For faster navigation, this Iframe is preloading the Wikiwand page for ஆல்பிரெட் ஆட்லர்.

ஆல்பிரெட் ஆட்லர்

ஆல்பிரட் ஆட்லர்
பிறப்பு(1870-02-07)7 பெப்ரவரி 1870
வியன்னா, ஆத்திரியா-அங்கேரி
இறப்பு28 மே 1937(1937-05-28) (அகவை 67)
அபர்டீன், இசுக்கொட்லாந்து
வாழிடம்ஆஸ்திரியா
தேசியம்ஆத்திரியர்
துறைஉளச்சிகிச்சை, மனநோய்
கல்வி கற்ற இடங்கள்வியன்னா பல்கலைக்கழகம்
அறியப்படுவதுதனிநபர் உளவியல்
தாழ்வு மனப்பான்மை
துணைவர்ரைசா

ஆல்பிரட் ஆட்லர் (Alfred W. Adler[1] 7 பெப்ரவரி 1870 – 28 மே 1937) என்பவர் ஆஸ்திரியாவைச் சேர்ந்த ஒரு உளச்சிகிச்சை மருத்துவர்,[2][3] உளவியல் ஆய்வாளர் மேலும் தனிநபர் உளவியலுக்காக சிறப்பாக அறியப்படுகிறார். தனிநபர் உளவியல் என்ற கல்விப்பிரிவின் நிறுவனரும் ஆவார். தாழ்வு மனப்பான்மை மனித ஆளுமையில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை வலியுறுத்திக் கூறினார். பொது உளவியலின் மீள்பார்வை என்ற நூலில் தனி மனிதனின் உளவியல் சமூகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று வலியுறுத்தியுள்ளார்.[4] தாழ்வுணர்ச்சியின் முக்கியத்துவத்திற்கு அவர் அளித்த அழுத்தம்,[3] தாழ்வு மனப்பான்மை, என்பது தனிமனித ஆளுமையைத் தீர்மானிப்பதில் மிக முக்கியமான ஒரு பங்கினை வகிக்கிறது என்பதை அங்கீகரிக்கச் செய்தது.[5] ஆல்பிரெட் ஆட்லர் மனிதர்களை தனித்தனி உறுப்புகளாக ஒவ்வொருவரையும் தனித்துவம் மிக்கவர்களாகக் கருதினார். அதனால் தான் இவருடைய உளவியல் தனிநபர் உளவியல் என பின்னர் அழைக்கப்பட்டது. (ஆர்க்லர் 1976).

ஆட்லர் தான் முதன்முதலில் தனிமனிதனை மறுசீரமைப்பு செய்தலில் சமூகக்கூற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியவர் ஆவார், மேலும் சமூகத்தில் மனநலத்தின் அவசியத்தை உணர்த்தியவர் ஆவார்,.[6] பொது உளவியல் மீள்பார்வை என்ற பெயரிலான ஆய்வு ஒன்று இருபதாம் நுாற்றாண்டில் அதிகம் மேற்கோள் சுட்டப்பட்ட உளவியலாளர்களில் ஆட்லர் 67 ஆம் இடத்தில் உள்ளதாகக் குறிப்பிடுகிறது.[7]

தொடக்க கால வாழ்க்கை

[தொகு]

ஆல்ஃபிரெட் ஆட்லர் ஆஸ்திரியாவில் வியன்னாவிற்கு அருகில் உள்ள ரூடோல்ஃப்சிம் என்ற இடத்தில் 1870 ஆம் ஆண்டு பெப்ரவரி 7 ஆம் நாள் பிறந்தார். அங்கேரியில் பிறந்த யூத தானிய வியாபாரி மற்றும் அவரது மனைவிக்குப் பிறந்த ஏழு குழந்தைகளில் இரண்டாவது குழந்தையாகப் பிறந்தவர் ஆட்லராவார்.[8][9] ஆல்பிரெட்டின் இளைய சகோதரன் ஆல்பிரெட்டுக்கு மூன்று வயதாக இருந்த போது அவனுக்கு அடுத்த படுக்கையில் இறந்தான்.[10] ஆல்ஃபிரெட் ஆட்லர் ரிக்கெட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததால் நான்கு வயது வரை நடக்க இயலாதவராக இருந்தார்.[11] ஆட்லர் ஒரு சுறுசுறுப்பான, எல்லோராலும் அறியப்பட்ட குழந்தையாகவும் மற்றும் ஒரு சராசரியான மாணவனாகவும் தனது மூத்த சகோதரன் சிக்மண்டுடன் போட்டியிடும் மனப்பான்மை கொண்டிருந்ததால் நன்கறியப்பட்டவராகவும் இருந்தார். குழந்தையாக இருந்த காலத்தில் நோய்வாய்ப்பட்ட நிலையில் இருந்ததால் வாழ்நாளில் மருத்துவராக வரவேண்டும் என்ற கனவுடன் இருந்த ஆல்ஃபிரெட் ஆட்லர் 1895 ஆம் ஆண்டில் வியன்னா பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டப்படிப்பை முடித்தார். பட்டப்படிப்பு முடித்த பின் கண் மருத்துவத்தில் தனது தொழிலைத் தொடங்கி பின்னர் பொது மருத்துவத்தில் தொடர்ந்தார்.[11]

