For faster navigation, this Iframe is preloading the Wikiwand page for இண்டியம்(III) ஐதராக்சைடு.

இண்டியம்(III) ஐதராக்சைடு

இண்டியம்(III) ஐதராக்சைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
இண்டியம்(III) ஐதராக்சைடு
வேறு பெயர்கள்
இண்டியம் ஐதராக்சைடு , இண்டியம் டிரை ஐதராக்சைடு
இனங்காட்டிகள்
20661-21-6
EC number 243-947-7
InChI
  • InChI=1S/In.3H2O/h;3*1H2/q+3;;;/p-3
    Key: IGUXCTSQIGAGSV-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 88636
  • [OH-].[OH-].[OH-].[In+3]
பண்புகள்
In(OH)3
வாய்ப்பாட்டு எடை 165.8404 கி/மோல்
தோற்றம் வெண்மை
அடர்த்தி 4.38 கி/செ.மீ3
உருகுநிலை 150 °C (302 °F; 423 K) (சிதையும்)
கரையாது
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.725
கட்டமைப்பு
படிக அமைப்பு கனசதுரம்
புறவெளித் தொகுதி Im3
ஒருங்கிணைவு
வடிவியல்
எண் முகம்
தீங்குகள்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

இண்டியம்(III) ஐதராக்சைடு (Indium(III) hydroxide) என்பது In(OH)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இதன் பிரதான பயன்பாடு இண்டியம்(III) ஆக்சைடு (In2O3) தயாரிக்க உதவும் ஒரு முன்னோடிச் சேர்மமாக இருப்பதுதேயாகும். தட்டையான கதவு பகுதிகளின் உட்கூறுகள் போன்றவற்றை தயாரிக்கும் தொழிற்சாலைகளில் இண்டியம் ஐதராக்சைடு பயன்படுகிறது. இது சில நேரங்களில் அரிய கனிமமான தாலிண்டைட்டு என்ற வடிவில் இயற்கையில் காணப்படுகிறது . இண்டியம் ஐதராக்சைடு , இண்டியம் டிரை ஐதராக்சைடு என்ற பெயர்களாலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. படிகமாகவும் தூளாகவும் இச்சேர்மம் கிடைக்கிறது. தண்ணீரில் இண்டியம்(III) ஐதராக்சைடு கரையாது ஆனால் கனிம அமிலங்களில் கரையும். 150 பாகை செல்சியசு அல்லது 302 பாகை பாரன்கீட்டு வெப்பநிலையில் இது சிதைவடையும்.

கட்டமைப்பு

[தொகு]

Im3 என்ற இடக்குழுவுடன் கனசதுரக் கட்டமைப்பில் உருக்குலைந்த இரேனியம் டிரையாக்சைடு வடிவத்தில் இண்டியம் (III) ஐதராக்சைடு காணப்படுகிறது[1][2].

தயாரிப்பு

[தொகு]

இண்டியம் நைட்ரேட்டு (In (NO 3 ) 3 அல்லது இண்டியம் டிரைகுளோரைடு (InCl 3) போன்ற In3+ உப்புகளின் ஒரு கரைசலை நடுநிலையாக்கும்போது நீண்ட நேரத்திற்குப் பின்னர் வெள்ளை நிறத்தில் வீழ்படிவாக இண்டியம் (III) ஐதராக்சைடு உருவாகிறது[3][4]. புதியதாக தயாரிக்கப்பட்ட In(OH)3 சேர்மத்தின் வெப்பச் சிதைவு நீரேற்றை கனசதுர In(OH)3 ஆக மாற்றும் முதல் படிநிலை மாற்றத்தை காட்டுகிறது. இண்டியம் ஐதராக்சைடு வீழ்படிவாக மாறுவது துத்தநாக பிளெண்ட்டு தாதுவிலிருந்து இண்டியம் தனிமத்தை பிரித்தெடுக்கும் செயல்முறையாகும்ref name="Sato2005"/>. இண்டியம் தனிமக் கண்டுபிடிப்பாளர்களான ரீச் மற்றும் ரிக்டர் ஆகியோரால் இச்செயல் முறை கண்டுபிடிக்கப்பட்டது[5].

காலியம்(III) ஐதராக்சைடு மற்றும் அலுமினியம் ஐதராக்சைடு சேர்மங்கள் போல இண்டியம்(III) ஐதராக்சைடும் ஓர் ஈரியல்பு நிலை சேர்மமாகும். ஆனால் காலியம்(III) ஐதராக்சைடை விட குறைந்த அமிலத்தன்மையை இது பெற்றுள்ளது[4]. அதேபோல அமிலத்தில் கரைவதை விட காரத்தில் அதிகமான கரைதிறனையும் பெற்றுள்ளது[6]. மேலும் இந்த ஐதராக்சைடு அனைத்து நோக்கங்களுக்கும் தேவைகளுக்குமான ஓர் அடிப்படை ஐதராக்சைடாகக் கருதப்படுகிறது[7]. வலிமை மிக்க காரத்தில் இண்டியம்(III) ஐதராக்சைடு கரைந்துள்ள கரைசல்கள் பெரும்பாலும் (OH) 4− அல்லது In(OH)4 (H2O) – அயனிகளைக் கொண்டிருக்கும். அசிட்டிக் அமிலம் அல்லது கார்பாக்சிலிக் அமிலங்களுடன் ஈடுபடும் வினையில் அடிப்படை அசிடேட்டு அல்லது கார்பாக்சிலேட்டு உப்பு உருவாக வாய்ப்புள்ளது. In(OH)(OOCCH3)2. சேர்மத்தை இதற்கு உதாரணமாகக் கூறலாம்[6].

