For faster navigation, this Iframe is preloading the Wikiwand page for பண்டரிபுரம்.

பண்டரிபுரம்

பண்டரிபுரம்
Pandharpur
पंढरपूर
நகரம்
விட்டோபா கோயிலின் முதன்மைக் கதவு
விட்டோபா கோயிலின் முதன்மைக் கதவு
அடைபெயர்(கள்): பந்தர்பூர்
நாடு India
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்சோலாப்பூர்
அரசு
 • வகைநகரம்
பரப்பளவு
 • மொத்தம்25 km2 (10 sq mi)
 • பரப்பளவு தரவரிசை9
ஏற்றம்
458 m (1,503 ft)
மொழிகள்
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
இணையதளம்www.pandharpur4u.in

பந்தர்ப்பூர் அல்லது பண்டரிபுரம் இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள நகரம். இந்த நகரம் பீமா ஆற்றின் கரையில் உள்ளது. இங்கு உள்ள விட்டலர் கோயில் இந்துக்களின் முக்கிய வைணவத் திருத்தலங்களில் ஒன்று. இங்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர். இங்கு கோயில் கொண்டுள்ள விட்டலரின் பக்தர்களில் புகழ் பெற்றவர்கள் சோகாமேளர் மற்றும் புரந்தரதாசர் ஆவார். இங்கு இஸ்கான் அமைப்பின் கிளை உள்ளது. பீமா நதிக்கரையில் அமைந்துள்ள பண்டரிபுரம், மகாராஷ்டிராவின் ஆன்மிகத் தலைநகரம். இந்தப் புனிதத்தலத்தில் பீமா ஆறு சந்திர பிறையைப் போல வளைந்து செல்வதால், அந்த நதி இங்கு சந்திரபாகா ஆறு என அழைக்கப்படுகிறது. சந்திரபாகா என்றால், பிறைச் சந்திரன் என்று பொருள்.

புராண வரலாறு

[தொகு]

இந்தச் சந்திரபாகா நதிக்கரையில் ஸ்ரீகிருஷ்ணன், பாண்டுரங்கன் அல்லது விட்டலர் என்ற திருநாமத்துடன், தனது மனைவி ருக்மணியுடன் எழுந்தருளியிருக்கிறார். ஸ்ரீகிருஷ்ணன் பண்டரிநாதனாகக் கோயில் கொண்டதற்குப் பின்னணியில் புராண நிகழ்வு பொதிந்திருக்கிறது.

மகாராஷ்டிராவில் வசித்து வந்த ஜானுதேவர், சத்யவதி தம்பதிக்குப் பிறந்த மகன் புண்டரீகன். பெற்றோரிடம் மிகுந்த மரியாதையும் பக்தியுமாக இருந்தவன், திருமணத்துக்குப் பின் மனைவியின் பேச்சால் அவர்களை அவமதிக்கத் துவங்கினான். மனம் நொந்து, பெற்றோர் காசி யாத்திரைக்குப் புறப்பட்டனர்.

அவர்கள் மட்டும் எப்படிப் போகலாம்? நாமும் போக வேண்டும்’ என்று பிடிவாதம் பிடித்தாள், புண்டரீகனின் மனைவி. காசி போகும் குழுவில் அவர்களும் சேர்ந்தனர். பெற்றோர் நடந்து வர, புண்டரீகனும் அவன் மனைவியும் குதிரையில் சவாரி செய்தனர்.

