For faster navigation, this Iframe is preloading the Wikiwand page for பயனர் பேச்சு:மு.மயூரன்.

பயனர் பேச்சு:மு.மயூரன்


50px|தொகுப்பு
1

விக்கியில் பொதியப்பட்ட ஒலிச்செயலி.

[தொகு]

விக்கிப்பீடியாவின் ஒலிக்கோப்புக்களை இயக்கி கேட்பதற்கு உட்பொதியப்பட்ட திறந்த மூல ஒலிச்செயலி ஒன்று ஆங்கில விக்கிப்பீடியாவில் பயன்படுத்தப்பட்டிருந்ததைப்பார்த்தேன்.

ஜாவா சூழல் உள்ள கணினிகள் அனைத்திலும் இயங்கக்கூடிய இச்செயலி பயனுள்ளதாகப்படுகிறது.

இதனை தமிழ் விக்கிப்பீடியாவில் பயன்படுத்துவதற்கான வாய்ப்புக்கள், வழிமுறைகள் ஏதேனும் இருக்கிறதா?

--மு.மயூரன் 11:21, 8 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

உங்கள் நிகழ்ப்பட துண்டுகள்

[தொகு]

நன்று. ஆனால் மஞ்சள் நிற சுட்டி சறுக்குவது சற்று உறுத்துகின்றது. --Natkeeran 22:15, 8 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

நான் பயன்படுத்திய மென்பொருளின் வழு என்று நினைக்கிறேன். அத்தோடு குரல்வழி வழிகாட்டலும் செய்யமுடியாமற்போனது. இப்போதைக்கு இதை வைத்துக்கொள்ளலாம். பெரும்பாலும் இந்த மென்பொருளின் அடுத்த பதிப்பு விரைவில் வெளியாகும். அதில் குரல்வசதி உண்டு. இந்த நிகழ்படங்களின் வழிகாட்டல் பயனுள்ளதா/ எளிமையாக இருக்குமா புதிய பயனர்களுக்கு? --மு.மயூரன் 09:04, 9 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]
ஆமாம், பயனுள்ளவை. சுரதா அவர்களின் தளத்தில் சிறந்த உதாரணங்கள் கிடைக்கின்றன. --Natkeeran 17:52, 9 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

http://www.smartdraw.com/specials/flowchart.asp மாதிரி கட்டற்ற மென்பொருட்கள் கிடைக்குமா

[தொகு]

flow chart, diagrams கீற. Windows இயங்கத்தக்க!!. X-fig லினிக்ஸ் அல்லது யுனிக்ஸ்சில் நன்று, ஆனால் Windows சரியில்லை என்பது முந்தைய அனுபவம். --Natkeeran 17:06, 18 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

பார்க்க

[தொகு]

அரசவழி முறையின் குறைகள் --Natkeeran 01:34, 27 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

கட்டுரை உருவாக்கக் கோரிக்கை

[தொகு]
  • ரோசா லுக்சம்பேர்க்
  • அலன்டே

சே குவேரா விரிவாக்கம் மிக நன்று. புதிய கட்டுரைகள் உருவாக்குவதிலும் குறுங்கட்டுரை விரிவாக்கங்களிலும் தொடர்ந்து பங்களிக்க வேண்டுகிறேன். உன்போன்ற விடயமறிந்தவர்களே ஆடிக்கொருக்கா ஆவணிக்கொருக்கா என்று வந்து போவது உனக்கே நியாயமாக இருக்கிறதா? எப்போதும் போல அண்மைய மாற்றங்களை அவதானிக்கிறாய் என்றே நம்புகிறேன். இரவிரவாக விழித்திருந்து உரையடிய காலம்போய் விக்கிப்பீடியாவில் கதைக்கும் காலம் வந்திருக்கிறது :-{ --கோபி 17:09, 12 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

ஆமாமா அப்பப்ப வந்து போறதோட கணினி தொடர்பான கட்டுரைகளை உருவாக்கவும் உரை திருத்தவும் உதவுங்கள். சே குவேரா கட்டுரை நன்று. இத்தனை நாள் அவரைப் பற்றி மேம்போக்காக அறிந்திருந்தாலும் நீங்கள் தமிழில் எழுதிய பிறகு தான் தகவல்களை தேடிப்பிடித்துப் படித்தேன். இன்றைய சிறப்புப் படமாகவும் அவரது படம் முதற்பக்கத்தில் இடம்பெற்றிருக்கிறது.--Ravidreams 17:23, 12 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

விரைவில் நலம் பெறுவீர்கள் என எதிர்பாக்கின்றேன்

[தொகு]

சில நிமிடங்கள் தொலைபேசியில் உரையாடியிருந்தேன். லினக்ஸ் தொடர்பான எனது சந்தேகத்தைத் தீர்ததற்கும் நன்றி. விரைவில் சிக்குன்குனியா இல் இருந்து சுகமடைவீர்கள் என எதிர்பார்க்கின்றேன். --Umapathy 16:22, 22 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

விரைவில் சிக்குன்குனியா இல் இருந்து சுகமடைந்து த.வி. வரவேண்டும் :-)--Natkeeran 20:01, 22 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

விரைவில் குணமடைய அனைத்து தவி பயனர்களுடன் சேர்ந்து பிரார்த்திக்கிறேன்.--Kanags 20:33, 22 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]
விரைவில் குணமடைந்து மீண்டு வருவேண்டும் என வேண்டுகின்றேன்--கலாநிதி 17:09, 23 நவம்பர் 2006 (UTC)
விரைவில் சுகம்பெற எனது பிரார்த்தனைகள் Mayooranathan 17:37, 23 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியா இறுவட்டு

[தொகு]

