இரிமாவ் தீவு
புவியியல் | |
---|---|
அமைவிடம் | பினாங்கு |
ஆள்கூறுகள் | 05°14′51″N 100°16′21″E / 5.24750°N 100.27250°E |
தீவுக்கூட்டம் | தீபகற்ப மலேசியா |
அருகிலுள்ள நீர்ப்பகுதி | மலாக்கா நீரிணை |
நிர்வாகம் | |
பினாங்கு மாநிலம் |
ரீமாவ் தீவு (மலாய்: Pulau Rimau; ஆங்கிலம்:Rimau Island) என்பது மலேசியா, பினாங்கு மாநிலத்தில் உள்ள பினாங்கு தீவின் தெற்கு கடற்கரையில் அமைந்துள்ள ஒரு தீவு ஆகும்.
பினாங்கு தீவின் தென்கிழக்கு முனையில் இருந்து ஏறக்குறைய 0.832 கி.மீ (0.517 மைல்) தொலைவில் ரீமாவ் தீவு அமைந்துள்ளது. மக்கள்தொகை இல்லாத இத்தீவில் தற்போது கலங்கரை விளக்கம் செயல்படுகிறது. இந்தக் கலங்கரை விளக்கம் 1885-ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது.[1][2]
இந்தக் கலங்கரை விளக்கம், விளக்கு மற்றும் காட்சிக் கூடத்துடன் கூடிய 17 மீ (56 அடி) உருளை வடிவ வார்ப்பிரும்பு கோபுரமும், காப்பாளருக்கான ஒரு மாடி வீடும் கொண்டு, தெற்கில் இருந்து பினாங்கு நீரிணைக்குள் நுழையும் கப்பல்களுக்கு கலங்கரை விளக்கமாகச் செயல்படுகிறது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Amiruddin, A. r. "Living the lighthouse life - Views | The Star Online". பார்க்கப்பட்ட நாள் 2017-08-07.
- ↑ 2.0 2.1 "Guardian angels of ships" (in en). NST Online. 2017-08-06. https://www.nst.com.my/lifestyle/sunday-vibes/2017/08/264675/guardian-angels-ships.
பினாங்கு புவியியல் | |
---|---|
தீவுகள் |
|
கடல்கள் | |
மலைகள் | |
ஆறுகள் |
|
Text is available under the CC BY-SA 4.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.