மூலத்தில் இருந்து 2007-09-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070927204408/http://www.tehelka.com/story_main27.asp?filename=Ne100307The_quattrocchi.asp. "The Interpol immediately (Feb 7) informed CBI about the arrest, but CBI and the government did not go public with the news until February 23, when the media had come to know about it. ... In a related development, a day before CBI announced Ottavio Quattrocchi's arrest, his son Massimo Quattrocchi left for Milan from New Delhi. (Lufthansa flight no.761)." 

வெளி இணைப்புகள்

[தொகு]
{{bottomLinkPreText}} {{bottomLinkText}}
பிரியங்கா காந்தி
Listen to this article

This browser is not supported by Wikiwand :(
Wikiwand requires a browser with modern capabilities in order to provide you with the best reading experience.
Please download and use one of the following browsers:

This article was just edited, click to reload
This article has been deleted on Wikipedia (Why?)

Back to homepage

Please click Add in the dialog above
Please click Allow in the top-left corner,
then click Install Now in the dialog
Please click Open in the download dialog,
then click Install
Please click the "Downloads" icon in the Safari toolbar, open the first download in the list,
then click Install
{{::$root.activation.text}}

Install Wikiwand

Install on Chrome Install on Firefox
Don't forget to rate us

Tell your friends about Wikiwand!

Gmail Facebook Twitter Link

Enjoying Wikiwand?

Tell your friends and spread the love:
Share on Gmail Share on Facebook Share on Twitter Share on Buffer

Our magic isn't perfect

You can help our automatic cover photo selection by reporting an unsuitable photo.

This photo is visually disturbing This photo is not a good choice

Thank you for helping!


Your input will affect cover photo selection, along with input from other users.

X

Get ready for Wikiwand 2.0 🎉! the new version arrives on September 1st! Don't want to wait?