சிறுவர்களுக்கான தெரிவு செய்யப்பட்ட 2500 கட்டுரைகளை கொண்ட விக்கிப்பீடியா இறுவட்டு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இது பிட்டொரென்ட் வழியாக தரவிறக்கக்கிடைக்கிறது. பார்க்க --மு.மயூரன் 05:06, 25 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

தகவல்களுக்கு நனறி மயூரன். தமிழ் விக்கிப்பீடியாவை இறுவட்டில் வெளியிட ஏதாவது வழியுள்ளதா?. இதனால் இணைய இணைப்பிலாத பாடசாலைகள் கூட ஓர் விக்கிப்பீடியாவை ஓர் உசாத்துணையாகப் பாவிக்க வழிபிறக்கும் என்று நினைக்கின்றேன். இலங்கையில் மைக்ரோசாப்ட் Teacher PC திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தவுள்ளனர் இது தொடர்பான ஆலோசனைகளை வழங்குமாறு ஆங்கிலப் பத்திரிகைகளில் விளம்பரங்களைக் கண்டேன். நாம் விக்கிப்பீடியாவை ஓர் உசாத்துணையாகக் கொள்ளவேண்டும் என்று வலியுறுத்த வேண்டும். தமிழ் விக்கிப்பீடியாவில் இருந்து முழுமையாகவோ அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளோ இறுவட்டில் வெளிவந்தால் நல்லது. --Umapathy 06:12, 25 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

ஆம் இத்தகைய ஒர் முயற்சியில் தவிக்கி எடுக்கப்படவேண்டுமென நானும் விரும்புகின்றேன்,வழிமொழிகின்றேன்--கலாநிதி 17:03, 25 நவம்பர் 2006 (UTC)

பாராட்டுக்கள்

[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவில் லினக்ஸ் தொடர்பான கட்டுரைகளத் தொடர்ந்தும் ஆர்வத்துடன் வழங்கி வருவதற்குப் பாராட்டுக்கள். தொடர்ந்தும் பங்களிக்க வாழ்த்துக்கள் --Umapathy 14:32, 27 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

இணைய இணைப்பைப் பகிர்தல்கட்டுரையில் லினக்ஸில் எவ்வாறு செய்வது பற்றிய தகவல்கள் இல்லை. இது குறித்து பேச்சு:இணைய இணைப்பைப் பகிர்தல் செய்தியொன்றை இட்டுள்ளேன். நேரம் கிடைக்கும் போது தயவுசெய்து முடிந்தால் இக்கட்டுரையில் லினக்ஸ் தகவல்களையும் சேர்த்துவிடுங்கள். --Umapathy 16:59, 27 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

தபுண்டு

[தொகு]

mauran, சின்னச்சின்னதாக அப்பப்ப நீங்க செஞ்சு வர்ற விஷயங்கள ஒரு ங்கிணைச்சு தபுண்டு அப்டின்னு பொதி வெளியிட்டிருக்கிறது மகிழ்ச்சியா இருக்கு. தமிழ் உபுண்டு குழுமத்தில் பங்கு பற்றாமல் இருப்பதால், இதை விக்கிப்பீடியாவில் பார்த்து தான் தெரிந்து கொள்ள முடிந்தது. அப்புறம் கட்டுரைகளில் mauran அவர்கள், ராமதாஸ் அவர்கள் என்பதில் வருகிற அவர்களை நீக்கி எழுதலாமா? தமிழ் மரபுக்கு அவர்கள் போட்டு எழுதுவது சரி தான் என்றாலும் பல விக்கிப்பீடியா கட்டுரைகளில் அவர்கள் போடாமல் தான் எழுதி வருகிறோம். --Ravidreams 13:48, 4 டிசம்பர் 2006 (UTC)

அவர்களை நீக்கிவிடலாம் ;-) --மு.மயூரன் 14:54, 4 டிசம்பர் 2006 (UTC)
மாற்றும்போதுதான் அவதானித்தேன் சில இடங்களில் (எ+கா) ராமதாச் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது) என்று அவ்ரும்போது அவர்களை நீக்குவது தேவைதானா? --மு.மயூரன் 14:57, 4 டிசம்பர் 2006 (UTC)

ராமதாசால் என்று எழுத முடியுமே? மகிந்த ராஜபக்சவால், மகாத்மா காந்தியால், இளையராஜாவால் என்று தானே நெருடல் இல்லாமல் பல இடங்களில் எழுதி வருகிறோம். இதில் இன்னொரு சாதகம் என்றால் பாகுபாடின்றி அனைவரையும் இப்படி அழைக்க முடியும். ஆட்டோ சங்கர் அவர்களால், வீரப்பன் அவர்களால் என்று எழுதும் போது நெருடும் தானே?. அதே சமயம் வீரப்பன், ஆட்டோ சங்கர் ஆகியோரை அவன், இவன் என்று எழுதுவதும் தவறு. இதை பல பத்திரிக்கைகள் செய்கின்றன. நாம் எல்லாரையும் அவர், இவர் என்றே எழுதலாம். சமத்துவம் ! ;) ஆமா உங்க கணினில ஸ். ஸ்ரீ போன்ற எழுத்துக்கள் வராதா? இல்லை வேண்டுமென்றே ராமதாச் என்று எழுதுகிறீர்களா? ராமதாசு என்று எழுதுவது இதை விட சிறந்த முறை என்று நினைக்கிறேன்.--Ravidreams 15:39, 4 டிசம்பர் 2006 (UTC)

நீங்கள் சொல்வது சரிதான் அவர்கள் என்பதை நீக்கலாம். எழுத்து தொடர்பாக, சிறீ வேண்டுமென்றே எழுதுவது. ஸ் தட்டச்சு பிழை. shift விசை சரியாக அழுத்துப்படாததால் வருவது. :-) --மு.மயூரன் 15:43, 4 டிசம்பர் 2006 (UTC)