10 மெகாபாசுக்கல் வளிமண்டல அழுத்தம் மற்றும் 250-400 பாகை செல்சியசு வெப்பநிலையில் இண்டியம்(III) ஐதராக்சைடு சேர்மம் இண்டியம் ஆக்சைடு ஐதராக்சைடாக ( InO(OH)) மாற்றப்படுகிறது. உருக்குலைந்த உரூட்டைல் கட்டமைப்பில் இது காணப்படுகிறது[4]. இண்டியம்(III) ஐதராக்சைடு சேர்மத்தின் சில மாதிரிகள் 34 கிகா பாசுக்கல் அழுத்தத்தில் அமுக்க நீக்கம் செய்யப்படும் போது சிதைவடைந்து சிறிதளவு இண்டியம் உலோகத்தை கொடுக்கிறது[8].

சீரொளி வெப்ப நீக்க வினையில் இண்டியம்(III) ஐதராக்சைடு சேர்மம் InOH என்ற இண்டியம்(I) ஐதராக்சைடை கொடுக்கிறது. இண்டியம்-ஆக்சிசன் பிணைப்புகளிடையே 201.7 பைக்கோமீட்டர் நீளமுள்ள பிணைப்புகளுடன் கூடிய ஒரு வளைந்த மூலக்கூறால் இண்டியம்(I) ஐதராக்சைடு ஆக்கப்பட்டுள்ளது[9].

மேற்கோள்கள்

[தொகு]
  1. Hydrothermal Investigation of the systems In2O3-H2O-Na2O and In2O3-D2O-Na2O. The crystal structure of rhombohedral In2O3 and In(OH)3, A Norlund Christensen, N.C. Broch, Acta Chemica Scandinavica 21 (1967) 1046-056
  2. Wells A.F. (1984) Structural Inorganic Chemistry 5th edition Oxford Science Publications பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-855370-6
  3. Sato, T. (2005). "Preparation and thermal decomposition of indium hydroxide". Journal of Thermal Analysis and Calorimetry 82 (3): 775–782. doi:10.1007/s10973-005-0963-4. பன்னாட்டுத் தர தொடர் எண்:1388-6150. 
  4. 4.0 4.1 4.2 Egon Wiberg, Arnold Frederick Holleman (2001) Inorganic Chemistry, Elsevier பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0123526515
  5. Advanced Inorganic Chemistry-Vol.-I,31st Edition, 2008, Krishna Prakashan Media, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788187224037
  6. 6.0 6.1 The Aqueous Chemistry of the Elements, George K. Schweitzer , Lester L. Pesterfield , Oxford University Press, 19 Dec 2009, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0195393354
  7. Anthony John Downs (1993). Chemistry of aluminium, gallium, indium, and thallium. Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7514-0103-X.
  8. Gurlo, Aleksander; Dzivenko, Dmytro; Andrade, Miria; Riedel, Ralf; Lauterbach, Stefan; Kleebe, Hans-Joachim (2010). "Pressure-Induced Decomposition of Indium Hydroxide". Journal of the American Chemical Society 132 (36): 12674–12678. doi:10.1021/ja104278p. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-7863. பப்மெட்:20731389. 
  9. Lakin, Nicholas M.; Varberg, Thomas D.; Brown, John M. (1997). "The Detection of Lines in the Microwave Spectrum of Indium Hydroxide, InOH, and Its Isotopomers". Journal of Molecular Spectroscopy 183 (1): 34–41. doi:10.1006/jmsp.1996.7237. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-2852. 
{{bottomLinkPreText}} {{bottomLinkText}}
இண்டியம்(III) ஐதராக்சைடு
Listen to this article

This browser is not supported by Wikiwand :(
Wikiwand requires a browser with modern capabilities in order to provide you with the best reading experience.
Please download and use one of the following browsers:

This article was just edited, click to reload
This article has been deleted on Wikipedia (Why?)

Back to homepage

Please click Add in the dialog above
Please click Allow in the top-left corner,
then click Install Now in the dialog
Please click Open in the download dialog,
then click Install
Please click the "Downloads" icon in the Safari toolbar, open the first download in the list,
then click Install
{{::$root.activation.text}}

Install Wikiwand

Install on Chrome Install on Firefox
Don't forget to rate us

Tell your friends about Wikiwand!

Gmail Facebook Twitter Link

Enjoying Wikiwand?

Tell your friends and spread the love:
Share on Gmail Share on Facebook Share on Twitter Share on Buffer

Our magic isn't perfect

You can help our automatic cover photo selection by reporting an unsuitable photo.

This photo is visually disturbing This photo is not a good choice

Thank you for helping!


Your input will affect cover photo selection, along with input from other users.

X

Get ready for Wikiwand 2.0 🎉! the new version arrives on September 1st! Don't want to wait?