For faster navigation, this Iframe is preloading the Wikiwand page for செய்ப்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்.

செய்ப்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்

செய்ப்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபொது
இயக்குனர்இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம்
சேவை புரிவதுசெய்ப்பூர், இராசத்தான், இந்தியா
அமைவிடம்சங்கனேர்
மையம்
  • சுப்ரீம் ஏயர்லைன்சு
  • அல்லையன்சு ஏர்
கவனம் செலுத்தும் நகரம்ஸ்பைஸ் ஜெட்
உயரம் AMSL385 m / 1,263 ft
ஆள்கூறுகள்26°49′27″N 075°48′44″E / 26.82417°N 75.81222°E / 26.82417; 75.81222
இணையத்தளம்www.jaipurairport.com
நிலப்படம்
JAI is located in இராசத்தான்
JAI
JAI
JAI is located in இந்தியா
JAI
JAI
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீட்டர் அடி
09/27 3,505 11,500 திண்காறை/அசுபால்ட்டு
15/33 1,592 5,223 அசுபால்ட்டு
புள்ளிவிவரங்கள் (ஏப்ரல் 2016 - மார்ச் 2017)
பயணிகள்3,783,458(31%)
வானூர்தி இயக்கங்கள்32,340(34.6%)
சரக்கு டன்கள்16,126
மூலம்: ஏஏஐ[1][2][3]

செய்ப்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் (Jaipur International Airport, (ஐஏடிஏ: JAIஐசிஏஓ: VIJP)) இராசத்தான் தலைநகரம் செய்ப்பூரிலுள்ள முதன்மை பன்னாட்டு வானூர்தி நிலையமாகும். செய்ப்பூர் நகர மையத்திலிருந்து 13 கிமீ தொலைவில் சங்கனேர் என்ற புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ளது.[4] இந்த வானூர்தி நிலையம் பன்னாட்டு வானூர்தி நிலையமாக திசம்பர் 29, 2005 அன்று தகுதி பெற்றது.[5] குடிசார் வானூர்தித் தரைத்தளம் 14 வானூர்திகளை ஏற்கவல்லது; புதியதாக கட்டப்பட்டுள்ள முனையத்தில் ஒரேநேரத்தில் 1000 பயணிகள் இருக்கவியலும்.[6]

ஆண்டுக்கு 2 முதல் 5 மில்லியன் பயணிகள் போக்குவரத்துள்ள பகுப்பில் உலகின் சிறந்த வானூர்தி நிலையமாக 2015,2016ஆம் ஆண்டுகளில் வானூர்தி நிலையங்களின் பன்னாட்டுக் குழுவால் தெரிந்தெடுக்கப்பட்டுள்ளது.[7][8] இந்தியாவில் இது 11ஆவது மிகவும் போக்குவரத்து மிகுந்த வானூர்தி நிலையமாக உள்ளது.[9]

செய்ப்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்
வானூர்தி நிறுத்துமிடத்திலிருந்து நிலையத்தின் இரண்டாம் முனையம்
இரண்டாம் முனையத்தினுள்

ஓடுபாதை

[தொகு]
செய்ப்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் ஓடுபாதைகள்
ஓடுபாதை எண் நீளம் அகலம் அணுக்க விளக்குகள்/கருவிசார் கீழிறங்கு அமைப்பு
9/27 3,505 m (11,499 அடி)* 46 m (151 அடி)* CAT III-B / CAT III-B
15/33 1,592 m (5,223 அடி)* 43 m (141 அடி)* இல்லை