தமிழ்நெட்99 விசைப்பலகையில் இந்த தட்டச்சுப் பிழை வராது. அதன் தளக்கோளத்தை பார்த்தால் உங்களுப் புரியும். ஆனால், நீங்கள் ரொம்ப நாள் வேறு தளக்கோளத்தில் பழகி விட்டதால் மாறுவது கடினம். நீங்கள் ப யன்படுத்தும் தளக்கோளம் உங்களுக்கு எளிமையாக இருப்பதாக நீங்கள் சொன்னதாகவும் நினைவு  ;) !--Ravidreams 15:52, 4 டிசம்பர் 2006 (UTC)

//பயனர் எளிமையும், விநியோகிக்க வசதியானதாகவும் காணப்படும் தமிழ் பாவனைக்கான பல்வேறு ஆதரவுகளை கொண்ட உபுண்டு இயங்குதளத்தை பரந்தளவான தமிழ் பயனர் மட்டத்தில் கொண்டு செல்லவேண்டுமானால், மேலதிக தமிழ் வசதிகளை அவ்வியங்குதளத்தில் நிறுவிக்கொள்ள பின்பற்றப்படவேண்டிய பல்வேறு சிக்கலான படிமுறைகள் எளிமைப்படுத்தப்படவேண்டும் என்ற விளங்கிக்கொள்ளலின் அடிப்படையிலேயே இவ்வாறானதொரு பொதியின் தேவையும் உருவாக்கமும் உபுண்டு தமிழ் பயனர் ஒருவர் மூலம் நிகழவேண்டியிருந்தது. //

எவ்வளோ பெரியவரி ;)..மாற்றி அமைக்கப் பார்க்கிறேன் ..நானும் இந்த மாதிரி வரிகளை எழுதுவது வழக்கம் என்றாலும் விக்கிப்பீடியாவில் எளிமையை கையாள்வது நல்லது!--Ravidreams 15:56, 4 டிசம்பர் 2006 (UTC)

நல்லது. எளிமைப்படுத்துங்கள். ஆனால் //இவ்வாறானதொரு பொதியின் தேவையும் உருவாக்கமும் உபுண்டு தமிழ் பயனர் ஒருவர் மூலம் நிகழவேண்டியிருந்தது.// என்ற வரியின் கருத்தினை மற்றாமல் அப்படியே பேணினால் நல்லது. --மு.மயூரன் 16:12, 4 டிசம்பர் 2006 (UTC)

பேணியாச்சு :)--Ravidreams 16:51, 4 டிசம்பர் 2006 (UTC)

ஆண்டு அறிக்கை

[தொகு]

மயூரன், உங்கள் (விரிவான) விமர்சங்களையும், எதிபார்ப்புக்களையும், திட்டங்களையும் Wikipedia பேச்சு:2006 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2006 Tamil Wikipedia Annual Review நோக்கி தந்தால் நன்று. நன்றி. --Natkeeran 02:40, 10 டிசம்பர் 2006 (UTC)

பங்களிப்பினை தற்காலிகமாக நிறுத்தியுள்ளேன்

[தொகு]

தற்போது எனது இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டிருப்பதால் பங்களிப்பினை தற்காலிகமாக நிறுத்தியுள்ளேன் விரைவில் மீள்வேன் --மு.மயூரன் 14:57, 25 டிசம்பர் 2006 (UTC)

மு.மயூரன் இணையத்திற்கு மீண்டுவிட்டார்!!!

[தொகு]

இன்றைக்கு எனக்கு மீண்டும் இணைய இணைப்பு கிடைத்துவிட்டது. இரண்டொருநட்களில் பங்களிப்பை முன்னர்போல தொடங்கிவிடுகிறேன். --மு.மயூரன் 17:53, 12 ஜனவரி 2007 (UTC)

வருக வருக தங்களின் மீள்வரவு எங்களிற்குப் புத்துணர்ச்சியூட்டுகின்றது. --Umapathy 17:34, 13 ஜனவரி 2007 (UTC)

ஐயையோ ஐயைய்யோ!!

[தொகு]

ஆறாயிரமாவது கட்டுரையை போடலாம் எண்டு அவசரப்பட்டு ரெண்டு கட்டுரை போட்டால் அதுக்கிடையில் காய்ச்சலடக்கி வந்துவிட்டதைய்யா. சரி ஆறாயிரம் தாண்டி முதலாவது கட்டுரை நான் போட்டேனே!! :-)))))) --மு.மயூரன் 17:43, 13 ஜனவரி 2007 (UTC)

:-) --Natkeeran 17:47, 13 ஜனவரி 2007 (UTC)

சித்தி அமரசிங்கம்

[தொகு]

மயூரன், அமரசிங்கம் பதிப்பித்த நூற்கள் பற்றிய தகவல்களை அவரது பதிப்பகம் பற்றிய தனிக் கட்டுரையாகத் தரலாமே... --கோபி 20:15, 28 ஜனவரி 2007 (UTC)

இயங்கு தளம்

[தொகு]

மயூரன், நீங்களும் நானும் இயங்கு தளம், இயக்கி ஆகியவை பற்றியும் kernel என்பது பற்றியும் பேச்சு:இயக்கு தளம் பக்கத்தில் உரையாடினோம். உங்களிடம் இருந்து மறுமொழி வரும் என்று எதிர்பார்த்திருந்தேன். வேறு பணியால் இழுக்கப்பட்டுவிட்டீர்கள் போலிருக்கிறது. உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்.--செல்வா 13:13, 23 பெப்ரவரி 2007 (UTC)

Speech Synthesis System

[தொகு]