தொழில் வாழ்க்கை

[தொகு]

ஆல்ஃபிரெட் ஆட்லர் பின்னர் தனது ஆர்வத்தை மனநோய் சிகிச்சையை நோக்கி திருப்பினார். 1902 ஆம் ஆண்டில் சிக்மண்ட் ஃபிராய்டு உளப்பகுப்பாய்வு கலந்துரையாடல் குழுவில் சேர ஆட்லருக்கு அழைப்பு விடுத்தார். இந்தக்குழு ஒவ்வொரு வாரமும் புதன் கிழமையன்று ஃபிராய்டின் இல்லத்தில் சந்தித்தனர். பின்னர், இந்தக் குழுவே பின்னர் வியன்னா பல்கலைக்கழகத்தில் உளப்பகுப்பாய்வு சமூகமாக மாறியது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு இந்த சமூகத்தின் தலைவராகப் பணியாற்றி விட்டு ஃபிராய்டின் கோட்பாடுகளில் ஏற்பட்ட கருத்து வேற்றுமையின் காரணமாக பகுதியாக விலகினார். உளப்பகுப்பாய்வின் வளர்ச்சியில் ஆட்லர் முக்கிய பங்கு வகித்திருந்த போதினும், தனது சொந்த சிந்தனைப் பள்ளியிலிருந்து தன்னை விலக்கிக் கொண்ட முதல் முக்கிய நபர்களில் ஒருவராகவும் இருந்தார். அவர் பிராய்டின் சக பணியாளராக இருந்தாரே தவிர, அவர் ஒருபோதும் பிரபல ஆஸ்திரிய மனநல மருத்துவரின் சீடராய் இருந்திருக்கவில்லை என்பதை விரைவாக சுட்டிக்காட்டினார்.[11]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Adler". Random House Webster's Unabridged Dictionary.
  2. Hoffman, E (1994). The Drive for Self: Alfred Adler and the Founding of Individual Psychology. Reading, MA: Addison-Wesley. pp. 41–91. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-201-63280-2.
  3. 3.0 3.1 Alfred Adler, Understanding Human Nature (1992) Chapter 6
  4. Hoffman, E (1994). The Drive for Self: Alfred Adler and the Founding of Individual Psychology. Reading, MA: Addison-Wesley. pp. 41–91. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-201-63280-2. ((cite book)): More than one of |ISBN= and |isbn= specified (help)
  5. Carlson, Neil R (2010). Psychology the science of behaviour.
  6. "my.access — University of Toronto Libraries Portal". பார்க்கப்பட்ட நாள் 2 October 2014.
  7. Haggbloom, Steven J.; Warnick, Renee; Warnick, Jason E.; Jones, Vinessa K.; Yarbrough, Gary L.; Russell, Tenea M.; Borecky, Chris M.; McGahhey, Reagan et al. (2002). "The 100 most eminent psychologists of the 20th century". Review of General Psychology 6 (2): 139–152. doi:10.1037/1089-2680.6.2.139. http://www.apa.org/monitor/julaug02/eminent.aspx. 
  8. "Alfred Adler Biography". Encyclopedia of World Biography. Archived from the original on 7 January 2010. பார்க்கப்பட்ட நாள் 10 February 2010.
  9. O.,, Prochaska, James. Systems of psychotherapy : a transtheoretical analysis. Norcross, John C., 1957- (Eighth ed.). Stamford, CT. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781133314516. இணையக் கணினி நூலக மைய எண் 851089001.((cite book)): CS1 maint: extra punctuation (link) CS1 maint: multiple names: authors list (link)
  10. Orgler, Hertha. Alfred Adler, the Man and His Work;. London: C. W. Daniel, 1939. 67. Print.
  11. 11.0 11.1 11.2 https://www.verywellmind.com/alfred-adler-2795502

வெளி இணைப்புகள்

[தொகு]
{{bottomLinkPreText}} {{bottomLinkText}}
ஆல்பிரெட் ஆட்லர்
Listen to this article

This browser is not supported by Wikiwand :(
Wikiwand requires a browser with modern capabilities in order to provide you with the best reading experience.
Please download and use one of the following browsers:

This article was just edited, click to reload
This article has been deleted on Wikipedia (Why?)

Back to homepage

Please click Add in the dialog above
Please click Allow in the top-left corner,
then click Install Now in the dialog
Please click Open in the download dialog,
then click Install
Please click the "Downloads" icon in the Safari toolbar, open the first download in the list,
then click Install
{{::$root.activation.text}}

Install Wikiwand

Install on Chrome Install on Firefox
Don't forget to rate us

Tell your friends about Wikiwand!

Gmail Facebook Twitter Link

Enjoying Wikiwand?

Tell your friends and spread the love:
Share on Gmail Share on Facebook Share on Twitter Share on Buffer

Our magic isn't perfect

You can help our automatic cover photo selection by reporting an unsuitable photo.

This photo is visually disturbing This photo is not a good choice

Thank you for helping!


Your input will affect cover photo selection, along with input from other users.

X

Get ready for Wikiwand 2.0 🎉! the new version arrives on September 1st! Don't want to wait?