அவர்கள் எல்லோரும் குக்குட முனிவரின் ஆசிரமத்தில் தங்கி ஓய்வெடுத்தனர். விடியும் நேரத்துக்குச் சற்று முன்பாக, நைந்து போன ஆடைகளில் அழுக்கும் அருவருப்பான தோற்றமுமாக அழகான யுவதிகள் பலர் ஆசிரமத்துக்குள் நுழைவதைப் புண்டரீகன் பார்த்தான். அவர்கள் ஆசிரமத்தின் தரையைச் சுத்தம் செய்தனர். முனிவரின் உடைகளைத் துவைத்தனர். கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்து வைத்தனர். முனிவரின் அறையிலிருந்து வெளிப்பட்டபோது, அவர்கள் மிகச் சுத்தமான உடைகளைத் தரித்து, தூய்மையின் அம்சங்களாக விளங்கினர். மறுநாளும் அப்பெண்கள் அழுக்காக ஆசிரமத்துக்குள் வந்ததைக் கவனித்தவன், வேலைகளை முடித்துவிட்டுத் தூய்மையாக வெளியே வந்தபோது, அவர்களை மறித்துப் பாதங்களில் விழுந்தான். 'நீங்கள் யார்?' என வினவினான். 'கங்கை, யமுனை, சரஸ்வதி போன்ற பல புண்ணிய நதிகள் நாங்கள். மற்றவர் தங்கள் பாவங்களையெல்லாம் எங்களிடம் இறக்கி வைத்துவிட்டுத் தூய்மை பெறுகிறார்கள். தினமும் அந்தப் பாவங்களைக் களைய நாங்கள் இந்த ஆசிரமத்துக்கு வருகிறோம். தன் பெற்றோரை தெய்வங்களாக எண்ணிப் பார்த்துக்கொள்ளும் குக்குட முனிவருக்கு சேவை செய்வதால், எங்கள் பாவங்கள் கழுவப் படுகின்றன. மீண்டும் தூய்மையடைந்து திரும்பு கிறோம்' என்று சொல்லி, அவர்கள் மறைந்தார்கள்.

அக்கணமே புண்டரீகன் மனம் திருந்தினான். பெற்றோருக்குச் சேவை செய்வதையே தலையாய கடமையாகக் கொண்டான்.

இந்தப் புண்டரீகனை அகிலத்துக்கு அறிமுகப் படுத்த எண்ணி, தக்கதொரு தருணத்தை எதிர் பார்த்துக் காத்திருந்தான் கிருஷ்ணர்.ஒரு முறை கிருஷ்ணர், ராதையுடன் குலவிக்கொண்டிருந்ததைப் பார்த்து, ருக்மிணி அவனிடம் கோபித்துக்கொண்டு, (தண்டிர்) வனத்துக்கு வந்து, தனித்திருந்தாள். அவளைச் சமாதானப்படுத்தி, மீண்டும் துவாரகைக்கு அழைத்துச் செல்லப் புறப்பட்டார் கிருஷ்ணர்.

வழியில் பெற்றோர்க்குச் சேவை செய்யும் மைந்தனை அவளுக்குக் காட்ட எண்ணி, புண்டரீகனின் குடில் வாயிலில் நின்று தண்ணீர் கேட்டார் கிருஷ்ணர். அங்கு மழை பெய்து, சேறும் சகதியுமாக இருந்தது. உள்ளேயிருந்து புண்டரீகன் ஒரு செங்கல்லைத் தூக்கிப் போட்டார். சற்று நேரம் அதன் மேலே நில்லுங்கள். என் பெற்றோருக்கான பணிவிடைகளை முடித்துவிட்டு உங்களைக் கவனிக்கிறேன்' என்றார். அதன்படியே, தனது பெற்றோர் சேவையை முடித்துக்கொண்டு புண்டரீகன் அவர்களை அண்டினார். வந்தவர்களை வரவேற்றார். அதற்கு மேலும் பொறுக்கமுடியாத ருக்மிணி, வந்திருப்பது கிருஷ்ணர் என்பதைப் போட்டு உடைத்தார்.

புண்டரீகன் பதறினார். மண்ணில் வீழ்ந்து மன்னிப்பு கேட்டார். கிருஷ்ணர் புன்னகைத் தார். 'உன் மாதா, பிதா சேவையில் மனம் மகிழ்ந்தேன். வேண்டும் வரம் கேள்' என்றான்.