மயூரன், நீங்கள் என் பேச்சுப் பக்கத்தில் "Speech Synthesis System என்பதை எப்படி தமிழாக்குவது?" எனக் கேட்டிருந்தீர்கள். தக்க சூழலில்தான் சரியான மொழிபெயர்ப்பு அமையும். இதனை speech processing பற்றி அறிந்த உங்களுக்கு நன்றாகத் தெரியும். எனினும், Speech synthesis system என்பது செயற்கையாய் பேச்சுமொழியை பேசுவது போலவே ஒலியுருவாய் உருவாக்கும் ஓர் அமைப்புதான். எனவே இதனை செயற்கைப் பேச்சொலி அமைப்புமுறை எனலாம்.--செல்வா 22:13, 4 மார்ச் 2007 (UTC)

மாறுகால் மாறுகை

[தொகு]

இந்தக் கட்டுரை எழுதுவதற்கான தூண்டுதல் எப்படி வந்தது என அறியலாமா :) இந்த seriesல் இன்னும் சில கட்டுரைகள் வருமா :)--ரவி 07:11, 21 மார்ச் 2007 (UTC)

லினக்ஸ் கட்டுரைகள் எழுதுங்க

[தொகு]

தயவுசெய்து நேரம் கிடைத்தால் லினக்ஸ் கட்டுரைகள் கொஞ்சம் எழுதுங்கள். ரொம்ப நாள லினக்ஸ் கட்டுரைகளைக் காணமால் போரடிக்கிறது. --Umapathy 12:34, 21 மார்ச் 2007 (UTC)

ரவி, உமாபதி,

[தொகு]

என்னுடைய மாறுகால் மாறுகை கட்டுரை வலிய பாதிப்புக்களை உங்களிடத்தில் உருவாக்கிவிட்டதுபோல ;-) பேசாமல் லினக்ஸ் கட்டுரைகளை எழுதிக்கொண்டிருங்கள் எதற்கு வீணாண வேலை எல்லாம் என்கிறார் உமாபதி ;-P

ரவி நீங்கள் மாறுகால் மாறுகை கட்டுரையை இன்னும் கொஞ்சம் விரிவு படுத்தலாம் இல்லையா? இன்று காலை சோபாஷக்தியின் வலைப்பதிவு படித்துக்கொண்டிருந்தபோது அதில் சில நபர்கள் வன்னிக்கு போனால் அங்குள்ள தமிழர்கள் மாறுகால் மாறுகை வாங்கிவிடுவார்கள் என்று ஒரு வசனம் வந்தது. அதைப்பார்த்ததும் உடனடியாக ஒரு விக்கி கட்டுரை போட தோணிச்சு . அதுதான். அரிவாள் கலாசாரம் தொடர்பா கட்டுரை எழுத ஆசை. ரவியால் முடியும். --மு.மயூரன் 13:58, 21 மார்ச் 2007 (UTC)

மாறுகால் மாறுகைக்கும் அரிவாளுக்கும் எனக்கும் என்ன தொடர்பு :) எங்க ஊர்ப் பக்கம் இந்தக் கலாச்சாரம் இருப்பது வேறு கதை ;) நான் ஏதோ கோவணம் என்பது போன்ற எளிய தலைப்புகளில் தான் கட்டுரை எழுதி வருகிறேன் :) --ரவி 14:54, 21 மார்ச் 2007 (UTC)

என்ன ரவி, கோவணத்தை எளிய தலைப்பு என்று சொல்லி விட்டீர்கள். த.வி.யில் இன்னும் அரைஞாண் கயிறு இல்லை. அது இல்லாமல் எப்படிக் கோவணத்தைக் கட்டுவது? --கோபி 15:50, 21 மார்ச் 2007 (UTC)

குநோம்

நல்லது மயூரன். பங்களிக்கத் துவங்கி சில நாட்களே ஆகிறது என்கிறபடியால் நன்கு பரிசயம் ஆக இன்னும் சிறிது காலம் பிடிக்கும். :-)

Amachu 02:49, 22 மார்ச் 2007 (UTC)

பாட்டி வடை சுட்ட கதை

[தொகு]

மயூரன், எங்கிருந்து இப்படி தலைப்பு பிடிக்கிறீர்கள் ;) சட்டி குட்டி போட்ட கதை கேட்டிருக்கிறார் நற்கீரன் :) முயல் ஆமை கதை, காகம் கல் போட்ட கதை ஆகியவற்றை என் சார்பாக கேட்கிறேன்--ரவி 14:44, 7 ஏப்ரல் 2007 (UTC)

Tamil Language article is to be removed of its FA, even after the extensive review process, please vote against it. Also, improve the article if you can. http://en.wikipedia.org/wiki/Wikipedia:Featured_article_review/Tamil_language

--Natkeeran 19:27, 8 ஏப்ரல் 2007 (UTC)

விக்கிப்பீடியா டீ வீ டீ

[தொகு]

டீ வீ டீ இல் விக்கிப்பீடியா

நன்றி மயூரன், இது வேறு சில தளங்களூடாக பிட்டொரண்ட் முறையில் இலவசமாகவும் கிடைக்கின்றது. பார்க்க http://en.wikipedia.org/wiki/Wikipedia:Version_1.0_Editorial_Team/Torrent_Project/Version_0.5 பதிவிறக்கிப் பாவித்து இருந்தால் உங்கள் அனுபவங்களைக் குறிப்பிடுங்கள். நானும் ஏதாவது வழியில் பதிவிறக்கலாமா என்று பார்க்கின்றேன். (திருகோணமலையில் இருப்பதால் பெரிய கோப்புக்களைப் பதிவிறக்குவது சிரமமானது). --Umapathy 09:34, 26 ஏப்ரல் 2007 (UTC)