செய்ப்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் இரண்டு ஓடுபாதைகள் உள்ளன. முதலாவது (15/33) 5,223 அடிகள் (1,592 m) நீளமும் இரண்டாவது (9/27) 11,500 அடிகள் (3,500 m) நீளமும் உடையன. இரண்டாம் ஓடுபாதை 9/27 செப்டம்பர் 15, 2016 முதல் இயக்கத்தில் உள்ளது. இதில் போயிங் 747 போன்ற பெரிய வானூர்திகள் இறங்கவும் மேலேறவும் வசதியானது. போயிங் 777களை கையாள்வதற்காக ஓடுபாதை 9,174 அடிகள் (2,796 m) இலிருந்து 11,500 அடிகள் (3,500 m) ஆக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.[10] இந்த 9/27 ஓடுபாதையில் வழிநடத்த கருவிசார் கீழிறங்கு CAT-IIIB கருவி திசம்பர் 8, 2016இல் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் குறைந்த கட்புலப்பாட்டின் போதும் (50 மீட்டர்கள் (160 அடி)) வானூர்திகள் கீழிறங்கவியலும். இதனால் கூடுதலான பாதுகாப்பு கிடைப்பதுடன் மூடுபனிக் காலங்களிலும் வானூர்திகளை அண்மித்த நிலையங்களுக்கு வழிமாற்றாது இயக்கவியல்கிறது.[11]

9/27 ஓடுபாதைக்கு இணையாக ஓர் வான்கலவழி அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து நெருக்கடியை திறனாக கையாளவியலும்.[12] 2018ஆம் ஆண்டு மே மாதம் இந்தப் பணி நிறைவடையும் என மதிப்பிடப்படுகின்றது.[13] இதன்பின் இந்த வானூர்தி நிலையம் ஒருமணி நேரத்தில் 16 பறப்புக்களை கையாள முடியும்.[14]. நெடுங்காலமாக முதல் ஓடுபாதை இயக்கத்தில் இல்லை. எனவே ஒரே ஓடுபாதையே வானூர்திகள் கீழிறங்கவும் மேலேறவும் பயன்படுத்தப்படுகின்றது.

முனையங்கள்

[தொகு]

முனையம் 1

[தொகு]

தற்போது முனையம் 1 பயன்படுத்தப்படாது உள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வரை முனையம் ஒன்றிலிருந்துதான் வானூர்திகள் இயக்கப்பட்டு வந்தன. சூலை 2013 முதல் பன்னாட்டு பறப்புகள் புதிய முனையம் இரண்டுக்கு மாற்றப்பட்டது. இந்த முனையத்திலிருந்து தற்போது ஹஜ் பயணப் பறப்புகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. மேலும் சரக்கு பதிவுகள் இங்கு செய்யப்படுகின்றன.

மீண்டும் இங்கிருந்து வானூர்திப் பறப்புகளை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மீளமைப்பு முயற்சிகளின் அங்கமாக சரக்கு இயக்கங்கள் இங்கிருந்து மாற்றப்பட வேண்டும். தற்போது எட்டு பன்னாட்டு பறப்புகள் இங்கிருந்து இயக்கப்படுகின்றன.[15] இந்த சீரமைத்தல் பணி திசம்பரில் துவங்கியது; 2018 செப்டம்பரில் இது நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் முனையம் ஒன்று அருகே வானூர்திகள் நிறுத்த இடமில்லாக் காரணத்தால் பயணிகள் பேருந்துகள் மூலம் இங்கிருந்து கொண்டு செல்லப்பட வேண்டும்.[16] சூரமைப்பு முடிவடைந்த பின்னர் இந்த முனையத்தின் பரப்பளவு 18,000 சதுர மீட்டர்களாக விரிவுபடுத்தப்படும்; பன்னாட்டு புறப்பாடு, வருகைக்கு மட்டுமே இந்த முனையம் பயன்படுத்தப்படும்.[17]

முனையம் 2

[தொகு]