'பாண்டுரங்கனே! நீங்கள் எழுந்தருளியுள்ள இத்தலம் புண்ணியத் தலமாக விளங்கவேண்டும். பக்தர்கள் அனைவரும் தரிசித்து அருள் பெறும்படியாக நீங்கள் இங்கே விட்டலனாக சாந்நித்தியம் கொள்ள வேண்டும்' என்று வேண்டினார், புண்டரீகர்.

கிருஷ்ணர் மனமுவந்து, 'இங்கே ஓடும் பீமா நதியில் நீராடி என்னை தரிசிப்பவர்கள், இடர் எல்லாம் நீங்கி, சர்வ மங்கலங்களையும் பெற்று வாழ்வார்கள்' என்று அருளினார். புண்டரீகபுரம் என்னும் அப்புண்ணிய இடத் தில், அற்புதமான ஆலயம் ஒன்று நதிக்கரையில் எழுப்பப்பட்டது. பின்னாளில் புண்டரீகபுரம் என்பது மருவி, பண்டரீபுரம் ஆகிவிட்டது.

ஆலயத்துக்கு நான்கு வாசல்கள். கோயிலின் கிழக்கு வாயிலுக்கு 'நாமதேவ் வாயில்’ என்று பெயர். கையில் தம்புராவுடன் இறைவனின் இசையில் மூழ்கியிருக்கும் நாமதேவரின் பித்தளைச் சிலை இங்கு உள்ளது.

இந்தப் பிரதான வாயிலின் வழியே உள்ளே நுழைந்தால் கருவறையை நோக்கி அழைத்துச் செல்லும் ஒரு மகாமண்டபம். இங்கே எழுந்தருளி யிருக்கும் தத்ராத்ரேயரையும், கணபதியையும் தரிசித்துவிட்டுச் சென்றால், அடுத்து விளங்குவது அழகியதொரு மண்டபம்.

வழவழப்பான 16 கருந்தூண்கள் தாங்கும் இந்த மண்டபத்தில் ஆங்காங்கே மாடங்கள். ஒரு மாடத்தில், பளிங்கில் செதுக்கப்பட்ட நரசிம்மர் எழுந்தருளியிருக்கிறார். இன்னொரு மாடத்தில் சிருங்கார ராதாவும், அவளது மையலில் மயங்கியிருக்கும் கிருஷ்ணனும் காட்சி தந்து, அந்த மண்டபத்துக்கு அழகு சேர்க்கிறார்கள். மற்றும் ஒரு மாடத்தில், செந்தூரத்தில் மூழ்கிய கோலத்துடன் கணபதி தரிசனம் தருகிறார்.

இந்த மண்டபத்தில், ஒரு தூணுக்கு முழுக்க முழுக்க வெள்ளிப் பூண் போடப்பட்டிருக்கிறது.

இந்தத் தூணுக்குக் கருட கம்பம் என்று பெயர். புரந்தரதாசர் கம்பம் என்ற காரணப்பெயரும் இதற்கு உண்டு.

பாண்டுரங்கனின் பரம பக்தரான புரந்தரதாசர் ஒருமுறை அவனை தரிசிப்பதற்காக நீண்ட பயணத்துக்குப் பின், பண்டரிபுரம் வந்து சேர்ந்தார். சத்திரம் ஒன்றில் தங்கினார். காலையில் கண்ணனை தரிசிக்கலாம் என்று எண்ணம் கொண்டு உறங்கப் போனார்.

நடுநிசியில் புரந்தரதாசர் கண்விழித்தார். கால் வலி தாங்காமல், 'அப்பண்ணா! ஒத்தடம் கொடுக்க வெந்நீர் கொண்டு வா!' என்று சீடனை அழைத்தார். பலமுறை கூவியழைத்த பிறகே சீடன் அப்பண்ணா ஒரு பாத்திரத்தில் சுடச்சுட வெந்நீர் கொண்டு வந்தான்.

