For faster navigation, this Iframe is preloading the Wikiwand page for காஷ்மீர்.

காஷ்மீர்

பச்சை நிறத்தில் காணப்படும் பகுதி பாகிஸ்தான் ஆளுகைக்கு உட்பட்டவை. ஆரஞ்சு நிறத்தில் காணப்படுபவை இந்திய ஆளுகைக்கு உட்பட்ட சம்மு, காசுமீர் மற்றும் லடாக் பகுதிகள்; அக்சய் சின்(Aksai Chin)பகுதி சீனக் கட்டுப்பாட்டில் உள்ளது.
இதன் கடுமையான மலைப் பிரதேசத்தால், பெரும்பாலான பகுதிகளுக்கு வாகனப் போக்குவரத்து இல்லை. மேலே பார்ப்பது லடாக்கை சம்மு காசுமீர் பள்ளத்தாக்குடன் இணைக்கும் கார்கில்-லே நெடுஞ்சாலை.

காசுமீர் (கசுமீரி: कॅशीर, کٔشِیر ; இந்தி: कश्मीर ; உருது: کشمیر) இந்திய துணை கண்டத்தின் வடமேற்குப் பகுதியில் உள்ளது. ஆதியில், இமயத்திற்கும் பிர் மலைத் தொடருக்கும் இடையே உள்ள பள்ளத்தாக்கே காசுமீர் எனப்பட்டது.[1][2][3]

இந்திய கட்டுப்பாட்டில் உள்ள காசுமீர், சம்மு, காசுமீர் மற்றும் லடாக் ஆகிய மூன்று பகுதிகளையும் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர், ஆசாத் காஷ்மீர் மற்றும் வடக்கு நிலங்கள் ஆகிய இரண்டு பகுதிகளையும் கொண்டுள்ளது. அக்சாய் சின் என்றழைக்கப்படும் பகுதி சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. மலைப் பாங்கான இடங்களுக்குக் கீழ் உள்ள காஷ்மீர் பள்ளத்தாக்கில் பல ஆறுகளும் அருவிகளும் பாய்வதால், இப்பகுதியின் இயற்கை வளம் அழகுடன் காட்சி அளிக்கிறது.

பல காலங்களாக, இந்துக்களின் பிரதான வழிபாட்டுத் தலமாகவே காசுமீர் கருதப்படுகிறது. பிற்காலத்தில் புத்த மதம் முக்கியத்துவம் பெற்று, இன்றும் காசுமீர சைவம் மற்றும் இஸ்லாமியத்திற்கும் இடையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

வரலாறு

[தொகு]

காஷ்மீர் சமவெளியை மௌரியர்கள் கி மு 322 முதல் கி மு 185 முடியவும்; குசானர்கள் கி மு 30 முதல் கி பி 375 முடியவும்; காபூல் இந்து சாகிகள் கி பி 500 முதல் 1010 முடியவும்; லெகரா இந்து அரச குலத்தினர் 1003 முதல் 1320 முடியவும் ஆண்டனர். பின்னர் தில்லி சுல்தான்கள், முகலாயர்களும், இறுதியாக காஷ்மீர் இந்தியாவுடன் இணைப்பதற்கு முன் வரை தோக்ரி மொழி பேசும் இராசபுத்திர இந்து மன்னர்கள், பிரித்தானிய இந்தியாவின் மேலாண்மையை ஏற்ற் பகுதியாக ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தை 6 மார்ச் 1846 முதல் 17 நவம்பர் 1952 முடிய ஆண்டனர்.

இந்தியப் பிரிவினையின் போது, காஷ்மீரின் மேற்கு பகுதிகளை, பாகிஸ்தான் இராணுவ ஆதரவுடன் வடமேற்கு எல்லைப்புற மாகாண மக்கள் தாக்கி கைப்பற்றி ஆசாத் காஷ்மீர் என்ற பகுதியை நிறுவினர்.

இந்தியப் பிரிவினை முதல், தற்போது வரை காஷ்மீர் பிரச்சினை ஆறாததாக உள்ளது.