மயூரன், இலங்கையில் CDMA தொலைபேசிகள் பெருகிவருகின்றன. நீங்கள் [இலங்கையின் CDMA பயனரும் லினக்சும் http://tamilgnu.blogspot.com/2007/03/cdma.html] வலைப்பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ளீர்கள். CDMA தொலைபேசி சம்பந்தமான தகவல்கள் ஆங்கே இங்கே என்று சிதறிக் கிடக்கின்றது. நேரம் கிடைத்தால் இக்கட்டுரையில் ஹூவாய் (HUAEWI) CDMA தொலேபேசிகளுக்கான லினக்ஸில் டயல் அப் இணைப்பை ஏற்படுத்தும் முறைகளைச் சேர்த்துவிட்டால் பலருக்கும் பயன்படும். நன்றி. --Umapathy 17:44, 23 ஜூன் 2007 (UTC)

இணைப்புகள் ஊடாக சென்று பார்க்கவும். நன்றி. --Natkeeran 19:52, 21 ஜூலை 2007 (UTC)

பிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட்

[தொகு]

Do you have shares? A bit over. What happend to மு.மயூரன் ? --Natkeeran 23:18, 10 ஆகஸ்ட் 2007 (UTC)

ஏற்கனவே ஒருவரால் உருவாக்கப்பட்ட மேற்படிக் கட்டுரையின் விளம்பர நோக்கம் கொண்ட தொடர்களைக் களைந்து விக்கியாக்கம் செய்ததுடன் கலைச்சொற்களில் ஏற்பட்டிருந்த தவறுகளைத் திருத்தி சிற்சில மேலதிக திருத்தவேலைகளையும் செய்திருந்தேன். --மு.மயூரன் 18:09, 10 ஆகஸ்ட் 2007 (UTC)
கட்டுரை விளம்பரத்தனமாக இருந்தது. சரியாக கவனிக்காமல் கருத்து தெரிவித்து விட்டேன். தவறு என்னதுதான். --Natkeeran 23:18, 10 ஆகஸ்ட் 2007 (UTC)

சமகால நிகழ்வுகள்

[தொகு]

மயூரன், இப்படி நிகழ்கால நிகழ்வுகளை இற்றைப்படுத்தினால் நன்று. --Natkeeran 14:37, 7 அக்டோபர் 2007 (UTC)[பதிலளி]

நீங்கள் இட்ட தகவல்கள் இங்கு ஒரு வானொலி நிகழ்சியில் (செய்தி!) அனேகமாக அப்படியே எழுத்தாளப்பட்டது. --Natkeeran 01:39, 10 அக்டோபர் 2007 (UTC)[பதிலளி]

நீங்கள் இட்ட செய்திகளை இலங்கையில் வெளிவரும் ஆங்கிலப் பத்திரிகை சண்டே ரைம்ஸ் உம் வெளியிட்டுள்ளது. எழுதப்பட்ட விதத்தை உற்று நோக்கும் போது இங்கிருந்துதான் எடுத்திருப்பார்கள் போலத் தோன்றுகின்றது. --Umapathy (உமாபதி) 15:40, 4 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]

எதைச் சொல்கிறீர்கள் உமாபதி? தமிழ்ச்செல்வன் தொடர்பானதா? அப்படியாயின் இத்தகவல்கள் புதினம் தளத்திலிருந்தும் வேறொரு ஆவணத்திலிருந்தும் பெறப்பட்டு சரிபார்க்கப்பட்டவை. --மு.மயூரன் 19:54, 4 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]

பட உரிமையும் மூலமும்

[தொகு]

நீங்கள் இணைத்த படங்களுக்கான மூலமும் உரிமையும் இணைக்கப்படவேண்டும். நன்றி. --Natkeeran 23:15, 2 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]

ஐயா நான் இணைத்த படங்களுக்கான உரிமம் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அந்த உரிமை கோரப்படாத படங்களை நீக்குவதானாலும் சம்மதமே. --மு.மயூரன் 17:04, 3 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]

2007 ஆண்டு அறிக்கையும் கருத்து வேண்டுதலும்

[தொகு]

கடந்த இரு ஆண்டுகளாக ஆண்டு இறுதியில் அந்த ஆண்டுச் செயற்பாடுகள் நோக்கிய ஒரு அலசலைச் செய்து தமிழ் விக்கிப்பீடியாவை மேலும் மேம்படுத்த பருந்துரைகள் செய்வது வழக்கம். இவ்வருட ஆண்டு அறிக்கை கீழே:

த.வி பற்றிய உங்களின் கருத்துக்களையும் பரிந்துரைகளையும் அதன் பேச்சுப் பக்கத்தில் தந்தால் எமது பணிகளை ஒருங்கிணைக்கவும், மேம்படுத்தவும், மேலும் சிறப்பாக வளர்க்கவும் அவை உதவும். நன்றி.

  • Wikipedia பேச்சு:2007 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2007 Tamil Wikipedia Annual Review

--Natkeeran 00:47, 20 டிசம்பர் 2007 (UTC)

தொகுப்புகள்

:படிமம்:M5.jpg இன் காப்புரிமை என்ன?

[தொகு]
Image Copyright problem
Image Copyright problem

படிமம்:M5.jpg படிமத்தை பதிவேற்றியமைக்கு நன்றி. எனினும், இப்படிமத்துக்கான காப்புரிமை/அளிப்புரிமைத் தகவல்கள் வழங்கப்படவில்லை. விக்கிப்பீடியா காப்புரிமைத் தொடர்பில் மிகவும் கவனத்தில் உள்ளது. காப்புரிமைத் தகவலும் படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்றத் தகவலும் இணைக்கப்படாவிட்டால் படிமம் வெகு சீக்கிரத்தில் நீக்கப்படும். உங்களுக்கு இந்தத் தகவல்கள் தெரிந்திருப்பின் காப்புரிமை வார்ப்புரு ஒன்றை படிமப் பக்கத்தில் இணைத்து மூலத்தையும் குறிப்பிடவும்.