தாமதமாக வந்த சீடன் மீது கோபம் கொண்டு, வெந்நீர்ப் பாத்திரத்தை வாங்கிய புரந்தரதாசர், வெந்நீரை அப்படியே அப்பண்ணாவின் முகத்தில் வீசிவிட்டார்.

பின்பு தமது செயலைக் குறித்து வருந்தி, நிம்மதியாகத் தூங்க முடியாமல், புரண்டு புரண்டு படுத்தார். பொழுது விடிந்தது. அப்பண்ணாவைத் தேடிப் போய், நள்ளிரவில் தான் நடந்து கொண்ட விதத்துக்காக வருத்தம் தெரிவித்தார்.

அப்பண்ணா ஆச்சரியமாகி, 'நான் இரவு முழுவதும் கண்விழிக்கவே இல்லையே?' என்றார். புரந்தரதாசர் குழம்பினார்.

நீராடிவிட்டுப் பாண்டுரங்கனைத் தரிசிக்கப் போனார். அங்கே பரபரப்பும் சலசலப்புமாக இருந்தது. விசாரித்ததில், கொதிக்கும் வெந்நீரை முகத்தில் கொட்டியது போல, பாண்டுரங்க விக்கிரகத்தின் முகம் முழுதும் கொப்புளங்களாக இருப்பது தெரியவந்தது.

கண்ணனே தனக்கு வெந்நீர் ஒத்தடம் கொடுக்க இரவு வந்திருந்தான் என்று உணர்ந்ததும், புரந்தர தாசர் நெகிழ்ந்து போனார். 'அப்பண்ணா வடிவில் வெந்நீர் கொண்டு வந்தது நீதான் என்று அறியாத பாவியாகிவிட்டேனே! நான் கோபத்தை விட்டொழிக்க வேண்டுமென்பதற்காக நீ செய்த விளையாட்டா இது? உன் அழகுத் திருமுகத்தை நான் மறுபடி காண வேண்டும்' என்று கண்ணீர் சிந்தினார்.

கண்ணனின் முகம் முன்பு போல் அழகானது. அந்த அழகில் மயங்கிய அவர் பாண்டுரங்கனின் மீது ஏகப்பட்ட துதிப்பாடல்களை எழுதி, இசையமைத்துப் பாடினார்.

புரந்தரதாசர் இந்தத் தூணின் அடியில் அமர்ந்துதான் பாண்டுரங்கனின் மீது பாடல்கள் இயற்றினார் என்பதால் இதற்குப் புரந்தரதாசர் தூண் என்றும் பெயர்.

ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் அனைவரும் பாண்டுரங்கனைத் தரிசிக்கும் முன், இந்தத் தூணை ஆரத்தழுவி வணங்குகிறார்கள். அவ்வாறு செய்தால் தங்களது பாவங்கள் தொலையும் என்பது ஐதீகம்.

மேலும், இந்த மண்டபத்தில் இருக்கும் கருந்தூண்களில் 64 மகாபாரதக் காட்சிகள் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. மட்டுமின்றி, மஹாவிஷ்ணுவின் தசாவதாரங்களும் சிற்பங்களாக இந்தத் தூண்களில் இடம் பெற்றுள்ளன.

கருவறைக்கு வெளியே ஜய, விஜய துவார பாலகர்கள். ஒரு கண்ணாடிப் பேழையில் திறந்த நிலையில் காட்சியளிக்கும் வேதநூல். அருகில், துக்காராமின் பாதுகைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. மக்கள் துக்காராம் பாதுகைகளைக் கண்ணில் ஒற்றிக் களிப்பெய்திய பின்பு, கருவறை நாடி நடக்கிறார்கள்.

