For faster navigation, this Iframe is preloading the Wikiwand page for உருமுச்சி.

உருமுச்சி

Ürümqi
乌鲁木齐
ئۈرۈمچی
Prefecture-level city
乌鲁木齐市
Uyghur transcription(s)
 • Uyghur Ereb Yéziqiئۈرۈمچی
 • Uyghur Latin YéziqiÜrümchi
 • Yengi YeziķÜrümqi
 • pronunciation in IPAIPA[yrymˈtʃɨ]
 • TürkishUrumçi
Chinese transcription(s)
 • Simplified Chinese乌鲁木齐
 • Traditional Chinese烏魯木齊
 • PinyinWūlǔmùqí
மேலிருந்து: உரும்கியின் நடுவணிக மாவட்டத்தின் பரந்த காட்சி, செம்மலை (ஹாங்க் ஷான்), இரவுச்சந்தை, உரும்கியிலிருந்து டியான் ஷான் காட்சி
மேலிருந்து: உரும்கியின் நடுவணிக மாவட்டத்தின் பரந்த காட்சி, செம்மலை (ஹாங்க் ஷான்), இரவுச்சந்தை, உரும்கியிலிருந்து டியான் ஷான் காட்சி
நாடுசீனா
மாநிலம்சிங்ஜியாங்க்
கவுன்டிகள்8
அரசு
 • சீன பொதுவுடைமைக்கட்சி குழுச்செயலர்லி ஷி (Li Zhi) (栗智)
 • மேயர்ஜெர்லா இசாமுதின் (Jerla Isamudin)
பரப்பளவு
 • மொத்தம்10,989 km2 (4,243 sq mi)
மக்கள்தொகை
 (2005)
 • மொத்தம்26,81,834
நேர வலயம்ஒசநே+8 (சீன சீர்தர நேரம்)
தபால்துறை குறியீடு
830000
இடக் குறியீடு991
வாகன உரிம எண் முன்னொட்டு新A
மொத்த உள்நாட்டு உற்பத்தி (2008)CNY 102 billion
 - ஒரு நபருக்குCNY 43,211
ISO 3166-2CN-65-01
இணையதளம்www.urumqi.gov.cn (சீன மொழியில்)

உருமுச்சி[1] அல்லது உரும்கி , சீனமொழியில் உலுமுகி(ئۈرۈمچی|Ürümchi)); (=乌鲁木齐|t=烏魯木齊|p=Wūlǔmùqí) சீன மக்கள் குடியரசின் வடமேற்கில் உள்ள சிங்ஜியாங்க் தன்னாட்சி வலயத்தின் தலைநகராகும்.

2.3 மில்லியன் மக்கட்தொகையுடன் சீனாவின் மேற்கு உட்புறத்தில் உள்ள மிகப் பெரிய நகரம் உரும்கி. 1990களில் இருந்து இந்நகரம் வேகமாக பொருளாதார வளர்ச்சி அடைந்து இன்று மண்டல போக்குவரத்து மற்றும் வணிக மையமாக உருவெடுத்துள்ளது.

வரலாறு

[தொகு]

பட்டு சாலை வழியில் வடக்குப்பகுதியில் இருந்தாலும் இது ஒரு நவீன நகரமாகும். தற்போதைய உரும்கியில் இருந்து 10 கிமீ தூரத்தில் லுன்டாய் என்னும் பழமை வாய்ந்த நகரம்,(கிபி648) பட்டுவழியில் சுங்கம் வசூலித்து வந்தது.பின்னர் வரும் காலங்களுக்கு தரவுகள் இல்லை.

கிங் பரம்பரையில் (1763) பேரரசர் கியான்லாங் லுன்டாயை விரிவுபடுத்தி டைஹுவா எனப் பெயரிட்டார். 1884, பேரரசர் குயாங் ஜு சிங்ஜியாங் மாநிலத்தை உருவாக்கி டைஹுவாவினை அதன் தலைநகரமாக்கினார்.[2] பெப்ரவரி 1, 1954இல் சீன மக்கள் குடியரசு ஏற்பட்டபின், இந்த நகருக்கு மங்கோலியன் மொழியில் அழகிய புல்வெளி என்னும் பொருள்படும் உரும்கி என பெயர் மாற்றப்பட்டது.

மக்கள்தொகை

[தொகு]

2000 கணக்கெடுப்பின்படி, உரும்கியில் 2,081,834 மக்கள் உள்ளனர். மக்கள்தொகை அடர்த்தி 174.53 வசிப்பவர்கள்/சகிமீ. இந்த தொகையில், 75.3% பேர் ஹான் சீனர்கள்,15.8% பேர் யுகுர் மக்கள்,8.0% பேர் ஹுயு மக்கள்,மற்றும் 2.3% பேர் கசக்குகளும் கிகிசுக்களும் ஆகும்.