இது தொடர்பான கேள்விகள் இருப்பின் பதிப்புரிமை கேவிகள் பக்கத்தில் கேட்கவும். TrengarasuBOT 16:29, 18 பெப்ரவரி 2008 (UTC)


:படிமம்:M4.jpg இன் காப்புரிமை என்ன?

[தொகு]
Image Copyright problem
Image Copyright problem

படிமம்:M4.jpg படிமத்தை பதிவேற்றியமைக்கு நன்றி. எனினும், இப்படிமத்துக்கான காப்புரிமை/அளிப்புரிமைத் தகவல்கள் வழங்கப்படவில்லை. விக்கிப்பீடியா காப்புரிமைத் தொடர்பில் மிகவும் கவனத்தில் உள்ளது. காப்புரிமைத் தகவலும் படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்றத் தகவலும் இணைக்கப்படாவிட்டால் படிமம் வெகு சீக்கிரத்தில் நீக்கப்படும். உங்களுக்கு இந்தத் தகவல்கள் தெரிந்திருப்பின் காப்புரிமை வார்ப்புரு ஒன்றை படிமப் பக்கத்தில் இணைத்து மூலத்தையும் குறிப்பிடவும்.

இது தொடர்பான கேள்விகள் இருப்பின் பதிப்புரிமை கேவிகள் பக்கத்தில் கேட்கவும். TrengarasuBOT 16:30, 18 பெப்ரவரி 2008 (UTC)


:படிமம்:M3.jpg இன் காப்புரிமை என்ன?

[தொகு]
Image Copyright problem
Image Copyright problem

படிமம்:M3.jpg படிமத்தை பதிவேற்றியமைக்கு நன்றி. எனினும், இப்படிமத்துக்கான காப்புரிமை/அளிப்புரிமைத் தகவல்கள் வழங்கப்படவில்லை. விக்கிப்பீடியா காப்புரிமைத் தொடர்பில் மிகவும் கவனத்தில் உள்ளது. காப்புரிமைத் தகவலும் படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்றத் தகவலும் இணைக்கப்படாவிட்டால் படிமம் வெகு சீக்கிரத்தில் நீக்கப்படும். உங்களுக்கு இந்தத் தகவல்கள் தெரிந்திருப்பின் காப்புரிமை வார்ப்புரு ஒன்றை படிமப் பக்கத்தில் இணைத்து மூலத்தையும் குறிப்பிடவும்.

இது தொடர்பான கேள்விகள் இருப்பின் பதிப்புரிமை கேவிகள் பக்கத்தில் கேட்கவும். TrengarasuBOT 16:30, 18 பெப்ரவரி 2008 (UTC)


:படிமம்:M2.jpg இன் காப்புரிமை என்ன?

[தொகு]
Image Copyright problem
Image Copyright problem

படிமம்:M2.jpg படிமத்தை பதிவேற்றியமைக்கு நன்றி. எனினும், இப்படிமத்துக்கான காப்புரிமை/அளிப்புரிமைத் தகவல்கள் வழங்கப்படவில்லை. விக்கிப்பீடியா காப்புரிமைத் தொடர்பில் மிகவும் கவனத்தில் உள்ளது. காப்புரிமைத் தகவலும் படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்றத் தகவலும் இணைக்கப்படாவிட்டால் படிமம் வெகு சீக்கிரத்தில் நீக்கப்படும். உங்களுக்கு இந்தத் தகவல்கள் தெரிந்திருப்பின் காப்புரிமை வார்ப்புரு ஒன்றை படிமப் பக்கத்தில் இணைத்து மூலத்தையும் குறிப்பிடவும்.

இது தொடர்பான கேள்விகள் இருப்பின் பதிப்புரிமை கேவிகள் பக்கத்தில் கேட்கவும். TrengarasuBOT 16:31, 18 பெப்ரவரி 2008 (UTC)


:படிமம்:M1.jpg இன் காப்புரிமை என்ன?

[தொகு]
Image Copyright problem
Image Copyright problem

படிமம்:M1.jpg படிமத்தை பதிவேற்றியமைக்கு நன்றி. எனினும், இப்படிமத்துக்கான காப்புரிமை/அளிப்புரிமைத் தகவல்கள் வழங்கப்படவில்லை. விக்கிப்பீடியா காப்புரிமைத் தொடர்பில் மிகவும் கவனத்தில் உள்ளது. காப்புரிமைத் தகவலும் படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்றத் தகவலும் இணைக்கப்படாவிட்டால் படிமம் வெகு சீக்கிரத்தில் நீக்கப்படும். உங்களுக்கு இந்தத் தகவல்கள் தெரிந்திருப்பின் காப்புரிமை வார்ப்புரு ஒன்றை படிமப் பக்கத்தில் இணைத்து மூலத்தையும் குறிப்பிடவும்.

இது தொடர்பான கேள்விகள் இருப்பின் பதிப்புரிமை கேவிகள் பக்கத்தில் கேட்கவும். TrengarasuBOT 16:31, 18 பெப்ரவரி 2008 (UTC)


:படிமம்:Kalyan.jpg இன் காப்புரிமை என்ன?