புதிய உள்நாட்டு முனையக் கட்டிடம் சூலை 1, 2009இல் திறக்கப்பட்டது.[18][19] இந்த புதிய முனையம் 22,950 சதுர மீட்டர்கள் (247,000 sq ft) பரப்பளவில் நடுவண் சூடேற்று அமைப்பு,நடுவண் குளிர்சாதன அமைப்பு, பெட்டிகள் செல்லும் வரிசையிலேயே எக்சு-கதிர் சோதனை, வருகையில் சாய்வான பயணப்பெட்டி கோரல் சழல்மேடை, நகர்படி, பொது ஒலிபரப்பு அமைப்பு, பறப்புத் தகவல் காட்சியமைவு, பாதுகாபிற்கான CCTV, வான்பயண உட்பதிகை சேவை முகப்புகள், தானுந்து நிறுத்தங்கள் போன்ற வசதிகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. நெருக்கடி நேரத்தில் 500 பயணிகளை கையாளும் திறனைக் கொண்டுள்ளது. ஆண்டுக்கு 400,000 பயணிகளை கையாளும் திறன் கொண்டது. நிலைய முகப்பு மணற்கல் மற்றும் தோல்பூர் கற்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது; சுவர்களில் இராசத்தான்i ஓவியங்கள் அலங்கரிக்கின்றன. இந்த முனையம் தற்போது பன்னாட்டு பறப்புகளுக்கும் உள்நாட்டுப் பறப்புகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. தவிரவும் இங்கு மூன்று சிறப்பு விருந்தினர் ஓய்வறைகளும் உள்ளன.[20] முனையம் இரண்டில் 14 வான்பயண உட்பதிகை முகப்புகளும், ஆறு குடிநுழைவு முகப்புகளும், நான்கு சுங்கம் மற்றும் நான்கு பாதுகாப்பு முகப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன.[21] The terminal will have 2 new aerobridge and Conveyor belt at the end of year 2018.[22]

சரக்குகள்

[தொகு]

சூலை 16, 2012இல் முனையம் 1 மூடப்பட்டது; பின்னர் சரக்குப் போக்குவரத்தை கையாளுமாறு சீர்திருத்தப்பட்டது.[23] சரக்கு முனையம் பழைய பயணிகள் முனையத்திற்கு அடுத்துள்ளது. இதன் பரப்பளவு ஏறத்தாழ 700 சதுர மீட்டர்கள் (7,500 sq ft) ஆகும். இந்த வசதியை இராசத்தான் சிறுதொழில் நிறுவனங்கள் மேம்பாட்டு நிறுவனம் கையாள்கிறது. முனையம் ஒன்றுக்கு பயணிகள் போக்குவரத்தை மீளவும் கொணர சரக்குப் போக்குவரத்து இங்கிருந்து மாற்றப்பட வேண்டும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Traffic News for the month of March 2017: Annexure-III" (PDF). இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம். 27 ஏப்பிரல் 2017. p. 3. Archived from the original (PDF) on 28 ஏப்பிரல் 2017. பார்க்கப்பட்ட நாள் 27 ஏப்பிரல் 2017.
  2. "Traffic News for the month of March 2017: Annexure-III" (PDF). இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம். 27 ஏப்பிரல் 2017. p. 3. Archived from the original (PDF) on 28 ஏப்பிரல் 2017. பார்க்கப்பட்ட நாள் 27 ஏப்பிரல் 2017.
  3. "Traffic News for the month of March 2017: Annexure-IV" (PDF). இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம். 27 ஏப்பிரல் 2017. p. 3. Archived from the original (PDF) on 28 ஏப்பிரல் 2017. பார்க்கப்பட்ட நாள் 27 ஏப்பிரல் 2017.
  4. "Jaipur Airport". Airports Authority of India. Archived from the original on 14 ஜூன் 2011. பார்க்கப்பட்ட நாள் 10 September 2015. ((cite web)): Check date values in: |archive-date= (help)
  5. "Jaipur airport to get international status". The Times of India. 29 December 2005 இம் மூலத்தில் இருந்து 2012-09-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120929223200/http://articles.timesofindia.indiatimes.com/2005-12-29/india/27846342_1_international-status-jaipur-airport-international-flights. 
  6. "Jaipur airport expansion". 11 July 2011 இம் மூலத்தில் இருந்து 3 மார்ச் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160303185317/http://dnasyndication.com/showarticlerss.aspx?nid=vguj9Ov3dPulsGSTtM7FMsSLVEFY2P4ktfysyhEWCDxHXrj0=. பார்த்த நாள்: 30 June 2014. 
  7. "Airport Service Quality Awards" இம் மூலத்தில் இருந்து 2017-05-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170507015325/http://www.aci.aero/Airport-Service-Quality/ASQ-Awards/Current-Winners/Best-Airport-By-Size/2-5million. 
  8. "Jaipur, Srinagar top ranked airports in small aerodrome category". Economic Times.
  9. "Jaipur airport ‘lands’ in 11th spot"
  10. "Jaipur airport set to handle bigger planes | Jaipur News - Times of India". M.timesofindia.com. 2016-09-13. பார்க்கப்பட்ட நாள் 2017-11-30.
  11. "Trial of CAT-IIIB lighting system at airport from December 8 | Jaipur News - Times of India". M.timesofindia.com. 2016-11-07. பார்க்கப்பட்ட நாள் 2017-11-30.[தொடர்பிழந்த இணைப்பு]
  12. "Jaipur airport to have a taxiway". The PinkCity Post. 2017-10-13. பார்க்கப்பட்ட நாள் 2017-11-30.
  13. https://www.pinkcitypost.com/jaipur-airport-close-7-hours-every-day-infrastructure-development/
  14. ट्रेंडिंग न्यूज़ अलर्ट (2017-11-17). "Taxi Way On Jaipur Airport | Jaipur News in Hindi - Dainik Bhaskar Hindi News". M.bhaskar.com. Archived from the original on 2018-08-13. பார்க்கப்பட்ட நாள் 2017-11-30.
  15. https://www.pinkcitypost.com/terminal-1-jaipur-airport-become-operational/
  16. http://www.hindustantimes.com/jaipur/to-ease-passenger-load-jaipur-airport-terminal-1-renovation-to-start-in-december/story-1C2kz4Ee9uJGVThDK2rNGK.html
  17. https://m.timesofindia.com/city/jaipur/separate-domestic-international-terminals-mooted/articleshow/63279521.cms
  18. "New domestic terminal set for take-off on 1 July". The Times of India. 21 June 2009 இம் மூலத்தில் இருந்து 2011-09-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110907143239/http://articles.timesofindia.indiatimes.com/2009-06-21/jaipur/28169431_1_new-terminal-traces-of-psychotropic-drugs-domestic-fliers. 
  19. "Passengers welcomed on Terminal-2". The Times of India. 2 July 2009 இம் மூலத்தில் இருந்து 2011-06-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110606093152/http://articles.timesofindia.indiatimes.com/2009-07-02/jaipur/28209454_1_terminal-building-new-terminal-international-terminal. 
  20. https://timesofindia.indiatimes.com/city/jaipur/Domestic-flights-to-take-off-from-terminal-2/articleshow/4722234.cms
  21. https://jaipur.org/2012/12/06/jaipur-airport-terminal-2/
  22. https://www.bhaskar.com/news/RAJ-JAI-HMU-MAT-latest-jaipur-news-044547-594908-NOR.html
  23. "Terminal 1 ¦ Rajasthan for you". Rajasthan for you blog. பார்க்கப்பட்ட நாள் 4 May 2016.

வெளியிணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Jaipur International Airport
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
{{bottomLinkPreText}} {{bottomLinkText}}
செய்ப்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்
Listen to this article

This browser is not supported by Wikiwand :(
Wikiwand requires a browser with modern capabilities in order to provide you with the best reading experience.
Please download and use one of the following browsers:

This article was just edited, click to reload
This article has been deleted on Wikipedia (Why?)

Back to homepage

Please click Add in the dialog above
Please click Allow in the top-left corner,
then click Install Now in the dialog
Please click Open in the download dialog,
then click Install
Please click the "Downloads" icon in the Safari toolbar, open the first download in the list,
then click Install
{{::$root.activation.text}}

Install Wikiwand

Install on Chrome Install on Firefox
Don't forget to rate us

Tell your friends about Wikiwand!

Gmail Facebook Twitter Link

Enjoying Wikiwand?

Tell your friends and spread the love:
Share on Gmail Share on Facebook Share on Twitter Share on Buffer

Our magic isn't perfect

You can help our automatic cover photo selection by reporting an unsuitable photo.

This photo is visually disturbing This photo is not a good choice

Thank you for helping!


Your input will affect cover photo selection, along with input from other users.

X

Get ready for Wikiwand 2.0 🎉! the new version arrives on September 1st! Don't want to wait?