For faster navigation, this Iframe is preloading the Wikiwand page for நிர்மலா ஸ்ரீவஸ்தவா.

நிர்மலா ஸ்ரீவஸ்தவா

நிர்மலா ஸ்ரீவஸ்தவா
பிறப்பு(1923-03-21)21 மார்ச்சு 1923
சின்தவாரா, மத்தியப் பிரதேசம், இந்தியா
இறப்பு23 பெப்ரவரி 2011(2011-02-23) (அகவை 87)
செனோவா, இத்தாலி
அறியப்படுவதுசகஜ யோகா
வலைத்தளம்
http://www.sahajayoga.org/

நிர்மலா ஸ்ரீவஸ்தவா (Nirmala Srivastava), ( 21 மார்ச்சு 1923 – 23 பெப்ரவரி 2011), "ஸ்ரீ மாதாஜி நிர்மலா தேவி" எனவும் அழைக்கப்படுகிறார். இவர் "சகஜ யோகா" வை நிறுவியவர். இது ஒரு தியான வழிமுறையாகும். "உங்களைத் தோற்றுவித்த சக்தியுடன் இணைப்பு ஏற்பட்டால் தவிர, உங்கள் வாழ்க்கையின் அர்த்தத்தை புரிந்து கொள்ள முடியாது," என்பது இவரின் கூற்றாகும். அவர், தன்னை முழுமையாக உணர்ந்தவர் என்றும், தனது வாழ்க்கையை அமைதி மற்றும் சமாதானம் பெற மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே என்றும் கூறியுள்ளார். அவ்வாறு விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமாக மக்கள் தன்நிலை அறியும் ஆற்றலைப் பெறுவார்கள் என்றும் தெரிவித்தார்.[1][2]

இளமைப்பருவம்

[தொகு]

ஸ்ரீ மாதாஜி, இந்தியாவிலுள்ள மத்திய பிரதேசத்தில், சின்தவாரா என்னும் இடத்தில் பிறந்தார். இவரது தந்தை பிரசாத் இந்து சமயத்தைச் சேர்ந்தவர். தாய் கோர்னீலியா சால்வே கிருத்தவ மதத்தைச் சார்ந்தவர். இவரது பெற்றோர் இவருக்கு "நிர்மலா" எனப் பெயரிட்டனர். இதற்கு "மாசற்றவள்" என்பது பொருளாகும்.[3][4] அவர் தன்னை சுயமாக உணர்ந்தவர் என்று கூறினார்.[5] இவரது தந்தை பதினான்கு மொழிகளில் புலமை மிக்கவராக இருந்தார். மேலும் திருக்குர்ஆன்மராத்தியில் மொழி பெயர்த்துள்ளார். அவரது தாயார் கணிதத்தில் கௌரவ பட்டத்தைப் பெற்ற இந்தியாவின் முதல் பெண்மணி ஆவார்.[2]

ஸ்ரீ மாதாஜி, தன் குழந்தைப்பருவத்தை நாக்பூரிலுள்ள தன் குடும்ப வீட்டில் கழித்தார்.[6] தன் இளம் வயதில் மோகன்தாசு கரம்சந்த் காந்தியின்.ஆசிரமத்தில் தங்கினார்.[3][7] இவரது பெற்றோரைப் போலவே இவரும் இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கு கொண்டார். மேலும், 1942இல் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் இளம் பெண்களின் அணிக்குத் தலைவியாக போராட்டத்தில் பங்குபெற்று சிறைக்குச் சென்றார்.[3][8][9] இந்தக் காலகட்டத்தில், இவரது இளைய உடன்பிறப்புகளுக்காக பொறுப்பை எடுத்துக்கொண்டு அவர்களின் நன்மைக்காக தன்னை அர்ப்பணித்து எளிமையாக வாழ்ந்தார்.[10] இவர் லூதியானாவிலுள்ள கிருத்தவ மருத்துவக்கல்லூரியிலும், லாகூரிலுள்ள பாலக்ராம் மருத்துவக் கல்லூரியிலும் படித்தார்.[6]