புவியியல் மற்றும் வானிலை

[தொகு]

சீனாவின் மேற்குப்பகுதியில் மிகப்பெரிய நகரமான உரும்கி கின்னஸ் உலக சாதனைகளில் உலகில் எந்தக் கடலிலிருந்தும் வெகுதொலைவில் உள்ள நகரம் என்னும் வகையில் இடம் பெற்றுள்ளது. அருகாமையிலுள்ள கடலோரத்திலிருந்து 1,400 மைல்கள்(2,500 கிமீ) தூரத்தில் உள்ளது. நகரத்தின் பரப்பளவு 10,989 ச.கிமீ. சராசரியாக உயரம் 800 மீட்டர்கள். உரும்கியின் வானிலை ஐரோப்பிய வானிலையை ஒத்ததாகும். வெப்பமான,உலர்ந்த வேனில் காலத்துடன் குளிர்ந்த,ஈரமான குளிர்காலமும உண்டு.வேனில் காலத்தில் வெப்பநிலை சராசரியாக 24° செல்சியஸ் (75°பாரன்ஹீட்),குளிர்காலத்தில் சராசரியாக -16 °C (3 °F) நிலவுகிறது.

தட்பவெப்பநிலை வரைபடம்
உரும்கி
பெமாமேஜூஜூ்செடி
 
 
8
 
-8
-18
 
 
8
 
-6
-16
 
 
18
 
4
-5
 
 
29
 
17
5
 
 
28
 
24
12
 
 
36
 
29
17
 
 
20
 
31
19
 
 
16
 
30
18
 
 
24
 
24
12
 
 
22
 
14
3
 
 
17
 
2
-6
 
 
10
 
-6
-14
வெப்பநிலை (°C)
மொத்த மழை/பனி பொழிவு (மிமீ)
source: உலக வானிலை தகவல் சேவை
Imperial conversion
JFMAMJJASOND
 
 
0.3
 
17
0
 
 
0.3
 
21
3
 
 
0.7
 
39
23
 
 
1.1
 
62
41
 
 
1.1
 
76
54
 
 
1.4
 
84
62
 
 
0.8
 
88
66
 
 
0.6
 
86
64
 
 
0.9
 
75
53
 
 
0.9
 
56
38
 
 
0.7
 
36
21
 
 
0.4
 
21
6
வெப்பநிலை ( °F)
மொத்த மழை/பனி பொழிவு (அங்குலங்களில்)

பொருளாதாரம்

[தொகு]

உரும்கி சிங்ஜியாங்க் மாநிலத்தின் முக்கிய தொழில்மையமாகும். உரும்கியும் அதன் சுற்றுநகர்களும் சிங்ஜியாங்கின் 64.5% தொழில் உற்பத்திக்கு காரணமாயுள்ளன.தனிநபர் மொத்த உள்ளக உற்பத்தி அமெரிக்க டாலர் 6,222 ஆக 2008இல் இருந்தது.[1]. 2008 புள்ளிவிவரங்களின்படி,மேற்கு சீனாவின் நகரங்களில் செலவழிக்கக்கூடிய வருமானம் வரிசையில் ஏழாவது இடத்தில் இருந்தது.[3]

மாலைநேரத்தில் உரும்கி

உரும்கி வெளிநாட்டு பொருளாதார உறவுகள் மற்றும் வணிக கண்காட்சி 1991இலிருந்து ஆண்டுதோறும் நடைபெறுகிறது.உள்நாட்டு,வெளிநாட்டு வர்த்தகத்தை விரிவுபடுத்த இந்த கண்காட்சி உதவுகிறது.[4]

சுற்றுலா

[தொகு]
  • சிங்ஜியாங்க் பன்னாட்டு பெருஞ்சந்தை (新疆国际大巴扎, யுகைர்: شىنجاڭ خەلقئارا چوڭ بازىرى): ஜிஃபாங் நான் சாலையில் அமைந்துள்ள இசுலாமிய பசார் ஆகும். சிங்ஜியாங்க் மற்றும் உரும்கியின் மிக அழகான சுற்றுலா இடங்களில் ஒன்றாகும்.
  • ஹாங் ஷான் மலை உரும்கியின் கண்ணைக்கவரும் இடமாகும்.
  • பனிக்கட்டியாறு எண். 1 (一号冰川), உரும்கி ஆறின் மூலம், சீனாவில் ஒரு நகரத்தின் அருகே அமைந்துள்ள பெரிய பனிக்கட்டியாறாகும்.
  • மக்கள் சதுரம் (人民广场)
  • நான்யு சதுரம் (南湖广场)
  • சிங்ஜியாங்க் யுகுர் தன்னாட்சி மண்டல அருங்காட்சியகம் (新疆维吾尔自治区博物馆)
  • ஷுமுகௌ வெப்ப ஊற்றுகள்(水磨沟温泉) உரும்கியிலிருந்து வடகிழக்கே 5 கி.மீ தூரத்தில் உள்ளது.
  • சிங்ஜியாங்க் பட்டுசாலை அருங்காட்சியகம் (新疆丝绸之路博物馆) [2] பரணிடப்பட்டது 2009-09-25 at the வந்தவழி இயந்திரம்
  • எர்டாகியோ சந்தை (二道桥市场) உள்ளூர் பொருட்களை சிறுபான்மையினர் விற்கும் சந்தை. கடைக்காரர்கள் உள்ளூர் உடையில் விற்பது சிறப்பானது. சிலநேரங்களில் பொருள் விற்காவிட்டாலும் பயணிகளுடன் நடனம் ஆடி மகிழ்வர்.[5]