[தொகு]
Image Copyright problem
Image Copyright problem

படிமம்:Kalyan.jpg படிமத்தை பதிவேற்றியமைக்கு நன்றி. எனினும், இப்படிமத்துக்கான காப்புரிமை/அளிப்புரிமைத் தகவல்கள் வழங்கப்படவில்லை. விக்கிப்பீடியா காப்புரிமைத் தொடர்பில் மிகவும் கவனத்தில் உள்ளது. காப்புரிமைத் தகவலும் படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்றத் தகவலும் இணைக்கப்படாவிட்டால் படிமம் வெகு சீக்கிரத்தில் நீக்கப்படும். உங்களுக்கு இந்தத் தகவல்கள் தெரிந்திருப்பின் காப்புரிமை வார்ப்புரு ஒன்றை படிமப் பக்கத்தில் இணைத்து மூலத்தையும் குறிப்பிடவும்.

இது தொடர்பான கேள்விகள் இருப்பின் பதிப்புரிமை கேள்விகள் பக்கத்தில் கேட்கவும். TrengarasuBOT 07:06, 3 மார்ச் 2008 (UTC)


:படிமம்:Tamil89.gif இன் காப்புரிமை என்ன?

[தொகு]
Image Copyright problem
Image Copyright problem

படிமம்:Tamil89.gif படிமத்தை பதிவேற்றியமைக்கு நன்றி. எனினும், இப்படிமத்துக்கான காப்புரிமை/அளிப்புரிமைத் தகவல்கள் வழங்கப்படவில்லை. விக்கிப்பீடியா காப்புரிமைத் தொடர்பில் மிகவும் கவனத்தில் உள்ளது. காப்புரிமைத் தகவலும் படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்றத் தகவலும் இணைக்கப்படாவிட்டால் படிமம் வெகு சீக்கிரத்தில் நீக்கப்படும். உங்களுக்கு இந்தத் தகவல்கள் தெரிந்திருப்பின் காப்புரிமை வார்ப்புரு ஒன்றை படிமப் பக்கத்தில் இணைத்து மூலத்தையும் குறிப்பிடவும்.

இது தொடர்பான கேள்விகள் இருப்பின் பதிப்புரிமை கேள்விகள் பக்கத்தில் கேட்கவும். TrengarasuBOT 07:06, 3 மார்ச் 2008 (UTC)


:படிமம்:Mylai phonetic layout.png இன் காப்புரிமை என்ன?

[தொகு]
Image Copyright problem
Image Copyright problem

படிமம்:Mylai phonetic layout.png படிமத்தை பதிவேற்றியமைக்கு நன்றி. எனினும், இப்படிமத்துக்கான காப்புரிமை/அளிப்புரிமைத் தகவல்கள் வழங்கப்படவில்லை. விக்கிப்பீடியா காப்புரிமைத் தொடர்பில் மிகவும் கவனத்தில் உள்ளது. காப்புரிமைத் தகவலும் படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்றத் தகவலும் இணைக்கப்படாவிட்டால் படிமம் வெகு சீக்கிரத்தில் நீக்கப்படும். உங்களுக்கு இந்தத் தகவல்கள் தெரிந்திருப்பின் காப்புரிமை வார்ப்புரு ஒன்றை படிமப் பக்கத்தில் இணைத்து மூலத்தையும் குறிப்பிடவும்.

இது தொடர்பான கேள்விகள் இருப்பின் பதிப்புரிமை கேள்விகள் பக்கத்தில் கேட்கவும். TrengarasuBOT 07:06, 3 மார்ச் 2008 (UTC)

சேர்ந்தெடுப்பு பற்றிய கருத்து வேண்டல்

[தொகு]

விக்கிப்பீடியா:ஆலமரத்தடி#சேர்ந்தெடுப்பு வேண்டுகோள் என்னும் பகுதியில் உங்கள் கருத்துகளை அருள்கூர்ந்து தர வேண்டுகிறேன் --செல்வா 23:36, 18 பெப்ரவரி 2010 (UTC)

தேவைப்படும் கட்டுரைகள்

[தொகு]

வணக்கம். வலைவாசல்:கட்டுரைப்போட்டி/தலைப்புகள் பட்டியல் பக்கத்தில் தேவைப்படும் கட்டுரைத் தலைப்புகளைக் குவிக்க உதவ முடியுமா? நடக்க இருக்கும் கட்டுரைப் போட்டியை முன்னிட்டு இயன்ற அளவு வழமையை விடக் கூடுதலாக உங்களால் பங்களிக்க முடிந்தால் நன்றாக இருக்கும். நன்றி--ரவி 11:49, 8 மார்ச் 2010 (UTC)

முதற்பக்க அறிமுகம்

[தொகு]

வணக்கம் மயூரன். உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். உங்களைப் பற்றிய சிறு குறிப்பை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/மு. மயூரன் பக்கத்தில் சேர்க்க முடியுமா? விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் உள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாக கொள்ளலாம். நன்றி--ரவி 10:52, 15 மே 2010 (UTC)[பதிலளி]

விக்கி மாரத்தான்

[தொகு]

விக்கி மாரத்தானில் கலந்து கொள்ள வாருங்கள்--இரவி 09:24, 27 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

பங்களிப்பு வேண்டுகோள்

[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவில் தங்கள் பங்களிப்புகள் அனைத்தும் சிறப்பானவை. இந்த சிறப்பான பங்களிப்பில் தங்கள் பணிகளின் காரணமாக, தற்போது சற்று இடைவெளி ஏற்பட்டிருக்கிறது என கருதுகிறேன். தங்களுக்குக் கிடைக்கும் விடுமுறை நாளில் / ஓய்வு நேரங்களில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பங்களித்து, தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் மீண்டும் பங்கெடுக்க வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 08:43, 21 சூலை 2011 (UTC)[பதிலளி]

பாமினி எழுத்துரு

[தொகு]

வணக்கம் மயூரன், புதிய தட்டச்சுக் கருவியில் பாமினி விசைப்பலகையை இணைப்பதற்கான உரையாடல் இங்கு இடம்பெறுகிறது. உங்கள் மேலான பங்களிப்பும் கோரப்படுகிறது. நன்றி.--Kanags \உரையாடுக 10:20, 14 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]

உங்களுக்குத் தெரியுமா அறிவிப்பு

[தொகு]




எங்கே சென்றீர் மயூரரே?