1947இல் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னர், ஸ்ரீ மாதாஜி, சந்திரிகா பிரசாத் ஸ்ரீவஸ்தவாவை மணந்தார்.[8] இவரது கணவர், உயர் தரமான இந்தியக் குடிமைப் பணியில் இருந்தவர். பின்னர், பிரதம மந்திரியான லால் பகதூர் சாஸ்திரியிடம் இணைச்செயலாளராகவும், ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத் அவர்களிடமிருந்து விருது பெற்றவருமாவார்.[11]. இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உண்டு. முதலாவதாக கல்பனா ஸ்ரீவஸ்தவா.[12] இரண்டாவதாக சாதனா வர்மா.[13] 1961 இல்,நிர்மலா ஸ்ரீவஸ்தவா, தேசிய, சமூக மற்றும் நன்னெறி போன்ற மதிப்பு மிக்க வாழ்க்கை நெறிகளை இளைய சமுதாயத்திற்கு கொண்டு செல்வதற்காக "யூத் சொசைட்டி ஃபார் பிலிம்ஸ்" என்னும் அமைப்பைத் தோற்றுவித்தார். மேலும், இவர் இந்தியத் திரைப்படத் தணிக்கை குழுவின் உறுப்பினராக இருந்தார்.[6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Wayne Dyer, "The Power of Intention""She is the Primordial Mother", p56-57, Hay House, 2004
  2. 2.0 2.1 "Sahaja Yoga founder Nirmala Devi is dead". இந்தியன் எக்சுபிரசு. Express News Service. 25 February 2011. http://www.indianexpress.com/news/sahaja-yoga-founder-nirmala-devi-is-dead/754645/. 
  3. 3.0 3.1 3.2 H.P. Salve, My memoirs (New Delhi: LET, 2000), chapter 1
  4. "Origin and Meaning of the Name Nirmala". Archived from the original on 15 சூலை 2011. பார்க்கப்பட்ட நாள் 1 மார்ச்சு 2011.[மெய்யறிதல் தேவை]
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-12-06. பார்க்கப்பட்ட நாள் 2019-03-12.
  6. 6.0 6.1 6.2 Biography at shrimataji.net பரணிடப்பட்டது 4 மே 2006 at the வந்தவழி இயந்திரம் [better source needed]
  7. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-01-14. பார்க்கப்பட்ட நாள் 2019-03-12.
  8. 8.0 8.1 H.P. Salve, My memoirs (New Delhi: LET, 2000), chapter 4
  9. "A message for one and all, The Hindu, 7 April 2003". Archived from the original on 8 நவம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 12 மார்ச் 2019. ((cite web)): Check date values in: |access-date= (help)
  10. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-01-14. பார்க்கப்பட்ட நாள் 2019-03-12.
  11. "Burke's Peerage". Burkespeerage.com. 8 July 1920. பார்க்கப்பட்ட நாள் 26 November 2011.
  12. "Portraits of former IMO Secretaries-General unveiled". Imo.org. 21 June 2005. Archived from the original on 22 February 2007. பார்க்கப்பட்ட நாள் 26 November 2011.
  13. Rommel Varma; Sadhana Varma. Ascent to the Divine: Himalaya Kailasa-Manasarovar in Scripture, Art and Thought பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-2-88169-001-3

வெளி இணைப்புகள்

[தொகு]
{{bottomLinkPreText}} {{bottomLinkText}}
நிர்மலா ஸ்ரீவஸ்தவா
Listen to this article

This browser is not supported by Wikiwand :(
Wikiwand requires a browser with modern capabilities in order to provide you with the best reading experience.
Please download and use one of the following browsers:

This article was just edited, click to reload
This article has been deleted on Wikipedia (Why?)

Back to homepage

Please click Add in the dialog above
Please click Allow in the top-left corner,
then click Install Now in the dialog
Please click Open in the download dialog,
then click Install
Please click the "Downloads" icon in the Safari toolbar, open the first download in the list,
then click Install
{{::$root.activation.text}}

Install Wikiwand

Install on Chrome Install on Firefox
Don't forget to rate us

Tell your friends about Wikiwand!

Gmail Facebook Twitter Link

Enjoying Wikiwand?

Tell your friends and spread the love:
Share on Gmail Share on Facebook Share on Twitter Share on Buffer

Our magic isn't perfect

You can help our automatic cover photo selection by reporting an unsuitable photo.

This photo is visually disturbing This photo is not a good choice

Thank you for helping!


Your input will affect cover photo selection, along with input from other users.

X

Get ready for Wikiwand 2.0 🎉! the new version arrives on September 1st! Don't want to wait?