கல்வி

[தொகு]

உரும்கியில் சிங்ஜியாங்க் பல்கலைக்கழகம்,சிங்ஜியாங்க் சாதரண பல்கலைக்கழகம், சிங்ஜியாங்க் வேளாண் பல்கலைக்கழகம், சிங்ஜியாங்க் மருத்துவ பல்கலைக்கழகம் மற்றும் பல கல்விக்கூடங்கள் உள்ளன.

போக்குவரத்து

[தொகு]

வான்வழி

[தொகு]

உரும்கி திவோபு பன்னாட்டு விமானநிலையம் சீனாவிலுள்ள ஐந்து பெரிய விமானநிலையங்களில் ஒன்றாகும்.சைனா சதர்ன் ஏயர்லைன்ஸ் எனப்படும் விமானசேவையின் மையமாக விளங்குகிறது.

தொடருந்து

[தொகு]
  • தொடருந்துப்பாதை ஒன்று உரும்கியை தென்வடக்கிலுள்ள காஷ்கருடன் இணைக்கிறது.
  • தவிர கசக்ஸ்தான் வழியாக செல்லும் பிஜிங்-அல்மாடி தொடருந்துப்பாதையில் உரும்கி அமைந்துள்ளது.

சாலைகள்

[தொகு]

செல்லும் சாலைகள்:

  • சீன தேசிய நெடுஞ்சாலை 216
  • சீன தேசிய நெடுஞ்சாலை312
  • சீன தேசிய நெடுஞ்சாலை314.

ஊடகம்

[தொகு]

சிங்ஜியாங்க் நெட்வொர்கிங் டிரான்ஸ்மிஷன் லிமி. என்ற நிறுவனம் உரும்கி மக்கள் ஒலிபரப்பு நிலையம் மற்றும் சிங்ஜியாங்க் மக்கள் ஒலிபரப்பு நிலையம் என இரு நிலையங்களை நிர்வகித்து வருகிறது. இந்நிலையங்களில் மந்தாரின்,உய்குர்,கசக்,மங்கோலியன்,உருசியன் மற்றும் கிர்கிஸ் மொழிகளில் ஒலிபரப்பு செய்துவருகிறது.

உரும்கியிலுள்ள சிங்ஜியாங்க் தொலைக்காட்சி நிலையம் (XJTV) சிங்ஜியாங்க் மாநிலத்திலுள்ள பெரிய காணொளிபரப்பு நிலையமாகும். தவிர நகரத்திற்கான உள்ளூர் தொலைக்காட்சி நிலையம் உரும்கி தொலைகாட்சி நிலையம் (UTV)(乌鲁木齐电视台) ஆகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "சீனத் தமிழ் வானொலி". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2009-07-15.
  2. Online Encyclopædia Britannica
  3. "乌鲁木齐人均可支配收入增长居西部十省第8位". Archived from the original on 2012-04-26.
  4. 17th Urumqi Trade Fair opens "17th Urumqi Trade Fair opens - CCTV International". CCTV.com. ((cite web)): Check |url= value (help)
  5. "Urumqi Attractions".

வெளியிணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Urumqi
என்பதில் ஊடகங்கள் உள்ளன.



{{bottomLinkPreText}} {{bottomLinkText}}
உருமுச்சி
Listen to this article

This browser is not supported by Wikiwand :(
Wikiwand requires a browser with modern capabilities in order to provide you with the best reading experience.
Please download and use one of the following browsers:

This article was just edited, click to reload
This article has been deleted on Wikipedia (Why?)

Back to homepage

Please click Add in the dialog above
Please click Allow in the top-left corner,
then click Install Now in the dialog
Please click Open in the download dialog,
then click Install
Please click the "Downloads" icon in the Safari toolbar, open the first download in the list,
then click Install
{{::$root.activation.text}}

Install Wikiwand

Install on Chrome Install on Firefox
Don't forget to rate us

Tell your friends about Wikiwand!

Gmail Facebook Twitter Link

Enjoying Wikiwand?

Tell your friends and spread the love:
Share on Gmail Share on Facebook Share on Twitter Share on Buffer

Our magic isn't perfect

You can help our automatic cover photo selection by reporting an unsuitable photo.

This photo is visually disturbing This photo is not a good choice

Thank you for helping!


Your input will affect cover photo selection, along with input from other users.

X

Get ready for Wikiwand 2.0 🎉! the new version arrives on September 1st! Don't want to wait?