[தொகு]

எங்கே சென்றிருந்தீர் மயூரரே? அவ்வப்போதாவது தொடர்ந்து விக்கிப்பீடியாவில் பங்களிக்க வேண்டுகிறேன். மீண்டும்... வருக :)--இரவி 08:18, 30 சனவரி 2012 (UTC)[பதிலளி]

முதற்பக்கக் கட்டுரை அறிவிப்புத் திட்டம்

[தொகு]



பட உரிம ம்

[தொகு]

விக்கிப்பீடியர் சந்திப்பு ஏற்பாடுகள்

[தொகு]

கொழும்பில் வரும் ஏப்ரல் 27, 28 இல் நடைபெறும் தமிழ் ஆவண மாநாட்டில் பங்குபெற பல விக்கிப்பீடியர் வருவதாக உள்ளது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தும்வகையில் விக்கிப்பீடியர் சந்திப்பொன்றை நடாத்துவது குறித்து சிந்தித்தோம். ஆலமரத்தடியில் இது குறித்த உரையாடல் ஒன்றும் இடம்பெற்றது. இலங்கைப் பயனர்கள் இதனைப் பயன்படுத்தி சந்திப்பில் கலந்து கொள்ளுவதும் விக்கி குறித்த மேம்பாட்டு முன்னெடுப்புகள் மற்றும் தொடர்புபட்ட விடயங்கள் பற்றி உரையாடுவதும் இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்காக இலங்கைப் பயனராகிய தங்களின் கருத்தை தெரிந்துகொள்ள விரும்புகின்றேன். நன்றிகள்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 06:44, 13 மார்ச் 2013 (UTC)

ஒரு வேண்டுகோள்

[தொகு]

வணக்கம் மு.மயூரன்! தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள பல கட்டுரைகளில், உசாத்துணை, மேற்கோள்கள், குறிப்புகள், சான்றுகள் போன்றவை சேர்க்கப்படவில்லை. இவ்வாறு உள்ள கட்டுரைகளை தரக்கட்டுப்பாட்டின் காரணமாக தமிழ் விக்கிப்பீடியாவில் இருந்து நீக்கப்படலாம். உங்களால் முடிந்தவரை இவற்றை சேர்க்க முயற்சிக்கவும். இதைப் பற்றிய தகவல்களைப் பெற சான்று சேர்க்கும் திட்டத்தை பார்க்கவும். தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிக்க வாழ்த்துக்கள்!

--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 03:54, 17 மே 2014 (UTC)[பதிலளி]

தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்பு

[தொகு]

15 ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் போட்டி..
||தொடர்பங்களிப்பாளர் போட்டி||

போட்டிக்காலம்
6 மாதங்கள்
2017 மே-ஒக்டோபர்!

போட்டிக்காக நீங்கள்
கட்டுரைகளை விரிவாக்குதல் வேண்டும். இதில் பங்குபற்றுவது மிக இலகு!

இங்கு
பதிவு செய்யுங்கள்!
விதிகளைப் பின்பற்றி
வெற்றி பெறுங்கள்!

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக NeechalBOT (பேச்சு) 04:38, 6 மார்ச் 2017 (UTC)

முதற்பக்க அறிமுகம்

[தொகு]

வணக்கம் மயூரன், நெடுநாள் பயனர் மற்றும் கட்டற்ற வளங்களின் ஆர்வலர் என்ற அடிப்படையில் உங்களைத் தமிழ் விக்கிப்பீடியாவின் முதல் பக்கத்தில் அறிமுகம் செய்ய விரும்புகிறோம். பத்தாண்டுகளுக்கு முன்னர் விடுத்த அழைப்பை மீண்டும் நினைவூட்டுகிறோம். விரும்பினால் விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/மு. மயூரன் பக்கத்தில் உங்களைப் பற்றிய குறிப்பினை வழங்கக் கோருகிறோம். -நீச்சல்காரன் (பேச்சு) 20:27, 1 மார்ச் 2022 (UTC)

{{bottomLinkPreText}} {{bottomLinkText}}
பயனர் பேச்சு:மு.மயூரன்
Listen to this article

This browser is not supported by Wikiwand :(
Wikiwand requires a browser with modern capabilities in order to provide you with the best reading experience.
Please download and use one of the following browsers:

This article was just edited, click to reload
This article has been deleted on Wikipedia (Why?)

Back to homepage

Please click Add in the dialog above
Please click Allow in the top-left corner,
then click Install Now in the dialog
Please click Open in the download dialog,
then click Install
Please click the "Downloads" icon in the Safari toolbar, open the first download in the list,
then click Install
{{::$root.activation.text}}

Install Wikiwand

Install on Chrome Install on Firefox
Don't forget to rate us

Tell your friends about Wikiwand!

Gmail Facebook Twitter Link

Enjoying Wikiwand?

Tell your friends and spread the love:
Share on Gmail Share on Facebook Share on Twitter Share on Buffer

Our magic isn't perfect

You can help our automatic cover photo selection by reporting an unsuitable photo.

This photo is visually disturbing This photo is not a good choice

Thank you for helping!


Your input will affect cover photo selection, along with input from other users.

X

Get ready for Wikiwand 2.0 🎉! the new version arrives on September 1st! Don't want to wait?