போர்கள்

[தொகு]

காஷ்மீர் பிரச்சினை குறித்து இந்திய பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே, 1947, 1965 மற்றும் 1999 ஆகிய ஆண்டுகளில் மூன்று போர்கள் நடந்துள்ளது.

காஷ்மீர் சமவெளியின் மாவட்டங்கள்

[தொகு]
  1. அனந்தநாக் மாவட்டம்
  2. குல்காம் மாவட்டம்
  3. புல்வாமா மாவட்டம்
  4. சோபியான் மாவட்டம்
  5. பட்காம் மாவட்டம்
  6. ஸ்ரீநகர் மாவட்டம்
  7. காந்தர்பல் மாவட்டம்
  8. பந்திபோரா மாவட்டம்
  9. பாரமுல்லா மாவட்டம்
  10. குப்வாரா மாவட்டம்

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Kashmir: region, Indian subcontinent". Encyclopædia Britannica.  Quote: "Kashmir, region of the northwestern Indian subcontinent. It is bounded by the Uygur Autonomous Region of Xinjiang to the northeast and the Tibet Autonomous Region to the east (both parts of China), by the Indian states of Himachal Pradesh and Punjab to the south, by Pakistan to the west, and by Afghanistan to the northwest. The northern and western portions are administered by Pakistan and comprise three areas: Azad Kashmir, Gilgit, and Baltistan, ... The southern and southeastern portions constitute the Indian state of Jammu and Kashmir. The Indian- and Pakistani-administered portions are divided by a "line of control" agreed to in 1972, although neither country recognizes it as an international boundary. In addition, China became active in the eastern area of Kashmir in the 1950s and since 1962 has controlled the northeastern part of Ladakh (the easternmost portion of the region)."
  2. "Kashmir territories profile". BBC News. 4 January 2012 இம் மூலத்தில் இருந்து 16 July 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150716152335/http://www.bbc.com/news/world-south-asia-11693674.  Quote: "The Himalayan region of Kashmir has been a flashpoint between India and Pakistan for over six decades. Since India's partition and the creation of Pakistan in 1947, the nuclear-armed neighbours have fought three wars over the Muslim-majority territory, which both claim in full but control in part. Today it remains one of the most militarised zones in the world. China administers parts of the territory."
  3. "Kashmir profile—timeline". BBC News. 5 January 2012 இம் மூலத்தில் இருந்து 22 July 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160722065125/http://www.bbc.com/news/world-south-asia-16069078. "
    1950s—China gradually occupies eastern Kashmir (Aksai Chin).
    1962—China defeats India in a short war for control of Aksai Chin.
    1963—Pakistan cedes the Trans-Karakoram Tract of Kashmir to China."
     
{{bottomLinkPreText}} {{bottomLinkText}}
காஷ்மீர்
Listen to this article

This browser is not supported by Wikiwand :(
Wikiwand requires a browser with modern capabilities in order to provide you with the best reading experience.
Please download and use one of the following browsers:

This article was just edited, click to reload
This article has been deleted on Wikipedia (Why?)

Back to homepage

Please click Add in the dialog above
Please click Allow in the top-left corner,
then click Install Now in the dialog
Please click Open in the download dialog,
then click Install
Please click the "Downloads" icon in the Safari toolbar, open the first download in the list,
then click Install
{{::$root.activation.text}}

Install Wikiwand

Install on Chrome Install on Firefox
Don't forget to rate us

Tell your friends about Wikiwand!

Gmail Facebook Twitter Link

Enjoying Wikiwand?

Tell your friends and spread the love:
Share on Gmail Share on Facebook Share on Twitter Share on Buffer

Our magic isn't perfect

You can help our automatic cover photo selection by reporting an unsuitable photo.

This photo is visually disturbing This photo is not a good choice

Thank you for helping!


Your input will affect cover photo selection, along with input from other users.

X

Get ready for Wikiwand 2.0 🎉! the new version arrives on September 1st! Don't want to wait?