கே. ஆர். சேதுராமன்
கே. ஆர். சேதுராமன் ஓமியோபதி மருத்துவர். (குட்டின்) கே. கே. இராமாச்சாரி-கிருட்டிணாமணி அம்மாள் தம்பதியருக்கு 1939ல் மதுரையில் பிறந்தவர். இவர் நூலகர், சிறந்த சமூக வரலாற்று ஆசிரியர் மற்றும் எழுத்தாளர். சௌராட்டிர மொழி வளர்ச்சிக்காக 2006இல் சாகித்திய அகாதமியின் பாஷா சம்மான் விருது பெற்றவர்.
கல்வி
[தொகு]நூற்றாண்டு விழா கொண்டாடிய மதுரை சௌராட்டிர உயர்நிலைப் பள்ளியில் 1956ல் பள்ளி இறுதி படிப்பு முடித்தவர். தமிழ் உணர்வை ஊட்டி வளர்க்கும் மதுரை தியாகராசர் கலைக்கல்லூரி, மதுரையில் இளங்கலை விலங்கியல் கல்வியை 1960ல் முடித்தவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ., முதுகலை பட்டம் பெற்று, சென்னைப் பலகலைக்கழகத்தில் இளங்கலை மற்றும் முதுகலை நூலக அறிவியல் பட்டம் பெற்றார்.
பணி புரிந்த இடங்கள்
[தொகு]- சென்னைப் பல்கலைகழக விரிவாக்க மைய நூலகம், மதுரை,
- செயின்ட் ஜான் கல்லூரி நூலகம், பாளையங் கோட்டை
- சௌராட்டிர கல்லூரியில் நிறுவன நூலகர்,மதுரை
- சென்னைப் பல்கலைகழக விரிவாக்க மைய நூலகம், கோவை
- கோவை பாரதியார் பல்கலைக்கழக நூலகம்.
படைத்த நூல்கள்
[தொகு]- ”சேதுராமன் மும்மொழி சௌராட்டிர அகராதி”.
- ”தமிழ்நாட்டில் சௌராட்டிரர்:முழு வரலாறு” நூல்.
- ”ஸ்ரீதியாகராச வேங்கடரமண சரித்திரம்”.
- ”சௌராட்டிரர்களின் கோத்திரங்களும் குடும்பப் பெயர்களும்” எனும் நூல்.
- ”ஸ்ரீமன்நடனகோபால நாயகி சுவாமிகள்” என்ற வரலாற்று நூல்.
- ”வராக விடுதலை” எனும் சிறுகதை.
சாகித்திய அகாதமி விருது
[தொகு]இந்தியாவில் சிறுபான்மை இனமக்கள் பேசும் மொழிவளர்ச்சிக்காக வழங்கப்படும், பாஷா சம்மான் விருதை கே. ஆர். சேதுராமனுக்கும், தாடா. சுப்பிரமணியனுக்கும் கூட்டாக, 2006-இல் சௌராட்டிர மொழி வளர்ச்சிக்குப் பாடுபட்டதைப் பாராட்டி சாகித்திய அகாதமி வழங்கிப் பாராட்டியுள்ளது.[1]
மேலும் காண்க
[தொகு]- சாகித்திய அகாதமியின் பாஷா சம்மான் விருது
- தாடா. சுப்பிரமணியன்
- டி. ஆர். தாமோதரன்
- டி. எஸ். சரோஜா சௌந்தரராஜன்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Sri Thada. Subramanyam & Sri K.R. Sethuraman Sourashtra Language and Literature jointly-2006". Archived from the original on 2017-08-05. பார்க்கப்பட்ட நாள் 2015-07-22.
ஆதாரநூல்கள்
[தொகு]- சௌராட்டிரர்: முழு வரலாறு, 2008, மூன்றாம் பதிப்பு.
வெளி இணைப்புகள்
[தொகு]- சௌராட்டிரர் வரலாறு, ஒலி வடிவில்
- சௌராட்டிர சமுகம், பண்பாடு, மொழி, முன்பு வாழ்ந்த பகுதிகள் History of Saurashtrians of Tamilnadu சௌராட்டிர சமுகம், பண்பாடு, மொழி, முன்பு வாழ்ந்த பகுதிகள் பரணிடப்பட்டது 2013-07-28 at the வந்தவழி இயந்திரம் & [1]
- சௌராட்டிர சமுக இணையதளங்கள் [2] பரணிடப்பட்டது 2013-08-29 at the வந்தவழி இயந்திரம், [3] &, [4] & [5] பரணிடப்பட்டது 2018-11-23 at the வந்தவழி இயந்திரம்
மதுரை மக்கள் | |
---|---|
இலக்கியவாதிகள் & அறிஞர்கள் | |
இசை | |
திரைத்துறை | டி. ஆர். மகாலிங்கம் · பி. வி. நரசிம்ம பாரதி · டி. எம். சௌந்தரராஜன் · அமீர் · பாலா · பாரதிராஜா · சிம்புதேவன் · கனிகா · கார்த்திக் சுப்புராஜ் · மணிரத்னம் · மதுரை முத்து · ராமராஜன் · சமுத்திரக்கனி · சசிகுமார் · சாம் · சி. வி. குமார் · சீனிவாசன் · சீனு இராமசாமி · சுசி கணேசன் · சூரி · சேரன் · வடிவேலு · விவேக் · விஜயகாந்த் · வினு சக்ரவர்த்தி · பரவை முனியம்மா · |
நாட்டியம் | |
பொது & சமூக சேவை | |
தொழில் முனைவோர் & வணிக நிறுவன தலைவர்கள் | |
விளையாட்டு | |
அரசியல் | கே. வி. இராமாச்சாரி · எல். கே. துளசிராம் · அ. வைத்தியநாதய்யர் · என். எம். ஆர். சுப்பராமன் · ப. ராமமூர்த்தி · கே. டி. கே. தங்கமணி · ஜனா கிருஷ்ணமூர்த்தி · பி. கக்கன் · மேயர் முத்து · கே. எஸ். ராமகிருஷ்ணன் · பி. டி. ராஜன் · பி. டி. ஆர். பழனிவேல்ராசன் · ஐ. மாயாண்டி பாரதி · ஆர். வி. சுவாமிநாதன் · என். சங்கரய்யா · கா. காளிமுத்து · மு. க. அழகிரி · என். எஸ். வி. சித்தன் · லீலாவதி · தா. கிருட்டிணன் · செல்லூர் கே. ராஜூ · வி. வி. ராஜன் செல்லப்பா · எஸ். எஸ். சரவணன் · பழனிவேல் தியாகராஜன் · |
சமயம் | |
Text is available under the CC BY-SA 4.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.