கருவறை

[தொகு]

இங்கு இன, மொழி, சாதி வேறுபாடின்றி, இந்துக்கள் யாராக இருந்தாலும் கர்ப்பக்கிரகத்துக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

இடுப்பில் கைகளை ஊன்றியவாறு, ஒரு செங்கல்லின் மீது நின்று அருள்புரிகிறான் பண்டரிநாதன். இந்தப் பண்டரிநாதர் சுயம்பு மூர்த்தி. மணற் கல்லால் உருவான மூர்த்தி. செங்கல் மீது நிற்பதாக ஐதீகம். சுவாமியின் பீடமும் மணற்கல்லே. காதுகளில் மகர குண்டலங்கள். தலையில் சிவ லிங்க வடிவ கிரீடம் தரித்திருக்கிறார்.

'ஜெய ஜெய விட்டலா, பாண்டுரங்க விட்டலா’ என்னும் கோஷம் கருவறையை நிறைக்கிறது. பண்டரிநாதனுக்குத்தான் விட்டலன் என்று இன்னொரு பெயர். விட் என்ற மராத்தி மொழிச் சொல்லிற்கு செங்கல் என்பது பொருள். 'வா’வென்று அழைத்தால், நம்மோடே வந்துவிடுவதற்குத் தயாராக உள்ளது போல் ஒரு தோற்றம். கிருஷ்ணன் நம் வீட்டுப் பிள்ளைபோல் வெகு அந்நியோன்யமாக அங்கே எழுந்தருளியிருக்கிறார். பக்தர்கள் மூலவரின் திருவடிகளில் தலையை வைத்து வணங்கலாம். இதற்கு பாத ஸ்பரிச தரிசனம் என்று பெயர்.

மூலநாதனைத் தரிசித்த மன நிறைவோடு கருவறையை வலம் வந்தால், பின்னால் ஒரு தனிக் கோயில். இங்கே, அன்னை ருக்மணிக்குத் தனிச் சந்நிதி உள்ளது. அன்னை ருக்மணி தேவி இடுப்பில் இரு கரங்களையும் ஊன்றியபடி, ஆனந்தம் தவழும் வதனத்துடன் தரிசனம் தருகிறாள். அன்னைக்குக் குங்குமத்தால் அர்ச்சனை நடைபெறுகிறது. ருக்மணி சந்நிதியை அடுத்து சத்தியபாமா மற்றும் ராதையான ராதிகாவுக்கும் தனித் தனிச் சந்நிதிகள் உள்ளன.

பாண்டுரங்கனின் பக்தர்கள்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

https://www.vikatan.com/sakthivikatan/2016-jan-05/series/113894.html

இணைப்புகள்

[தொகு]
{{bottomLinkPreText}} {{bottomLinkText}}
பண்டரிபுரம்
Listen to this article

This browser is not supported by Wikiwand :(
Wikiwand requires a browser with modern capabilities in order to provide you with the best reading experience.
Please download and use one of the following browsers:

This article was just edited, click to reload
This article has been deleted on Wikipedia (Why?)

Back to homepage

Please click Add in the dialog above
Please click Allow in the top-left corner,
then click Install Now in the dialog
Please click Open in the download dialog,
then click Install
Please click the "Downloads" icon in the Safari toolbar, open the first download in the list,
then click Install
{{::$root.activation.text}}

Install Wikiwand

Install on Chrome Install on Firefox
Don't forget to rate us

Tell your friends about Wikiwand!

Gmail Facebook Twitter Link

Enjoying Wikiwand?

Tell your friends and spread the love:
Share on Gmail Share on Facebook Share on Twitter Share on Buffer

Our magic isn't perfect

You can help our automatic cover photo selection by reporting an unsuitable photo.

This photo is visually disturbing This photo is not a good choice

Thank you for helping!


Your input will affect cover photo selection, along with input from other users.

X

Get ready for Wikiwand 2.0 🎉! the new version arrives on September 1st! Don't want to wait?